September 18, 2026

ஆரிய மாயைக்கே சவால் விடும் திராவிட மாயை!

திமுகa வை தோற்றுவித்த அண்ணாதுரை அவர்கள் வர்ணாசிரமம், சாதி எதிர்ப்பு, ஆரிய ஆதிக்கம் குறித்து எழுதிய பல்வேறு கட்டுரைகளின் தொகுப்பு தான் ‘ஆரிய மாயை’ எனும் புத்தகம். 1947 ல் வெளிவந்து பின்னர் சென்னை மாகாண அரசால் தடையும் செய்யப்பட்டிருக்கிறது. 6 மாதங்கள் சிறையிலும் இருந்திருக்கிறார். 


அப்படியான தலைவரைக் கொண்ட திமுக இன்று செய்யும் செயல்கள் எல்லாம் ஆரிய மாயையை மிஞ்சும் திராவிட மாயையாகி இருப்பது எவ்வளவு பெரிய வீழ்ச்சி!! 


மேடைக்கு மேடை திருமண வீடுகளில் கூட மாற்றுக் கட்சியினரை, அவர்களுக்கு வாக்களித்த மக்களை  திமுகவினர் இழிவாக பேசுகின்றனர். 


மக்களின் வாக்குகளைப் பெற மக்கள் நலன் சார்ந்த விஷயங்களில் குறிப்பாக நீட் தேர்விற்கு எதிராக உண்ணாவிரதம் இருக்கலாமே! 


டெல்லியில் மாணவர்கள் உண்ணாவிரதம் இருந்து கல்வி மந்திரியையே பதவி துறக்க வைத்தனர். இவர்கள் இன்னும் மிசா… மிசா… என்று பழங்கதைகளைப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். 


2021 தேர்தலின் போது ஆட்சிக்கு வந்ததும் நீட் ஒழிக்கப்படும்; அதற்கான ரகசியம் எங்க கிட்ட இருக்குன்னு இப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் கூறினார்.. அப்படித்தான் அனிதாவையும் ஏமாற்றினர். பிள்ளை ஏமாற்றத்தில் தன்னையே மாய்த்து கொண்டது. 


ஆட்சியில் இருந்த வரை நீட் விலக்கிற்காக வழக்கு தொடர்ந்ததுக்கு அப்பால் வேறு எதும் செய்யவில்லை; ஒன்றிய அரசை எதிர்த்து களத்தில் போராடவில்லை சரி!! ஆனால், இப்போது ஆட்சியில் இல்லாத நிலையில் ஒன்றிய அரசிற்கு எதிராக போராட்டம் நடத்தத் தயங்குவது ஏன்! 


ஆணவக் கொலைகளுக்கு எதிராக பேசத் தயங்குவது ஏன்! ஆணவக் கொலைகளுக்கு எதிராக சட்டம் கொண்டு வருவது சிறந்தது என பேச மறுப்பது ஏன்!! 


ஆட்சிக்காக, அதிகாரத்திற்காக என்ன வேண்டுமானாலும் பேசுவோம்! சாதி பாசம் கொண்டு  இடைநிலைச் சாதிகளை ஆதரித்தும்; பட்டியலினத்தவரை கண்டும் காணாமலும் இருப்போம்! இப்படியாக உரிமைக் குரல் எழுப்புவோரை மிரட்டுவோம்!! இது தானே திராவிட மாடல்!! 


நேக்காக திராவிடம் திராவிடம் என்று பேசி விட்டு எப்படி இவ்வளவு கேவலமான அரசியல் செய்ய முடிகிறது இவர்களால்!! இவர்களின் சமூக நீதியெல்லாம் வெறும் பேச்சிலும், திரைக்கதைகளிலும், நடிப்பிலும் தான் போலும் 😔🚶🏽‍♂️


அண்ணா அவர்களின் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு எல்லாவற்றையும் காற்றில் பறக்கவிட்டதால் தான் இன்று ஆட்சியை இழந்திருக்கிறார்கள் என்பதைக் கூட அவர்கள் உணர மறுப்பது தான் வேடிக்கை 🤭


———

புத்தகம் - ஆரிய மாயை ॥ எழுத்தாளர் - பேரறிஞர் அண்ணா । பதிப்பாளர்- கருஞ்சட்டைப் பதிப்பகம் । பக்கங்கள் 85

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails