April 04, 2009

அமெரிக்கால அருவா!இந்தியால தோட்டா!

இல்ல... இல்ல.. அமெரிக்கால தோட்டா இந்தியால அருவா,ரைமிங்கா இருக்கட்டுமேனு தான் தலையங்கத்த மாத்திப் போட்டேன்.
அமெரிக்காவில் தொடர்ந்து துப்பாக்கி தோட்டாக்களுக்கு மடிந்து வரும் உயிர்கள் கவலை தருவதாக இருக்கின்றன.நேற்றும் (3.4.2009) நியூயார்க் பிங்காம்டன் பகுதியின் சமூக மையம் ஒன்றில் புதிய அமெரிக்க குடியேறிகள்(அந்த குடி அல்ல! இது Immigrants) 13 பேரை சுட்டுக் கொன்று தன்னைத் தானே சுட்டு கொண்டு தற்கொலையும் செய்து கொண்டிருக்கிறான் ஒருவன்;அதுவும் பகலில்.

கடந்த ஒரு மாதத்தில் அமெரிக்காவில் மக்கள் கூட்டத்தை குறி வைத்து நிகழ்ந்திருக்கும் ஐந்தாவது துப்பாக்கிச் சூடு சம்பவம் இது என msnbc செய்தி தெரிவிக்கிறது.


சம்பவம் நிகழ்ந்த மையத்தில் அமெரிக்கர்கள் அல்லாத பிற நாட்டை சார்ந்தவர்கள் அமெரிக்க குடியேற்ற உரிமையை பெறுவதற்கான வகுப்புகள் நடந்து வந்திருக்கின்றன.

மார்ச் 29 அன்றும் கலிஃபோர்னியாவில் இந்தியர் ஒருவர் குடும்பப் பிரச்சினைகளால் தனது குடும்பத்தின் ஆறு பேரையும் தோட்டாவினால் கொன்று இறுதியாக தன்னையும் சுட்டிருக்கிறார்.

அமெரிக்காவில் இவ்வாறு தோட்டாவினால் அநியாயமாக உயிர்கள் மடிகின்றது என்றால் நம் ஊர்களும் இது போன்ற கொலைகளுக்கு விலக்கல்ல.

அங்கு தோட்டா என்றால் இங்கு அரிவாள் பேசுகிறது.அவ்வளவு தான் வித்தியாசம். அமெரிக்க திரைப்படங்களில் துப்பாக்கித் தோட்டாக்கள் பாயாத திரைக்கதைகளே இல்லை எனலாம்.அது போன்று இந்திய திரைப்படங்களில் அரிவாள் ஆக்கிரமிப்பு(தற்போது சில படங்களில் தோட்டாக்களும் வந்து விட்டன)

இவையும் ஒருவரை சினிமாவில் வருவது போன்ற அக்கிரமங்கள் செய்யத் தூண்டுகிறது என்றால் மிகையல்ல.

இது போன்ற கொலைகளை செய்யத் துணிபவர்கள்,சமுதாயத்தில் அல்லது குடும்பத்தில் ஏதேனும் ஒரு வழியில் புறக்கணிக்கப்பட்டவராக இருக்கவே சாத்தியம்.

இல்லையென்றால் தான் எதிர்பார்த்தது ஏதும் நிகழாமல் ஏமாற்றமடைந்தவராக இருக்க வேண்டும்.குடும்பங்களில்,நண்பர் வட்டாரங்களில் சரியான முக்கியத்துவம் கொடுக்கப்படாததும் காரணமாக இருக்கலாம்.

இவைகளினால் மன அழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள் அதன் விளைவாக அவர்களின் செயல்பாடுகளில் மாற்றங்கள் ஏற்படுகின்றன.விரக்தி நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்;அது அவர்களை கொலை செய்யவும் தூண்டுகிறது;அதோடு இவர்கள் தங்கள் வாழ்க்கையையும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.

