April 01, 2009

எண் ஏழின் சிறப்பு

ண் ஏழு எப்போதுமே வரலாற்றில் சிறப்பான இடம் பெற்றிருக்கிறது.
ழு நாட்களில் இந்த உலகை இறைவன் படைத்ததாக விவிலியம் கூறுவது தொடங்கி உலகின் ஏழு அதிசயங்கள் வரை எண் ஏழின் முக்கியத்துவம் பலவிதம்.
தி மனிதர்கள் என விவிலியம் கூறும் Adam+Eve இவர்கள் பெயர்களின் எழுத்துக்களைக் கூட்டினாலும் ஏழு தான் வருகிறது!!

லகின் புதிய ஏழு அதிசயங்கள் அறிவிக்கப்பட்ட தேதியும் 7.7.7 (2007) தான்.

ழு இடம் பெற்றிருக்கும் மேலும் சில விடயங்கள் இங்கே.

திங்கள் முதல் ஞாயிறு வரையிலான ஏழு நாட்கள் கொண்ட வாரத்தை தான் நாம் கடைபிடித்து வருகிறோம்.

பூகோளத்தில் காணப்படும் கண்டங்களும் ஏழே அவை 1.ஆசியா 2.ஆப்பிரிக்கா 3.தென் அமெரிக்கா 4.வட அமெரிக்கா 5.ஐரோப்பா 6.ஆஸ்திரேலியா 7.அண்டார்டிகா

லக அதிசயங்கள் மட்டுமன்றி தற்போது இந்தியாவின் அதிசயங்கள் என அறிவிக்கப்பட்டிருப்பதும் ஏழு தான்.

1.மதுரை மீனாட்சியம்மன் கோயில் 2.குஜராத்தின் தோலவிரா பகுதி 3.ராஜஸ்தானின் ஜைசல்மார் கோட்டை 4.மத்யபிரதேசத்தின் கஜீரஹோ 5.பீகாரின் நளந்தா பல்கலைக்கழகம் 6.டெல்லியின் செங்கோட்டை 7.புவனேஷ்வரின் சூர்ய கோவில்

அதோடு தாஜ்மஹாலை அதிசயங்களின் அதிசயம் என அறிவித்திருக்கிறார்கள்.

இந்தியாவில் 'ஏழு'க்கும் அதிகமான அதிசயங்கள் இருக்க உலக அதிசயங்களை போன்றே நம்மவர்களும் காப்பி அடித்திருப்பது ஏனோ!!

திருப்பதியில் இருக்கும் ஏழுமலை கோயிலும் ஏழினை குறிக்கிறது.

ரிகமபதனி என ஸ்வரங்களும் ஏழே ... "ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்"



சிலுவையில் இறுதியாக இயேசு கிறிஸ்து அருளியதாக விவிலியம் கூறுவதும் ஏழு வார்த்தைளே.

த்தாலியின் ரோம் நகரை சூழ்ந்து இருக்கும் குன்றுகளின் (hills) எண்ணிக்கையும் ஏழாக தான் இருக்கிறது. 1.Aventinus (Aventine) 2.Caelius (Caelian) 3.Capitolium (Capitoline) 4.Esquiliae (Esquiline) 5.Palatium (Palatine) 6.Quirinalis (Quirinal) 7.Viminalis (Viminal)

பிரபலமான ஜெர்மானிய கதை Snow white ல் இடம் பெற்றிருக்கும் குள்ளர்களின் எண்ணிக்கையும் ஏழே.

னக்கு தெரிந்தது இவ்வளவு தான்.ஏழின் சிறப்பை மேலும் அறிந்தவர்கள் தெரியப்படுத்துங்கள்.

ப்புறம் இந்த ஏழரை ஏழரை அப்படின்னா என்னங்க?

9 comments:

Anonymous said...

If you ask someone to pick a number between one and ten, most would say seven! try it!

