February 05, 2009

சென்னை பேருந்து 50 காசு-கோயம்பேடு-நேர்மை

சென்ற வாரம் சென்னை சாந்தோமில் உள்ள செவிலியர் கழகத்திற்கு (Tamilnadu Nurses and Midwives Council) கனடாவின் தேவைக்காக மீண்டும் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படவே, பாரிமுனையிலிருந்து வேளச்சேரி செல்லும் பேருந்தில் ஏறினேன். நடத்துனரிடம் ஐந்து ரூபாய் கொடுத்து பயணச்சீட்டு பெற்றால் 3.50 போக மீதி கிடைக்கவில்லை. சார் டிக்கெட்டு காசு மீதி அப்படின்னு லேசா சவுண்டு விட்டா... என்னப்பா சில்லறையா தரது இல்லயா? எத்தன பேருக்குத் தான் நான் சில்லற குடுக்கிறது? என பேருந்திலிருக்கும் அத்தனை பேர் செவியிலும் விழுகின்ற படி ஒரு கத்தல் (500 ரூபா நோட்டா தந்து விட்டேன் என நான் எனது மனதிற்குள் நினைத்துக் கொண்டேன்) சலிப்புடன் ஒரு ரூபாயை எடுத்து இந்தா... என்கிறார். சார் 50 காசு குறயுது என்றால்... இருந்தா நீ குடு ஒரு ரூபா தரேன்கிறார்.
------------------------------------
போகும் போது தான் அப்படியென்றால், சாந்தோமிலிருந்து பாரிமுனைக்கு திரும்பி வருகையிலும் அதே 50 காசு விஷயம் தான். கேட்டால் அந்த நடத்துனரும் அதே பதிலளிக்கிறார் "50 காசு குறயுதா இருந்தா நீ குடு ஒரு ரூபா தரேன்" அப்போது தான் ஒரு விஷயம் விளங்கியது,அந்த காசுகள் நடத்துனரின் பாக்கெட்டிற்கென்று! 50 காசு சென்னையில் பிச்சைக்காசு ஆகி விட்டது என்றே தோன்றுகிறது.(பிச்சைக்காரன் கூட வாங்குவதில்லையோ என்னமோ?)50 காசு புழக்கம் இன்று வெகுவாக குறைந்து வருவதாகவும் தோன்றுகிறது. 25 காசை செல்லாக் காசு ஆக்கியது போன்று 50 காசையும் ஆக்குவார்களோ?
------------------------------------
செவிலியர் கவுன்சில் போனால் அங்கு இருந்த களேபரம் இன்னும் மனக்கஷ்டத்தை ஏற்படுத்தியது. 7 ஆண்டுகள் முன் மல்லுக்கு நின்ற அதே குறுகலான நடைபாதையுடைய பழைய அலுவலகம்;(50 பேர் நிற்பதுவே பெரிய விஷயம்) அதில் சான்றிதழ்களை பதிவு செய்ய வந்திருந்த மாணவிகள் கும்பலாக சான்றிதழ்களுக்கு கூட மதிப்பளிக்காமல் அவற்றை முட்டி முனங்கி கவுண்டரினுள் திணித்துக் கொண்டிருந்தார்கள். உள்ளிருந்து வரிசையில வாங்கனு பதிவாளர் சொல்றது யார் காதிலும் விழுந்ததாக தெரியவில்லை.

நானும் பொருத்துப் பொருத்துப் பார்த்து ஒரு சமயத்தில். என்ன எல்லாரும் படிச்சவங்க தான வரிசையில வரலாம்லனு சவுண்டு விட்டுப் பார்த்தேன்...ம்ஹூம் யாரும் கேட்டப்பாடில்லை.கவுண்டரினுள் சான்றிதழ்களுடன் பல கைகள் நுழையவே கடுப்பாகிய பதிவாளர் இருமுறை வெளியே வந்து வரிசையை சரிப்படுத்தி விட்டுச் சென்றார்.5 நிமிடமாகவில்லை மீண்டும் நெரிசல்.

அதனிடையில் 35வயது மதிக்கத்தக்க ஒரு பெண் வரிசையில் நில்லாமல் சான்றிதழை நீட்டினார்.ஏங்க இத்தன பேர் வரிசையில் நிற்கும் போது நீங்க மட்டும் என்ன என்று கேட்டுவிட்டேன்.அவ்வளவு தான் பெண்மணிக்கு கோபம் தலைக்கு ஏறி...நீ யாரு கேக்கிறதுக்கு;நீ டிப்ளமோ முடித்திருக்கிறாய் நீ பேசாத.நான் டிகிரி முடித்திருக்கிறேன்; இப்படித் தான் பண்ணுவேன் என என்னைக் குறித்து முழுதும் அறியாமலே கத்த ஆரம்பித்து விட்டார்.
பின்னர் தான் வந்தது எனக்கு கோபத்தின் உச்சம்; பதிலுக்கு நான் ஏங்க பட்டம் பதவியெல்லாம் முக்கியமில்ல, எப்படி இருக்கோம்ங்கிறது தான் முக்கியம்; வரிசையில வாங்கனு சொல்லவே... அருகிலிருந்த பிற மாணவிகளின் உறவினர்களும் என்னோடு சேர அம்மணி ஜகா வாங்கினார்.
------------------------------------
இன்று படித்தவர்களுக்கு தலைக்கனம் எப்படித்தான் வருகிறதோ என தெரியவில்லை.அதுவும் பிறரை முழுமையாக அறிந்து கொள்ளுமுன்பே அவரைக் குறித்தான அபிப்ராயங்களும் கூட முன்வைக்கப்படுவது இன்னும் வருத்தத்திற்குரிய விஷயம். நண்பர்களுள்,வீடுகளினுள் இதினிமத்தமே பிரச்சினைகள் தோன்றுகின்றன. அதைக் களைந்தால் வாழ்வு களிப்பு பெறும்.