இவர்களைப் போன்றோர் எந்த நேரத்தில் என்ன மனநிலையில் இருப்பார்கள் என ஊகிப்பதே கடினம் என மனோதத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள்(Schizophrenia என்பது இதில் ஒருவகை மனநோய்)
(சென்னை,கீழ்பாக்கம் மனநிலை மருத்துவமனையில் இது போன்ற தவறிழைத்து அனுமதிக்கப்பட்டிருக்கிறவர்களை குறித்து படிக்கும் வாய்ப்பு 2001 ல் கிடைத்தது)

பெரும்பாலும் குடும்பங்களில் காணப்படும் சிறிய மன சங்கடங்களால் ஆரம்பிக்கின்ற பிரச்சினைகளே பிற்காலத்தில் இது போன்ற பெரும் பாதிப்புகளுக்கும் காரணமாகலாம்.

பூவோடு சேர்ந்த நாரும் மணக்கும் என்ற சொல்லின் படி ஒரு நபர் கொண்டிருக்கும் நட்பு வட்டாரமும் அவர்கள் செயல்பாடுகளைத் தீர்மானிக்கின்றன என்பதும் மறுக்க முடியாத உண்மை.

எனவே நமது குடும்பங்களிலும்,நட்பு வட்டாரங்களிலும் காணப்படும் சின்ன சின்ன பிரச்சினைகளுக்கு செவி மடுத்து அவற்றை முளையிலேயே கிள்ளி எறிவோமென்றால் நமது சமூகத்தையும் நமது குழந்தைகளையும் ஆரோக்கியமானதாக நாம் கொள்ள முடியும்.

இல்லையென்றால் இது போன்று கொல்லப்படுதலையும் கொல்லுபவர்களையும் நாமும் காண நேரிடும்.

April 03, 2009

இந்திய பிரதமரை புகழ்ந்த அமெரிக்க அதிபர்

இங்கிலாந்து தலைநகரான லண்டனில் நேற்று நடந்து முடிந்த G20 நாடுகளின் கூட்டத்திற்கு பின்னர் நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையில் அமெரிக்க அதிபர் ஒபாமா இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கை வெகுவாக பாராட்டினார்.

சிங் அவர்கள் பண்பில் சிறந்தவர் என்றும்,இந்தியாவை சிறப்பாக வழிநடத்திச் செல்பவர் எனவும் கூறினார்.அதோடு மன்மோகன் சிங் அவர்கள் பிரதமராக பொறுப்பேற்கும் முன்னரே பல பதவிகளில் இந்தியாவின் பொருளாதார முன்னேற்றத்திற்கு பெரும் பங்காற்றியிருக்கிறார் எனவும் புகழ்ந்திருக்கிறார்.

டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் பெண் நிருபர் கேட்ட
கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கையில் இவ்வாறு கூறினார்.அதற்கு பதிலாக அந்த பெண் நிருபர் "நன்றி எனவும்,மன்மோகன் சிங்கை பிரதமராக கொண்டதற்கு நான் பெருமை அடைகிறேன் என கூறவும்" நகைச்சுவையாக... அப்படியென்றால் பிரதமர் சிறப்பாக பணியாற்றுவதற்கு நீங்களும் காரணமோ... என ஒபாமா இழுக்கவே உலகின் பல நாடுகளிலிருந்து குழுமியிருந்த நிருபர்கள் அனைவரும் சிரித்து விட்டனர்.

ஒபாமா தொடர்ந்து... சிங் செய்த பணிகளுக்கு நீங்கள் மட்டுமல்ல "ஒவ்வொரு இந்தியரும் அவரைக் குறித்து பெருமைப் பட்டு கொள்ளலாம் என தெரிவித்தார்.

உலகின் பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் விஷயங்களில் அமெரிக்காவின் செல்வாக்கு சரிந்துள்ளதையும் மறைமுகமாக ஒப்புக்கொண்டார். மேலும் இந்தியா,சீனா,பிரேசில் ஆகிய நாடுகள் இன்றைய பொருளாதார வீழ்ச்சியிலும் தாக்குப்பிடித்து நிற்பதை பாராட்டவும் செய்தார்.