Anonymous said...

http://www.npr.org/templates/story/story.php?storyId=11803762

ரங்குடு said...

இதோ எனக்குத்தெரிந்த சில:

1. எழு கடல்கள் (சமுத்திரங்கள் அல்ல) கருங்கடல், காஸ்பியன் கடல், பெர்சியன் கடல், செங்கடல், மத்திய தரைக்கடல், ஏட்ரியாடிக் கடல், அரபிக்கடல்.

'கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகுத்தி குறுகத் தெரித்த குறள்' - ஒளவையார்.

2. ஒரு எண் 2,3,4,5,6,8,9, ஆகிய எண்களால் மீதியில்லாமல் வகுபடும் என்பதை க்கூறி விடலாம். ஆனால் 7ம் எண்ணுக்கு மட்டும் கூற முடியாது.

3. திருவள்ளுவரும், பழந்தமிழர்களும் ஏழு பிறவிகள் உண்டென்று நம்பினர்.
ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவர்க்கு எழுமையும் ஏமாப்புடைத்து. - குறள்

எற்றைக்கும் எழேழ் பிறவிக்கும் உந்தன்னோடு உற்றோமே யாவோம் - திருப்பாவை.

4. ஊருக்கு ஆறு பேர் வேண்டும் - அதை எடுத்துச் சொல்ல எழாவது மனிதன் வேண்டும் - ஏழாவது மனிதன் திரைப்படக் கருத்து.

5. திருவரங்கம் கோவில் ஏழு பிராகாரங்களை உடையது. மனிதனின் ஏழு பிறவிகளைக் குறிக்குமோ?

6. 1 முதல் 100 வரை உள்ள பகா எண்களில் பெரும்பன்மையானவை 7 தொடர்புடையவை.
1, 17, 37, 47, 67, 71, 73, 79,87, 97.

7. ஜியோமிதிக் கணிதத்தில் வரும் 'பை' என்ற எண்ணும் (22/7) 7 தொடர்புடையது.

8. பூமியின் கீழ் ஏழு உலகங்களும் மேலே ஏழு உலகங்களும் இருப்பதாக தமிழர்களும், ஆரியர்களும் நம்பினர்.

'பாதாளம் ஏழினும் கீழ் சொற்கழிவு பாத மலர்' - திருவெம்பாவை

'ஈரேழுலகும் எனக்குறவாக' - கந்தர் சஷ்டி கவசம்

9.ஆரியர் நம்பிக்கைப்படி கற்புக்கரசியர் 7 பேர். அருந்ததி தவிர மற்றவர் பெயர் மறந்து விட்டது.
அது போலவே சப்த கன்னியர்கள், சப்த மாதாக்கள் என்றும் உண்டு.

10. இந்தியாவில் வட கிழக்கு எல்லைப்புற மாநிலங்கள் 7. அஸ்ஸாம், திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து, அருணாசல் பிரதேஷ், மணிப்பூர், மிசோரம்.

11. வான வில்லின் நிறங்கள் 7.

12. 7th heaven - ஏழாவது சொர்க்கம் - இஸ்லாமியர்களின் நம்பிக்கைப் படி தேவதைகள் வாழுமிடம் அல்லது மிகவும் மகிழ்ச்சி பொங்கும் இடம்.

13. சோதிடத்தில் 7ம் பொருத்தம் என்று வரும். அதாவது திருமணம் செய்ய 10 பொருத்தங்கள் பார்க்க வேண்டும். அதில் 6 மிக முக்கியமானவை. ஏழாவதாக ஒரு பொருத்தம் இருந்தால் தான் திருமணம் செய்யலாம்.

இது போதும் என நினைக்கிறேன்.

எட்வின் said...

அற்புதமான தகவல்கள்... நன்றி நண்பர் ரங்குடு அவர்களே.

அனானி அன்பர்கள் இருவருக்கும் நன்றி

Anonymous said...

