அமெரிக்கால
செத்தாலும்
ஆப்பிரிக்கால
செத்தாலும்
அண்டார்டிக்கால
செத்தாலும்
ஆய்(ஐ)ரோப்பால
செத்தாலும்
பாலைவனத்திலயே
செத்தா கூட
பொணம் பொணம்
தான
அமெரிக்கால
செத்தாலும் பொணம் தான
அமிஞ்சக்கரைல
செத்தாலும் பொணம் தான
அமெரிக்கா பொணம்னு
சொல்லுவாங்களா - இல்ல
அமிஞ்சக்கரை
பொணம்னு தான் சொல்லுவாங்களா
அப்புறமென்ன
- நான்
அமெரிக்கால
இருக்கேன் - நான்
ஆய்(ஐ)ரோப்பால
இருக்கேன்னு
அசிங்கம் பிடிச்ச
போல பேச்சு;
அவசியமா இதெல்லாம்!
அகங்காரத்த
நான் எனும்
அகங்காரத்த
என்னைக்கு
அழிக்கிறியோ
அன்னைக்கு தான்
அகம் மகிழும்
அண்டமும் மகிழும்
ஆண்டவனும் மகிழுவான்
No comments:
Post a Comment