மின்னஞ்சலில் நண்பர் ஒருவர் அனுப்பிய பிரதமர் சிங்கின் சில சாதனைகள் இங்கே.(அதற்கென்று உங்களை காங்கிரசுக்கு ஓட்டு போட சொல்லவில்லை :)) இவரைப் பிரதமராகக் கொண்டதற்கு பெருமைப்பட்டு கொள்ள வேண்டியது தான்.
Qualification:

1950: Stood first in BA (Hons), Economics, Punjab University, Chandigarh ,

1952; Stood first in MA (Economics), Punjab University , Chandigarh ,

1954; Wright's Prize for distinguished performance at St John's College, Cambridge,

1955 and 1957; Wrenbury scholar, University of Cambridge ,

1957; DPhil ( Oxford ), DLitt (Honoris Causa); PhD thesis on India 's export competitiveness

OCCUPATION /Teaching Experience :

Professor (Senior lecturer, Economics, 1957-59;

Reader, Economics, 1959-63;

Professor, Economics, Punjab University , Chandigarh , 1963-65;

Professor,International Trade, Delhi School of Economics,University of Delhi,1969-71 ;

Honorary professor, Jawaharlal Nehru University ,New Delhi,1976 and Delhi School of Economics, University of Delhi ,1996 and Civil Servant

Working Experience/ POSITIONS :


1971-72: Economic advisor, ministry of foreign trade

1972-76: Chief economic advisor, ministry of finance

1976-80: Director, Reserve Bank of India ;

Director, Industrial Development Bank of India;

Alternate governor for India, Board of governors, Asian Development Bank;

Alternate governor for India, Board of governors, IBRD

April 1980: Secretary, ministry of finance (Department of economic affairs); Member, finance, Atomic Energy Commission; Member,finance, Space Commission

April 1980 - September 15, 1982 : Member-secretary, Planning Commission

1980-83: Chairman , India Committee of the Indo-Japan joint study committee

September 16, 1982 - January 14, 1985 : Governor, Reserve Bank of India .

1982-85: Alternate Governor for India , Board of governors, International Monetary Fund

1983-84: Member, economic advisory council to the Prime Minister

1985: President, Indian Economic Association

January 15, 1985 - July 31, 1987 : Deputy Chairman, Planning Commission

August 1, 1987 - November 10, 19! 90: Secretary-general and commissioner, south commission, Geneva

December 10, 1990 - March 14, 1991 : Advisor to the Prime Minister on economic affairs

March 15, 1991 - June 20, 1991 : Chairman, UGC

June 21, 1991 - May 15, 1996 : Union finance minister

October 1991: Elected to Rajya Sabha from Assam on Congress ticket

June 1995: Re-elected to Rajya Sabha


1996 onwards: Member, Consultative Committee for the ministry of finance

August 1, 1996 - December 4, 1997: Chairman, Parliamentary standing committee on commerce
March 21, 1998 onwards: Leader of the Opposition, Rajya Sabha

June 5, 1998 onwards: Member, committee on finance

August 13, 1998 onwards: Member, committee on rules

Aug 1998-2001: Member, committee of privileges 2000 onwards: Member, executive committee, Indian parliamentary group

June 2001: Re-elected to Rajya Sabha

Aug 2001 onwards: Member, general purposes committee

BOOKS: India 's Export Trends and Prospects for Self-Sustained Growth -Clarendon Press, Oxford University , 1964; also published a large number of articles in various economic journals.

OTHER ACCOMPLISHMENTS:

Adam Smith Prize, University of Cambridge , 1956

Padma Vibhushan, 1987

Euro money Award, Finance Minister of the Year, 1993;

Asia money Award, Finance Minister of the Year for Asia, 1993 and 1994

INTERNATIONAL ASSIGNMENTS:

1966: Economic Affairs Officer

1966-69: Chief, financing for trade section, UNCTAD

1972-74: Deputy for India in IMF Committee of Twenty on International Monetary Reform

1977-79: Indian delegation to Aid-India Consortium Meetings

1980-82: Indo-Soviet joint planning group meeting

1982: Indo-Soviet monitoring group meeting.

1993: Commonwealth Heads of Government Meeting Cyprus 1993: Human Rights World Conference, Vienna

Our Prime Minister seems to be the most qualified PM all over the world !!!

மேலும் தகவல்கள் இங்கே.

