கிரிக்கெட் வரலாற்றில் முதன்முதலில் 100 ற்கும் அதிகமான டெஸ்ட் போட்டிகளில் பணியாற்றிய பெருமையுடைய 62 வயதான நடுவர் ஸ்டீவ் பக்னர் (Stephen Anthony Bucknor)ஓய்வு பெறுகிறார், மார்ச் 29 அன்று நடைபெறவிருக்கும் இங்கிலாந்து-மேற்கு இந்திய தீவு அணிகளுக்கிடையேயான ஒருநாள் போட்டி அவரின் இறுதி ஒருநாள் போட்டியாக இருக்கும்.
மார்ச் 19-23 வரை கேப்டவுனில் நடைபெறவிருக்கும் ஆஸ்திரேலியா-தென்னாப்பிரிக்கா அணிகளுக்கிடையே நடைபெறவிருக்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டி அவரது இறுதி டெஸ்ட் போட்டியாக இருக்கும்.
எனது உடல்நிலை சீராக இருக்கிறது,என்னால் இன்னும் ஓரிரு வருடங்கள் தொடர்ந்து பணியாற்ற முடியும் ஆனால் மனதில் ஏதோ ஒன்று ஓய்வு பெறும் படி உந்துகிறது என மேற்கு இந்திய தீவு பத்திரிக்கை ஒன்றிற்கு தெரிவித்திருக்கிறார்.
1989 முதல் கிரிக்கெட் நடுவராக இருக்கும் ஸ்டீவ் பக்னர் மொத்தம் 126 டெஸ்ட் ஆட்டங்களுக்கும்,179 ஒருதின போட்டிகளுக்கும் பணியாற்றியிருக்கிறார். 1992 முதல் தொடர்ந்து ஐந்து உலகக் கோப்பை போட்டி இறுதி ஆட்டங்களில் நடுவராக பணியாற்றிய ஒரே நடுவர் என்ற புகழையும் பெற்றிருக்கிறார்.
இதுவரை 100 க்கும் மேலான டெஸ்ட் போட்டிகளில் பணியாற்றிய முதல் மற்றும் ஒரே நடுவர் என்ற பெருமையும் பக்னருக்கு உண்டு.இங்கிலாந்து நடுவர் டிக்கி பேர்டுக்கு பின்னர் அதிக டெஸ்ட் போட்டிகளில் பணியாற்றியவர் என்ற புகழுமுடையவர் பக்னர்.
தலையை ஆமாம் என்றவாறு மெதுவாக அசைத்துக் கொண்டு முடிவுகளை வழங்கியதால் "Slow death Bucknor" என்ற பட்டப்பெயர் இவருக்கு உண்டு.
கிரிக்கெட்டில் நடுவராக பணிபுரியும் முன்னர் கிரிக்கெட் வீரராகவும்,கால்பந்து போட்டிகளுக்கான நடுவராகவும் இருந்திருக்கிறார்.தான் விளையாடிய ஆட்டங்களில் பிற நடுவர்களால் கொடுக்கப்பட்ட தவறான முடிவுகளைக் கருத்திற் கொண்டே கிரிக்கெட்டில் நடுவராக வர முடிவெடுத்திருக்கிறார்.
பக்னர் ஒரு சிறந்த நடுவர் என்பதில் எந்த சந்தேகமுமில்லை,ஆனால் 2007 ஆம் ஆண்டிற்கு பின்னர் அவரது முடிவுகளில் பெரும்பாலனவை தவறாகின.(வயதும் காரணமாக இருக்கலாம்) 2007 ஒரு நாள் உலகக் கோப்பை போட்டிகளில் திறம்பட பணியாற்றாத காரணத்தால் தான் செப்டம்பர் 2007 ல் நடைபெற்ற 20-20 உலகக் கோப்பை போட்டிகளில் நடுவராக பணியாற்ற அனுமதி மறுக்கப்பட்டார்.
ஜனவரி 2008,சிட்னியில் நடைபெற்ற இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சரியாக பணியாற்றாத காரணத்தால் பெர்த்தின் மூன்றாவது டெஸ்ட்டில் இருந்து நீக்கப்பட்டார்.சச்சினுக்கும் ஓரிரு முறை தவறாக அவுட் கொடுத்து வெளியேற்றிய அனுபவமும் உண்டு பக்னருக்கு.இதனால் இந்தியாவில் பல இடங்களில் பக்னரின் படங்கள் தீவைத்து கொளுத்தப்பட்டன.
ஓய்விற்கு பின்னர் மேற்கு இந்திய தீவு கிரிக்கெட்டில் நடுவர்களின் தரத்தை உயர்த்த பங்காற்றப் போவதாக கூறியிருக்கிறார்.
பக்னரின் வருங்கால வாழ்வு சிறக்க வாழ்த்துக்கள்.
நன்றி:cricinfo
4 comments:
பக்னரின் வருங்கால வாழ்வு சிறக்க வாழ்த்துக்கள்.
என்னுடைய வாழ்த்துக்களும்
என்கு மிகவும் பிடித்த நடுவரும் கூட
நிச்சயம் நல்ல அம்பயர் தான். என்ன ஒரு மூன்று வருடத்திற்கு முன்பே ஓய்வு பெற்று இருக்கவேண்டும். சிட்னி டெஸ்ட் முடிந்த பிறகு இந்திய போர்டு இவரை மாற்றியது மிகவும் தவறான செய்கை. முதன்முதலாக 3rd umpire வந்த பொழுது refer செய்யாமல் கழுத்தறுத்தார் !
நன்றி நண்பர் கவின்,
2007 க்கு முன்னர் எனக்கும் அதிகம் பிடித்தவர் பக்னர் தான்.
நன்றி மணிகண்டன் அவர்களே,
முன்னரே ஓய்வு பெற்று நன்மதிப்பை தொடர்ந்து காப்பாற்றியிருக்கலாம். என்ன செய்வது!
Post a Comment