தொடர்ந்து பாரபட்சமாக தான் செயல்படுவோம் என மீண்டும் நிரூபித்திருக்கிறார்கள் என்.டி.டி.வி செய்தி தொலைக்காட்சி நிறுவனத்தினர். இலங்கைத்தமிழர் விஷயத்திலும் சரி, தமிழகத்தைக் குறித்த எந்த விஷயமானாலும் சரி இருட்டடிப்பு செய்வதே வடக்கில் இருக்கும் ஊடகங்களுக்கு வழக்கமாகிப் போய் விட்டது.
அதே நேரத்தில் அரசியல் தலைவர்களின் நிகழ்வுகளாகட்டும்; பெரிய இடங்களின் திருமணமாகட்டும்; அதில் அவர்கள் காட்டும் அக்கறை இருக்கிறதே அப்பப்பா. சில வாரங்கள் முன்னர் நடந்து முடிந்த சூப்பர் ஸ்டாரின் மகள் திருமணத்தைக் கூட ஆஹா ஓஹோ என்று புகழ்ந்திருந்தார்கள். (அவர் மராத்திய இரத்தமாக இருப்பதாலோ என்னமோ?!!)
வழக்கமாக ஒன்றுமில்லாத விஷயங்களுக்கு எல்லாம் தேவையின்றி பிரேக்கிங் நியூஸ் என்று போடுபவர்கள் ஐ.பி.எல்-3 இறுதிப் போட்டியில் மும்பை இன்டியன்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி தோற்கடித்த போது அதனைச் செய்யவில்லை. பிற்பாடு ஆற அமர சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி வெற்றி பெற்றது என்று சொன்னார்களே தவிர மும்பை தோல்வியடைந்தது என்று செய்தியளிக்க முடியவில்லை அவர்களால்.
சாம்பியன்ஸ் லீக் போட்டிகள் நடக்கும் தற்சமயமும் இதே நிலை தான். நேற்று தெற்கு ஆஸ்திரேலியா அணியிடம் மும்பை இன்டியன்ஸ் அணி தோல்வியடைந்து சாம்பியன்ஸ் லீக்கில் இருந்து வெளியேறிய பின்னரும் மும்பையை வெட்கமின்றி மெச்சியிருக்கிறார்கள். BATTLING REDBACKS STUN MIGHTY MUMBAI INDIANS என்று பீத்தியிருக்கிறார்கள்.
இன்னும் எத்தனை காலம் தான் இப்படி ஏமாற்றுவார்களோ? என்.டி.டி.வி யின் அந்த செய்தியை இங்கே படிக்கலாம்.
9 comments:
ஆமாங்க சரிதான்.
நானும் பல முறை ஃபீல் பண்ணி இருக்கேன்.
NDTV is always doing this..they do all negative news about tamil nadu.simple exmaple is when they talk about dyanadihi, they say karunanidhi grandson..otha rahul enna thanthondiriya.. mairu solla venditha thane indira grand sonu.when ever something happening in tamilnadu , they do telecast negative part of it..simply they think that tamil nadu people are muttals..nathari pasanga
ஓ! மும்பை கோவிந்தாவா? 180 அடிச்சவுடன், கெலிச்சிடுவாங்கன்னு டிவி பொட்டிய அனைச்சுட்டு தூங்க போயிட்டேன். அட! ஸ்கோர்போர்ட பார்த்தா ஆச்சரியமா இருக்கு. நேத்து சச்சின் தனியா போராடியத பாக்கும் போது பாவமா இருந்தது. பரவாயில்லை.
//வழக்கமாக ஒன்றுமில்லாத விஷயங்களுக்கு எல்லாம் தேவையின்றி பிரேக்கிங் நியூஸ் என்று போடுபவர்கள் ஐ.பி.எல்-3 இறுதிப் போட்டியில் மும்பை இன்டியன்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி தோற்கடித்த போது அதனைச் செய்யவில்லை. பிற்பாடு ஆற அமர சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி வெற்றி பெற்றது என்று சொன்னார்களே தவிர மும்பை தோல்வியடைந்தது என்று செய்தியளிக்க முடியவில்லை அவர்களால்//
அவர்கள் மட்டுமே. மும்பை தோற்றவுடன் மைதானத்தில் யாருமே இல்லை. ஒரு விளையாட்டு உணர்வு கூட இல்லாதவர்களை என்ன சொல்ல?
இதை பற்றின என் பதிவு.
http://jeeno.blogspot.com/2010/04/blog-post_29.html
ஆங்கில ஊடகங்கள் அனைத்தும் நமக்கு எதிரிகள்.
சென்ற வருடம் நமக்கு உணர்த்தி இருக்கிறது ..
I too felt that. They have been doing this long ago itself. Tamilans are well known for their endurance but north indians are well known for their ignorance.
@ அன்பரசன்
தொடர் வருகைக்கு நன்றிங்க.
@ mvalarpirai
Yeah they are doing this for a very long time now.
@ சீனு
சச்சின் விளையாடி இருக்கவே வேண்டாம். தேவையில்லாமல் கேவலப்பட்டு நிற்கிறார். சுட்டிக்கு நன்றி
@ யூர்கன் க்ருகியர்
ரொம்பத்தான் பண்றாங்க வட இந்திய ஊடகங்கள் :(
@ MohamedBismillah
Rightly said
வேதனையான விஷயம்.
மும்பை இண்டியன்ஸ் அணியில் கணிசமான அளவு என்.டி.டி.வி பங்கு வாங்கியிருக்கிறதே. அது தான் காரணம்...
@ Chitra
@ அப்படித்தான் இருக்கு வட இந்திய ஊடகங்கள் செய்றது... என்ன பண்றது?!
@ Prasanna Rajan
ஓஹோ மும்பை இன்டியன்ஸ் கிட்ட பங்கு வேற இருக்கா... அப்போ அப்படித்தான் பேசுவாங்க... பேசட்டும் பேசட்டும்.
வர்ணனையாளர்கள் நேற்றைக்கு மும்பை இன்டியன்ஸ் அணி தொடரிலிருந்தே வெளியேற்றப்பட்டு விட்டது அப்படின்னாங்க. ஆனா இன்னும் இரண்டு ஆட்டங்கள் இருக்குது. கூட்டிக் கழிச்சிப் பாத்தா மும்பைக்கு 50-50 வாய்ப்புகள் இன்னும் இருக்கு.
Post a Comment