February 13, 2009

சச்சின், பெக்காம், ரியல் மேட்ரிட்

இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் மற்றும் லிட்டில் மாஸ்டர் என அறியப்படும் சச்சின் ரொமேஷ் டெண்டுல்கர்(இவருக்கு அறிமுகமே தேவையில்லை தான்... இருந்தாலும்) பல ஆட்டங்களில் ஆட்டமிழந்ததாக தவறாக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.சமீபத்திய இலங்கை தொடரிலும் கூட இரு முறை (மூன்று?) lbw முறையில் ஆட்டமிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.

lbw முறையில் ஆட்டமிழக்கும் பட்சத்தில் அதனை மூன்றாவது நடுவரிடம் மேல் முறையீடு செய்ய மட்டையாளருக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டுமென கிரிக்கெட் விமர்சகர்கள் பலர் வலியுறுத்தி வருகின்ற நிலையில், மூன்றாவது நடுவரிடம் முறையீடு செய்வதில் எனக்கு உடன்பாடில்லை, கள நடுவர்களின் தீர்ப்பே போதுமானது என சச்சின் நேற்று கூறியிருப்பது ஆச்சரியத்தைத் தான் ஏற்படுத்துகின்றது.( Hawk eye ஐ சச்சின் நம்பவில்லை போலும்)

அதோடு இந்திய அணி ஆடும் T20போட்டிகளில் தான் ஆடுவதில்லை என முடிவு செய்திருக்கிறார். T20 போட்டிகளில் தொடர்ந்து வெற்றிகள் குவித்து வரும் திடமான இந்திய அணியை நான் தொந்தரவு செய்ய விரும்பவில்லை எனவும் PTI க்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். இது சச்சினுக்கு டெஸ்ட் மற்றும் ஒரு தின ஆட்டங்களில் இன்னும் கவனம் செலுத்த உதவும் என நம்பலாம்.

இரு வருடங்களுக்கு முன் இல்லாத அளவிற்கு அதிக அளவில் கிரிக்கெட் போட்டிகள் தற்போது நடத்தப்பட்டு வருகின்றன. வீரர்களுக்கு போதுமான ஓய்வும் கிடைப்பதில்லை. இதுவும் கூட சச்சின் T20 ல் பங்கேற்காமலிருக்க காரணமாக இருக்கலாம்.

அதிக சர்வதேச போட்டிகள் காரணம் பிற நாட்டில் சுற்றுப்பயணம் செய்து ஆடுகையில் முன்பு போன்று அங்கு பயிற்சி ஆட்டங்கள் கூட இப்போது நடைபெறுவதில்லை.எதிர்வரும் நியூசிலாந்து சுற்றுப்பயணத்தின் போதும் பயிற்சி ஆட்டம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் பிற நாட்டின் களத்தை அவர்களின் காலசூழ்நிலையில் அறிந்து கொள்ளும் வாய்ப்பும் குறைவே. நியூசிலாந்தில் எப்போதும் திணறும் நம் வீரர்கள் இம்முறை சமாளிப்பார்களா?
------------------------------------------------------------இங்கிலாந்து கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் டேவிட் பெக்காம் ஸ்பெயினுக்கு எதிராக நேற்று முன் தினம் நடைபெற்ற போட்டியில் தனது 108 ஆவது ஆட்டத்தில் பங்கு பெற்றதன் மூலம்,பீட்டர் ஷில்டனுக்கு பின்னர் (பாபி மூருடன்)இங்கிலாந்து அணிக்காக அதிக ஆட்டங்களில் ஆடிய இரண்டாவது வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் ஆனால் சந்தோஷப்படும் அளவிற்கு ஆட்டத்தில் வெற்றி பெறவில்லை.2-0 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து ஸ்பெயினிடம் தோல்வியடைந்தது.
அந்த ஆட்டத்தில் ஆடிய வீரர்களில் பெக்காமைத் தவிர மற்றவர்கள் அனைவருமே இங்கிலாந்து கிளப்புகளுக்காக ஆடி வருகிறார்கள் என்பது அந்த ஆட்டத்தின் மற்றொரு சிறப்பு.
------------------------------------------------------------

தொடர்ந்து நான்காவது முறையாக உலகின் பணக்கார கால்பந்து அணியாக ஸ்பெயினின் ரியல் மேட்ரிட் கால்பந்து கிளப் அறிவிக்கப்பட்டுள்ளது. பெக்காம்,ஓவன் (இங்கிலாந்து) ரொனால்டோ(பிரேசில்), ஃபிகோ(போர்ச்சுக்கல்), நிஸ்டல்ராய்(நெதர்லாந்து), ரவுல் (ஸ்பெயின்) போன்ற நட்சத்திர வீரர்கள் விளையாடிய அணியாகும் ரியல் மேட்ரிட். இங்கிலாந்தின் மேன்செஸ்டர் யுனைட்டட் கிளப் இரண்டாவதாக இருக்கிறது.

நட்சத்திர வீரர்கள் சச்சின், பெக்காம் மற்றும் ரியல் மேட்ரிட் கிளப்பிற்கு வாழ்த்துக்கள்.

1 comment:

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com. ல் சேர்த்துள்ளோம்.

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

இதுவரை இந்த வலைப்பூக்கள் இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.

நட்புடன்
வலைபூக்கள் குழுவிநர்

Post a Comment

Related Posts with Thumbnails