April 01, 2009

எண் ஏழின் சிறப்பு

ண் ஏழு எப்போதுமே வரலாற்றில் சிறப்பான இடம் பெற்றிருக்கிறது.
ழு நாட்களில் இந்த உலகை இறைவன் படைத்ததாக விவிலியம் கூறுவது தொடங்கி உலகின் ஏழு அதிசயங்கள் வரை எண் ஏழின் முக்கியத்துவம் பலவிதம்.
தி மனிதர்கள் என விவிலியம் கூறும் Adam+Eve இவர்கள் பெயர்களின் எழுத்துக்களைக் கூட்டினாலும் ஏழு தான் வருகிறது!!

லகின் புதிய ஏழு அதிசயங்கள் அறிவிக்கப்பட்ட தேதியும் 7.7.7 (2007) தான்.

ழு இடம் பெற்றிருக்கும் மேலும் சில விடயங்கள் இங்கே.

திங்கள் முதல் ஞாயிறு வரையிலான ஏழு நாட்கள் கொண்ட வாரத்தை தான் நாம் கடைபிடித்து வருகிறோம்.

பூகோளத்தில் காணப்படும் கண்டங்களும் ஏழே அவை 1.ஆசியா 2.ஆப்பிரிக்கா 3.தென் அமெரிக்கா 4.வட அமெரிக்கா 5.ஐரோப்பா 6.ஆஸ்திரேலியா 7.அண்டார்டிகா

லக அதிசயங்கள் மட்டுமன்றி தற்போது இந்தியாவின் அதிசயங்கள் என அறிவிக்கப்பட்டிருப்பதும் ஏழு தான்.

1.மதுரை மீனாட்சியம்மன் கோயில் 2.குஜராத்தின் தோலவிரா பகுதி 3.ராஜஸ்தானின் ஜைசல்மார் கோட்டை 4.மத்யபிரதேசத்தின் கஜீரஹோ 5.பீகாரின் நளந்தா பல்கலைக்கழகம் 6.டெல்லியின் செங்கோட்டை 7.புவனேஷ்வரின் சூர்ய கோவில்

அதோடு தாஜ்மஹாலை அதிசயங்களின் அதிசயம் என அறிவித்திருக்கிறார்கள்.

இந்தியாவில் 'ஏழு'க்கும் அதிகமான அதிசயங்கள் இருக்க உலக அதிசயங்களை போன்றே நம்மவர்களும் காப்பி அடித்திருப்பது ஏனோ!!

திருப்பதியில் இருக்கும் ஏழுமலை கோயிலும் ஏழினை குறிக்கிறது.

ரிகமபதனி என ஸ்வரங்களும் ஏழே ... "ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்"



சிலுவையில் இறுதியாக இயேசு கிறிஸ்து அருளியதாக விவிலியம் கூறுவதும் ஏழு வார்த்தைளே.

த்தாலியின் ரோம் நகரை சூழ்ந்து இருக்கும் குன்றுகளின் (hills) எண்ணிக்கையும் ஏழாக தான் இருக்கிறது. 1.Aventinus (Aventine) 2.Caelius (Caelian) 3.Capitolium (Capitoline) 4.Esquiliae (Esquiline) 5.Palatium (Palatine) 6.Quirinalis (Quirinal) 7.Viminalis (Viminal)

பிரபலமான ஜெர்மானிய கதை Snow white ல் இடம் பெற்றிருக்கும் குள்ளர்களின் எண்ணிக்கையும் ஏழே.

னக்கு தெரிந்தது இவ்வளவு தான்.ஏழின் சிறப்பை மேலும் அறிந்தவர்கள் தெரியப்படுத்துங்கள்.

ப்புறம் இந்த ஏழரை ஏழரை அப்படின்னா என்னங்க?

மூன்று வகை முத்தம்!


அறியாப்பருவ ஆனந்த முத்தம் - ஆரம்ப பள்ளியில்

விடலைப்பருவ விளை(னை)யாட்டு முத்தம்-உயர்நிலைப்பள்ளியில்





கல்லூரியில்...!!!

கீழே ஸ்க்ரோல் செய்யவும்

!!!!!


!!!!


!!!!


!!!

!!!