Hi edwin,
As Islamic teach, there is 7 sky..ali from bangkok

Anonymous said...

7 is the number for our Indian Cricket team Captain Dhoni who is taking the team to some newer heights...

மாண்புமிகு பொதுஜனம் said...

ம்.....6க்கும் 8க்கும் நடுவில் வரும் ஒரே எண் 7 மட்டுமே!
ரொம்ப சிரமப்பட்டுக் கண்டுபிடிச்சிருக்கேனுங்க.

Ananda said...

எனக்கு தெரிந்தவை சில


ஏழு பிறவிகள்,
ஏழு பெருங்கடல்கள்,
ஏழு பேர் உலகில் ஒத்த முகத்தை உடையோர்,
ஏழு செவ்விய போரியல் நூல்கள்(சீனா)

* Jiang Ziya (Taigong)'s Six Secret Teachings
* The Methods of the Ssu-ma (Also known as Sima Rangju Art of War)
* Sun-tzu's The Art of War
* Wu Qi's Wu-tzu
* Wei Liao-tzu
* Three Strategies of Huang Shih-kung
* Questions and Replies between T'ang T'ai-tsung and Li Wei-kung

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%8F%E0%AE%B4%E0%AF%81_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D


* நாட்டுக்கு வரும் குற்றங்கள் ஏழு : விட்டில், தொட்டியர், பன்றி, கள்வர், அவமழை, யானை, கிளி.

* ஏழு முனிவர் : அகத்தியன், புலத்தியன், அங்கிரா, கெளதமன், வசிட்டன், காசிபன், மார்க்கண்டன்.

* ஏழு நரகம் : கூடசாலம், இரெளரவம், கும்பிபாகம், பூதி, அள்ளல், செந்து, மகாபூதி.

* ஏழு கீழுலகம் : அதலம், விதலம், சுதலம், தராதலம், இரசாதலம், மகாதலம், பாதால(ள)ம்.

* ஏழு மேலுலகம் : பூலோகம், புவர்லோகம், சுவர்லோகம்,மகாலோகம், சனலோகம், தவலோகம், சத்தியலோகம்.

* ஏழு கடல் : உப்புக்கடல், கறுப்பஞ்சாற்றுக் கடல், மதுக் கடல், நெய்க்கடல், தயிற்க் கடல், பாற் கடல், சுத்த நீர்க் கடல்.

* ஏழு திரைகள் :
o கருப்பு - மாயா சக்தி
o நீலத்திரை - கிரியா சக்தி
o பச்சை - பரா சக்தி
o சிவப்பு – இச்சா சக்தி
o பொன்வண்ணம் - ஞான சக்தி
o வெண்மை - ஆதி சக்தி
o கலப்பு - சிற்சக்தி

* ஏழு பிறப்பு :
o ஐந்து மாதம் வரை – குழவிப் பருவம்.
o அவயவங்கள் உற்பத்திக் காலம்.
o பிண்டம் வெளிப்பட்ட காலம்.
o குழந்தைப் பருவம்.
o பாலப் பருவம்.
o குமரப் பருவம்.
o முதுமைப் பருவம்.

* இதில் சூட்சமப் பிறப்பு 7 :
o சாக்கிரம்
o சொப்பனம்,
o சுழுத்தி
o சாக்கிரத்தில் சொப்பனம்
o சாக்கிரத்தில்சுழுத்தி
o சொப்பனத்தில் சொப்பனம்
o சொப்பனத்தில் சுழுத்தி

* ஏழு தாதுக்கள் : இரதம், உதிரம், எலும்பு, தோல், இறைச்சி, மூளை, சுக்கிலமாகிய விந்து.

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5_%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D



---

நன்றாக இருந்தது , வாழ்க வளர்க

அதிரை.

எட்வின் said...

நன்றி ஆதிரை அய்யா.

Post a Comment

Related Posts with Thumbnails