உணர்வுகளை எவர் தான் அறிவார் - ஒருவர்
உணர்வுகளை மற்றவர் புரிந்து கொண்டால்
உவகை கொள்ளுமே உலகம்
உணர்வுகள் ஏற்றுக்கொள்ளப் படுமோ - இல்லை
உதைத்துத் தள்ளப்படுமோ என்ற
உள்ளார்ந்த பீதி ஒருபுறம்!
உணர்வுகள் ஏற்றுக்கொள்ளப்படுதலால்
உயரவிருக்கும் - மன
உளைச்சல்கள் மறுபுறம் - என்பவற்றால்
உள்ளுக்குள் உறங்கும் உணர்வுகள் ஏராளம்!!
உணர்வுகளை உள்ளுக்குள் புதைத்து - உயிரிருந்தும்
உயிரற்ற சடலமாய் நீங்குகிறது மனித வாழ்க்கை.
உள்ளக்கிடக்கைகளை எவர் அறிவாரோ!
3 comments:
நல்ல கவிதை.
நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com
கவிதை நல்லாயிருக்கு
''...ஒருவர்உணர்வுகளை மற்றவர் புரிந்து கொண்டால்உவகை கொள்ளுமே உலகம்..''
உவகை கொள்ளும். No woorries.
Post a Comment