!!


!!


!



மன்னித்துக் கொள்ளுங்கள் நண்பரே...

இன்று என்ன தினமென்று நான் சொல்லி தான் தெரிய வேண்டுமா? உங்களை முட்டாளாக்க முயற்சிக்கவில்லை!

"எதிர்பார்ப்பு இல்லாதவரை ஏமாற்றமும் இல்லை".இவ்வரிகள் இந்த புகைப்பட பதிவிற்கு மட்டுமல்ல வாழ்க்கைக்கும் பொருந்தும்.

என்னையும் இப்பிடி மொக்கை போட வச்சிட்டாங்களே :( இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்.

புகைப்படங்களை அனுப்பிய நண்பர் கெர்ஷோமிற்கு நன்றி.

March 31, 2009

இயற்கையின் சீற்றத்தால் அவதிக்குள்ளாகியிருக்கும் வளைகுடா நாடுகள்

ஒரு வாரமாகவே வளைகுடா நாடுகளில் கடும் காற்றும் மழையுமாக காலநிலையில் பெரிதான மாற்றங்கள் இருந்து வருகின்றது. ஓமன் தலைநகர் மஸ்கட்டில் மழை இன்றும் இருந்தது.ஓமனில் இரு தினங்கள் பள்ளிகளுக்கு விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

துபாயிலும்,அபுதாபியிலும் 25.03 அன்று காற்றுடன் பனிக்கட்டி மழை பெய்தது.ஓமன் மற்றும் கத்தாரில் பரவலாக மணலுடன் கூடிய காற்று இருந்து வந்தது.

இரு தினங்கள் முன்பு துபாயில் மிக உயரமான புர்ஜ் துபாய் கோபுரத்தில் மின்னல் தாக்கிய சமயத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில இங்கே. மின்னஞ்சல் செய்த அண்ணன் 'Paul' அவர்களுக்கு நன்றி.

கடும் காற்றும்,இடியுடன் கூடிய மழையும் இரு தினங்களுக்கு பின்னர் மீண்டும் வரலாம் என gulfnews தெரிவிக்கிறது.









March 30, 2009

பலசரக்கு-சென்ற வாரம் நிகழ்ந்ததும் புரிந்ததும்

உலகம்

மெரிக்க அதிபர் ஒபாமாவின் உத்தரவின் பேரில் மேலும் 4000 வீரர்களை அமெரிக்கா ஆப்கனுக்கு அனுப்பவிருப்பது ஈராக்கை அடுத்து அமெரிக்கரின் கவனம் முழுமையாக ஆப்கன் மீது திரும்பியிருப்பதை காட்டுகிறது.

அதோடு ஆப்கனும்,பாகிஸ்தான்-ஆப்கன் எல்லைப்பகுதியும் தான் உலகின் மிக பயங்கரமான பகுதிகள் எனவும் முழங்கியிருக்கிறார் ஒபாமா.ஈராக்கிலேயே பேரழிவு ஆயதங்கள் ஒன்றையும் இவர்களால் கண்டெடுக்க முடியவில்லை.ஆப்கனில் என்ன செய்வார்கள் என பார்ப்போம்.

----------

அரசியல்

மிழகத்தில் பா.ம.க,அம்மாவுடன் இணைந்திருப்பது அத்தனை ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை.ஏறத்தாழ ஒரு வருடத்திற்கு முன்னரே தமிழகத்தில் ஆளுங்கட்சியுடன் கருத்து வேறுபாடு கொண்ட பா.ம.க மத்தியில் பதவிக்காக மட்டும் ஆதரவு அளித்து வந்ததும் இப்போது அதே பதவியை பெறும் வகையில் கூட்டணி மாறியிருப்பதும் அவர்களின் பதவி மோகத்தை மீண்டும் வெளிப்படுத்தியிருக்கிறது.

