

இந்த தொடரின் முதல் ஆட்டத்தில் இரண்டாவதாக மட்டை வீசிய இந்திய அணி வெற்றி பெற்றிருந்தாலும் அத்தனை எளிதில் கிட்டிய வெற்றியல்லவே அது. இலங்கை அணி ஆட்டத்தை 48 ஆவது ஓவர் வரையிலும் கொண்டு சென்றனர்.
கடந்த ஒரு சில வருடங்களாகவே நிர்ணயிக்கப்பட்ட ஓட்டங்களை எடுப்பதில் (Chasing) தடுமாற்றம் காட்டி வரும் இந்திய அணி இன்று மீண்டும் சொதப்பியது. அதோடு அதீத நம்பிக்கையில் அடித்து ஆட முற்பட்ட சேவாக்,கம்பீர்,ரோஹித் ஷர்மா போன்றோரின் விக்கெட்டுகளும் இலங்கையின் வெற்றிக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தன எனலாம்.
பங்களாதேஷ், பாகிஸ்தான் அணிகளுடனான தொடர்களில் சிறப்பாக ஆடிய ஆல் ரவுண்டர் தில்ஷான் இந்தியாவிற்கு எதிரான இத்தொடரிலும் தொடர்ந்து சிறப்பாக ஆடியது குறித்து இலங்கை அணி சந்தோஷப்படப் பட்டுக் கொள்ளலாம். சங்கக்காராவும் அவரின் சிறப்பான ஆட்டத்தை இந்த தொடரில் வெளிப்படுத்தினார்.
கடைசி ஆட்டத்தில் தில்ஷானுடன் இணைந்து சங்கக்காரா குவித்த 143 ஓட்டங்கள் தான் வெற்றிக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தது.தில்ஷானின் சிறப்பான ஆட்டம் அவருக்கு எதிர்வரும் 20-20 ஆட்டத்திற்கான அணித்தலைவர் பதவியையும் பெற்றுத்தந்துள்ளது.

ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் வாசிம் அக்ரமின் அதிக விக்கெட்டுகளான 502 ஐ கடந்த முரளிதரனின் சாதனையும் மறக்கவியலாது, அதினிமித்தம் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய முதல் வீரர் என்ற பெருமையைப் பெ
ற்றுள்ளார்.

இந்திய அணியைப் பொருத்த வரையில் நடுவர்களின் தவறான முடிவினால் ஓட்டங்கள் குவிக்கவியலாத சச்சினைத் தவிர அனைவரும் தங்கள் பங்கை சரிவர செய்தனர் என்றே கூறலாம்.
இங்கிலாந்து தொடரைத் தொடர்ந்து இந்த தொடரிலும் யுவ்ராஜ் சிங் தொடர் நாயகன் விருது பெற்றுள்ளார்.
இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட ஓட்டங்களை எடுப்பதில் (Chasing) தங்களை சற்றே சரிப்படுத்துவார்களெனில் உலகின் தலைசிறந்த கிரிக்கெட் அணியாகும் நாள் வெகு தொலைவிலில்லை.
புகைப்படங்கள் நன்றி: cricinfo
No comments:
Post a Comment