உலகம் தான் எத்தனை
விந்தையானது!!!
உலகம் நாடக மேடையாம்
நாடகமே உலகமாயிருப்பதாக
படுகிறது இன்று
உள்ளத்தின் ஆழத்திலிருந்து
உரைப்பவர் அரிதே
இன்று
உன்னதமான அன்பை
உதறித் தள்ளும்
உலகம் இன்று
உயிரின் விலை
அறியாதார்
உடலின் விலை
பேசி திரிகிறார் இன்று
உறவுகளை மதியாதார்
உரிமைகளை குறித்து
வினவுகிறார் இன்று
உலகம், சுற்றுவதாலோ
என்னமோ - மனிதர்
உள்ளொன்று வைத்து
புறமொன்று உரைக்கின்றனர் இன்று
உள்ளதைச் சொன்னால்
- இல்லை
உன் வாதம் பொய்
என்கின்றனர் இன்று
உணர்ச்சிகளுக்கு
விலையில்லை
விலைக்கு தான்
உணர்ச்சிகள் இன்று
உருவம் பெரிதாகிப்
போக
உண்மை சிறிதாகிப்
போனது இன்று
உள்ளார்ந்த நேசம்
வலிதல்ல
உலகார்ந்த வேஷம்
வலிது இன்று
உலகம் தான் எத்தனை
விந்தையானது - ஒருபுறம்
உயிர்கள் ஜெனிக்க
- மறுபுறம்
உயிர்கள் மரிக்க
- உயிரிருந்தும்
உடலளவில்
மனிதர் மரிக்க
உலகம் தான் எத்தனை
விந்தையானது!!!
No comments:
Post a Comment