பாகிஸ்தான் வீரர்கள் இந்தியாவில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளில் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் ஆஸ்திரேலியாவின் மைக்கேல் கிளார்க்,மிட்ச்செல் ஜான்சன் உள்ளிட்ட சில வீரர்களும் IPL போட்டிகளில் பங்கெடுக்க போவதில்லை என தாமாகவே அறிவித்திருந்தார்கள். தற்பொழுது ஆஸ்திரேலிய அணியின் தலைவர் ரிக்கி பான்டிங்கும் ஐ.பி.எல் T20 போட்டிகளில் கலந்து கொள்ளப் போவதில்லை என அறிவித்திருக்கிறார்.
ஆஸ்திரேலிய தேசிய அணிக்கே தான் முக்கியத்துவம் அளிப்பதாகவும்,ஆஸ்திரேலிய அணியின் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகள் அட்டவணை மிக நெருக்கடியாக இருக்கின்ற படியால் இரு வாரங்கள் மட்டும்"கொல்கத்தா நைட் ரைடர்ஸ்"அணிக்காக விளையாடவியலாது எனவும் ஆஸ்திரேலியன் பத்திரிக்கையில் எழுதியுள்ளார்.
அவ்வாறு இரு வாரங்கள் IPL போட்டிகளில் ஆடும் பட்சத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு எனது முழுமையான பங்களிப்பை தரவியலாது எனவும் காரணம் கூறி விலகியுள்ளார்.மேலும் 20-20ஆட்டத்திற்கு முழுமையான உடற் தகுதி வேண்டுமெனவும்,IPL ல் இருந்து விலகுவதால் 20-20 உலகக் கோப்பை போட்டிகளுக்காக தன்னை முழுமையாக தயார் செய்யவியலும் எனவும் கூறியிருக்கிறார்.
என்றாலும்,2010 ன் ஐ.பி.எல் போட்டிகளில் கலந்து கொள்வேன் என உறுதியளித்துள்ளார் பான்டிங்க்.
------------------------------------
இது ஒருபுறமிருக்க மற்றொருபுறம்,IPLபோட்டிகளை சோனியுடன் இணைந்து ஒளிபரப்பி வந்த Big TVநிறுவனத்தினுடனான 31.16மில்லியன் டாலர்கள் ஒப்பந்தத்தை IPL இழந்துள்ளது.
சோனிக்கும்,விளம்பரதாரர்களுக்கும் அதோடு அனில் அம்பானியின் BigTV நிறுவனத்திற்கும் இடையேயான கருத்து வேறுபாட்டால் இந்த நான்கு வருட ஒளிபரப்பு ஒப்பந்தம் கைவிடப்பட்டுள்ளது.
MMPL மற்றும் Airtel டிஜிட்டல் டிவியுடன் செய்து கொண்ட ஐ.பி.எல்லின் ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அனில் அம்பானியின் Big TV நிறுவனம் இந்த ஒப்பந்தத்தை நிறுத்தியுள்ளது.
வீரர்கள் பிரச்சினையாலும்,ஒளிபரப்பு பிரச்சினைகளினாலும் IPLற்கு சற்று பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவே தெரிகிறது.
நன்றி: cricinfo
No comments:
Post a Comment