வர்ணங்களே வாழ்க்கை
வானங்களே சொந்தம்
வசந்தங்களே
என்றும் நிற்கும்
வாசங்களே என்றும்
வீசும்
இதுவே தான்
வாழ்க்கை
இதுவன்றோ வேட்கை
இவையன்றி வேறேது
இதயமே வேண்டும்
கார்மேகங்களே
நிதம் சூழ
கண்ணீர்களே
எனை ஆழ
கதறல்களே பரிசாக
காலங்களெல்லாம்
காத்திருந்தேனே
வர்ணங்களே வாழ்க்கை
வானங்களே சொந்தம்
வசந்தங்களே
என்றும் நிற்கும்
வாசங்களே என்றும்
வீசும் என்று - காத்திருந்தேனே
No comments:
Post a Comment