"புறந்தூய்மை நீரானமையும் அகந்தூய்மை
வாய்மையால் காணப்படும்"
-----------------------------------------
சாந்தோமில் பணியை முடித்துவிட்டு பெங்களூரு செல்ல கோயம்பேட்டில் கர்நாடக மாநில விரைவுப் பேருந்து ராஜஹம்சாவிற்காக கவுண்டரில் 297 ரூபாய் டிக்கெட்டிற்கு ரூ.300 கொடுத்துவிட்டு சில்லறை கேட்டால் அங்கும் இல்லையாம் சில்லறை. என்ன கொடும சார் காலைல தமிழக பேருந்தில் தான் அப்படினா முன்பதிவு செய்யும் கர்நாடகா கவுண்டரிலுமா இப்படி என நொந்து கொண்டேன். (சில்லறை விஷயம் பெரிய விஷயம் தான் போல)
-----------------------------------
9 மணிக்கு கோயம்பேடு பேருந்து நிலையம் சேர்ந்தேன். இரவு 11:45 ற்கு தான் பயணம்.Internet Cafe ஏதும் இருக்கிறதா என பார்க்கலாமென கோயம்பேடு பேருந்து நிலைய நடைபாதையில் நடக்க ஆரம்பித்தேன்...பேருந்து நிலையம் முழுவதும் மூன்று முறை சுற்றி வந்து விட்டேன்; ஒன்றும் சிக்கவில்லை. சரி வெளியே சென்று தேடலாமென்றால் அங்கேயும் ஏதுமில்லை. இத்தனை பெரிய பேருந்து நிலையத்தில் ஒரு Internet Cafe கூடவா இல்லை என சலித்துக்கொண்டு ipod தான் கதியென காதில் மாட்டிக்கொண்டேன்.

கோயம்பேட்டில் Internet Cafe இருக்கிறதென்றால் தெரியப்படுத்துங்கள் நண்பர்களே.

9 comments:

கிறிச்சான் said...

என்ன கொடும அத்தான்???? சில்லற பசங்க!!!

Anonymous said...

25 paise is still valid in India. In many place, people wont accept it now.

யூர்கன் க்ருகியர் said...

ஒரு "கிங்க்ஸ் கோல்ட் பில்டர் " சிகரட் 4.50 .
அஞ்சு ரூபா கொடுத்தா ஐம்பது காசு பாக்கி தர மாட்டேன்கிறாங்க!

பத்து ரூபா கொடுத்து ரெண்டு சிகரட் வாங்கினா வொக்காளி.. அப்போவும் ஒரு ரூபா சில்லரை தர மாட்டேன்கிறான்!(ஒன்பது ரூபா நோட்டுக்கு எங்க போறது ?)

எட்வின் said...

//25 paise is still valid in India. In many place, people wont accept it now.// உண்மையே...

எட்வின் said...

//ஒன்பது ரூபா நோட்டுக்கு எங்க போறது ?// என்ன கொடும சார்?

Anonymous said...

இந்த சில்லறை விஷயத்தை எப்பதான் விடுவிங்க?
என்னவோ இந்த பணம் தான் உங்களை வாழவைக்கப் போகுற மாதிரி,
பேருந்தில் ஏறும் எல்லோருக்கும் 50 காசு தரணும்னா கண்டக்டர் அச்சு தான் அடிக்கணும்.
நீங்க ஒரு ஆள் சில்லறையா எடுத்து வந்து குடுக்க வேண்டியது தானே?

மந்திரன் said...

//50 காசு தரணும்னா கண்டக்டர் அச்சு தான் அடிக்கணும்.//
அப்படி எல்லாம் விட்டு விட முடியாது .
50 காசை திருடுனா குற்றமா ? இல்லை
50பேரு 50 காசை 50 தடவை திருடுனா குற்றமா ? இல்லையா ? குற்றம் ...
உங்களுக்கு(அனானி) எல்லாம் அந்நியன் ஸ்டைல் தான் தண்டனை கொடுக்கணும் ..
அனானி -- கும்பி பாகம் ஓகே வா ?

எட்வின் said...

//என்னவோ இந்த பணம் தான் உங்களை வாழவைக்கப் போகுற மாதிரி//
அனானி நண்பரே...
உங்க பேர போட்டே கேள்விய கேக்கலாமே.
அந்த 50 காசு தான் எங்கள வாழ வைக்கிறது என்று நீங்களாகவே தப்பு கணக்கு போட்டால் அதற்கு நான் ஒன்றும் செய்யவியலாது. நம்மிடமே இப்படியென்றால் சாதாரண மக்களிடம் எப்படி ஏய்த்துப் பிளைப்பார்கள் என்ற ஆதங்கத்தில் தான் இது எழுதப்பட்டது. சென்னை மாநகரில் பல நடத்துனர்கள் இருக்கையை விட்டு நகருவதேயில்லை. அவர்களிடம் போனால் மீதியை வாங்குவது எத்தனை கஷ்டமென்பது இரண்டு வருடம் சென்னையில் வசித்த எனக்கு நன்றாகவே தெரியும்.
உங்களால உங்க பெயரக் கூட சொல்ல தைரியமில்ல. உங்களுக்கெல்லாம் எங்கள பாத்தா கேலியா இருக்குதாக்கும்.

Umapathy said...

சில்லறை தட்டுபாடு மனதில் இருக்கிறது

மாநிலத்தில் இல்லை

Post a Comment

Related Posts with Thumbnails