February 14, 2009

வந்திரு வந்திரு தானா வந்திரு

சேலம் பேருந்து நிலையத்தில் கடந்த மாதத்தில் நெல்லை செல்லும் விரைவுப்பேருந்திற்காக காத்திருந்தேன். வழக்கமாகவே தாமதமாக வரும் நம்ம அரசு பேருந்து!! அன்றும் வருவதற்கு தாமதமாகியது.

சரி விகடன் ஒன்று வாங்கி விட்டு வரலாமே என்று கடையருகே போகிற சமயத்தில் இளையலின் இனிமையான பாடல் ஒன்று காதில் விழுந்தது "காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி" அடடா அருமை என மனதில் நினைத்து ரசித்துக்கொண்டேன்.

பாடலின் முதல் ஐந்து வரிகள் முடியும் முன்னரே விகடனையும் வாங்கிக்கொண்டு மீண்டும் பேருந்து வருமிடத்தின் அருகிலுள்ள நாற்காலியில் அமர்ந்தேன்.

அதற்குள் ஒலித்துக்கொண்டிருந்த பாடலும் நின்று தி...ன...க...ர...ன் .... என விளம்பரத்திற்கே உரிய நீண்ட தொனியில் கத்தல் ஆரம்பித்து விட்டது.

வெகு நேரமாகியும் பேருந்து வரவில்லை. என்னடா இது என்று சலித்துக்கொள்ளவும் மீண்டும் பாடல் ஒலித்தது "காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி" ஐந்து வரிகள் தாண்டவில்லை மீண்டும் நிறுத்தப்பட்டது, விளம்பரமாக இருக்கும் என நினைத்தேன்...

...ஆனால் இம்முறை விளம்பரமில்லை!! மீண்டும் "காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி" இப்படியாக குறைந்தது 12 முறை மீண்டும் மீண்டும் அதே வரிகள். அப்போது தான் புரிந்தது ஆஹா இது நம்ம இருக்கிற சிட்டிவேசனுக்கு ஏத்த பாட்டு போல இருக்கே என.(எவனோ வேண்டுமென்றே பயணிகளை வெறுப்பேத்துவதற்கென்றே செய்திருக்கிறான்)

பாட்ட எவன்டா இப்படி போட்டு படுத்துறது;கையில கிடச்சான் ஒழிஞ்சான் என முணுமுணுத்து கொண்டேன். பஸ்ஸ காணோமேனு வயித்தெரிச்சல் ஒருபக்கம். மறுபக்கம் பாட்டு வேற கடுப்படிக்குது... (அருமை என சொல்ல வைத்த பாடலும் இது தான்) இது தான் பருகப்பருக பாலும் புளிக்கும் என்பதோ!?!


இரு நிமிடங்களுக்கு பின்னர் மீண்டும் அதே பாடலின் வேறு வரிகள் " வந்திரு வந்திரு தானா வந்திரு' "வந்திரு வந்திரு தானா வந்திரு" இல்லனா... என்ன கொடும சார்.

டேய் ஏன்டா படுத்துறீங்க. வெந்த புண்ணுல வேல பாய்க்காதீங்கடா... அவ்வ்வ்வ் அழுதிருவேன். பஸ்ஸ விடுங்கடா... னு மனசுக்குள்ள அழுது கொண்டே விரைவு பேருந்து கழக கவுண்டரில் கேட்டேன். சார் நெல்லை பஸ் எப்போ வரும். 'இதோ இப்போ வந்திரும்பானு சொன்னாரு' அங்கிருந்த ஊழியர் ஒருவர். அதன் பின்னரும் வரவில்லை பேருந்து. சுமார் 50 நிமிட தாமதத்திற்கு பின்னரே வந்து சேர்ந்தது.

"காத்திருந்து காத்திருந்து" பாடலை இனி எங்கே கேட்டாலும் சேலம் பேருந்து நிலையம் தான் ஞாபகம் வரும்.

4 comments:

கார்த்திகைப் பாண்டியன் said...

உங்க வேதனை எனக்கு புரியுது.. ஆனா பதிவ படிக்கும்போது சிரிப்புத்தான் வருது.. தப்பா எடுத்துக்காதிங்க தோழா..

சூரி said...

annay supper

எட்வின் said...

//உங்க வேதனை எனக்கு புரியுது.. ஆனா பதிவ படிக்கும்போது சிரிப்புத்தான் வருது.. தப்பா எடுத்துக்காதிங்க தோழா//
பாண்டியன் அவர்களே, அந்த நிகழ்வு நகைச்சுவையாக இருந்தமையால் தான் இணையத்தில் பகிர்ந்து கொண்டேன். வருகைக்கு நன்றி

Anonymous said...

சரியான நகைச்சுவை...

Post a Comment

Related Posts with Thumbnails