--------
ருணின் கருத்துக்களும் அதனைத் தொடர்ந்து நிகழ்த்தப்பட்ட சரண் நாடகங்களும், பேரணியும்,கலவரமும்,துப்பாக்கி சூடும் மேனகாவின் மத முலாம் பூசப்பட்ட கருத்துக்களும் வருந்தத்தக்கது.
--------

கிரிக்கெட்
ஸ்திரேலிய அணியை இறுதி டெஸ்ட் ஆட்டத்தில் தோற்கடித்த இளம் தென்னாப்பிரிக்க அணி அதனைத் தொடர்ந்து நடந்த இரு T20 ஆட்டத்திலும் வென்று T20 தொடரையும் வென்றது.

நியூசிலாந்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் ஆட்டத்தில் தோல்வி அடையும் தருவாயிலிருந்த இந்திய அணியை டிராவிட்டும் காம்பீரும் பொறுப்புடன் ஆடி சமன் செய்தது பாராட்டப்பட வேண்டிய விஷயம்.

நியூசிலாந்தின் புதியவர்கள் நன்கு மட்டை வீசினாலும் அனுபவம் இல்லாமையால் வெற்றிபெறும் வாய்ப்பை இழந்தனர்.மூன்று நாள்கள் தொடர்ச்சியாக ஆடுகளத்தில் இருப்பது அவர்களில் பலருக்கு புதியது.லக்ஷ்மணனின் சதமும் அருமை.

ங்கிலாந்தின் பீட்டர்சன் மே.இ.தீவின் சந்தர்பாலை,'அவர் அணிக்காக விளையாடுவது இல்லை,தனக்காக மட்டுமே விளையாடுகிறார்'என குறை கூறியது தேவையற்ற செயல்.பீட்டர்சன் அவரது ஆட்டத்தில் கவனம் செலுத்தினால் அதுவே பெரிய விஷயம்.இதனை இங்கிலாந்தின் தற்கால பயிற்சியாளர் ஆன்டி ஃப்ளவரும் கண்டித்திருக்கிறார்.

-------

ஃபார்முலா 1

1954 க்கு பின்னர் ஃபார்முலா 1 பந்தயத்தில் முதல்முறையாக களமிறங்கும் புதிய அணி ஒன்று முதல் இரண்டு இடங்களை பிடித்தது நேற்று(29.03) தான் முதல்முறை. யாரும் எதிர்பாராதவிதம் தங்களின் Mercedes எஞ்சின் மூலம் முதல் இரண்டு இடங்களில் வந்து அந்த சாதனையை Brawn அணி நிகழ்த்தியது.

பொருளாதார நெருக்கடிகளால் 'Honda' அணியினர் இந்த வருடத்தின் போட்டிகளிலிருந்து தங்களை விலக்கிக் கொண்டது 'Brawn' அணிக்கு சாதகமாகியிருக்கிறது. Brawn அணியைச் சார்ந்த பிரிட்டனின் ஜென்சன் பட்டன் மற்றும் பிரேசிலின் ரூபன் பேரிக்கலோ கடந்த ஆண்டில் ஹோண்டா அணியில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த வருடத்தின் முதல் போட்டியான நேற்றைய போட்டியில் கடந்த முறை இரண்டாவது இடம் பிடித்த ஃபெராரி அணி புள்ளி ஏதும் பெறாமல் ஏமாற்றமடைந்தது.

March 29, 2009

மதமென்னும் மாயவலையில் சிக்கியிருக்கும் மேனகாவும் மகனும்

பொதுவாக மதம் என்னும் சொல்லையே அதிகம் பயன்படுத்த விரும்பாதவன் நான்,(சமயம் என கூறுவது தான் வழக்கம்)எனினும் உத்திரப்பிரதேச தேர்தல் தொகுதியான பிலிபித்தில் வருண்காந்தியால் நிகழ்த்தப்பட்ட உரையினாலும் அதனைத் தொடர்ந்து நிகழ்ந்த சம்பவங்களினாலும் இச்சம்பவங்களுக்கு காரணமானவர்கள் மனதில் அவர்களின் சமய வழிபாடு,மதம் கோலோச்சியிருப்பதால் மதமென்று குறிப்பிட வேண்டிய கட்டாயம்.

ஒரு குறிப்பிட்ட சமயத்தைச் சார்ந்தவர்கள் தங்கள் சமயத்தை/சமயத்தவரை எதிர்க்கும் பட்சத்தில் அவர்களை தாக்குவோம் என முழக்கமிட்டுள்ளார் நேரு வம்சா வழியைச் சார்ந்த வருண்காந்தி.

இவ்வாறு கூறுவதால் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரின் ஓட்டைப் பெறுவது தான் நோக்கமாக இருந்திருக்க வேண்டுமென்றால்,வருண் தேர்தல் பிரச்சார கூட்டமொன்றில் முழங்கியிருக்கலாம்;அதுவும் இல்லை,அது அவர்களின் கட்சி கூட்டமென்கிறார்கள்.

கட்சியிலும் கட்சி மேலிடத்திலும் நல்ல பெயரை பெற வேண்டுமென்று அவ்வாறு முழங்கினாரா என்பதும் தெரியவில்லை.அவர் கூறிய கருத்து உண்மை என அறியப்பட்டால் அது 'அவரது தனிப்பட்ட கருத்து' என கட்சியும் அவரிடமிருந்து விலகி நிற்கிறது.

இளம் வயதிலேயே வருண் மத சாயம் கொண்டு முழங்கிய இக்கருத்துக்கள் அவரிடமிருந்து நல்ல அரசியலை எதிர்பார்க்கலாம் என்று எதிர்பார்த்த இளைஞர்களுக்கு ஏமாற்றமே.அதோடு இன்றைய இந்திய இளைய சமுதாயத்திற்கு ஒரு தவறான முன்னுதாரணமும் ஆகியிருக்கிறார்.

இத்தனைக்கும் அவர் லண்டனில் சட்டமும் பொருளாதாரமும் பயின்றவர்.

அக்கருத்துகள் அவரது சொந்த கருத்துகளா இல்லை கட்சியினரால் உந்தப்பட்டு உரைக்கப்பட்டவையா என்பது யாருக்கும் புலப்படாத ஒன்று.

----------
வருண் கூறிய கருத்துக்களை விட அவர் நேற்று சரணடைவதற்காக சென்ற இடத்தில் நடந்த நிகழ்வுகள் மேலும் வருந்தத்தக்கவை.அவரது ஆதரவாளர்களுடன் அவர் சென்ற பேரணியும் அதனைத் தொடர்ந்த கலவரங்களும் தடை உத்தரவு(144)அமல் படுத்துமளவிற்கு சென்றிருக்கிறது.அதன் பெயரில் புதிதாக வழக்கு ஒன்றும் அவர் மீது பதிவு செய்யப்பட்டிருக்கிறது

(சரணடைய சென்றவர் வாகனத்திற்குள் அமர்ந்து செல்லாமல் வாகனத்தின் மேல் அமர்ந்து ஊர்வலம் சென்று பிரச்சினை வலுக்க காரணமானது ஏனோ)

--------
வருண் ஆவேசப்பட்டு முழங்கி விட்டார் சரி, ஆனால் அவரது அன்னை திருமதி.மேனகாவும் அவருக்கு நிகராக பிரிவினையை தூண்ட முயற்சிப்பது தான் மற்றொரு கவலைக்குரிய விஷயம்.

ஒரு குறிப்பிட்ட சமயத்தைச் சார்ந்த காவலர் ஒருவர் தான் வருண் சரணடைய சென்ற போது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டிற்கு காரணம் என பேட்டியளித்திருக்கிறார் மேனகா.

இத்தனைக்கும் அந்த காவலர் அன்று பணியிலே இல்லை என மறுத்திருக்கிறார் பிலிபித் பகுதியின் காவல்துறை சூப்பிரண்ட்.

ஒரு காவலரையே காவலராக பார்க்க முடியாமல் அவரையும் ஒரு குறிப்பிட்ட சமயத்தைச் சார்ந்தவராக பார்ப்பது ஏனோ புரியவில்லை.

இவர்கள் கூறிய இக்கருத்துக்கள் இவர்களின் சொந்த கருத்துக்களா இல்லை மதமென்னும் மாய வலையில் சிக்கியமையால் தூண்டப்பட்டு தூவப்பட்ட விஷம கருத்துக்களா என்பது அவர்கள் மனசாட்சிக்கே வெளிச்சம்!
Related Posts with Thumbnails