மேற்கு இந்திய தீவு அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் 51 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து பரிதாப தோல்வியடைந்த இங்கிலாந்து அணி இன்னமும் அந்த தோல்வியிலிருந்து வெளிவராமல் திணறுகிறது.(இந்திய அணியிடம் அடைந்த தோல்வியிலிருந்தே இன்னும் மீளவில்லையோ என்னமோ)
மறுபுறம் தென்னாப்பிரிக்காவில் ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் ஆட்டங்களில் முதலிடத்தை தக்கவைத்துக்கொள்ள தடைகளைத் தாண்டிக் கொண்டிருக்கிறது.
மறுபுறம் தென்னாப்பிரிக்காவில் ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் ஆட்டங்களில் முதலிடத்தை தக்கவைத்துக்கொள்ள தடைகளைத் தாண்டிக் கொண்டிருக்கிறது.
இங்கிலாந்து, மேற்கு இந்திய தீவு அணிக்கு எதிராக முதல் போட்டியில் தோல்வி அடைந்தாலும் மூன்றாவது போட்டியில் வெற்றி பெற மிக அதிக வாய்ப்புகள் காணப்பட்டன.(இரண்டாவது போட்டி ஆடுகளம் சரியில்லாமையால் சமநிலையில் முடிவடைந்தது) இரண்டாவது இன்னிங்சில் 353 ஓட்டங்களுக்கு மே.இ.தீவின் 9 விக்கெட்டுகளை வீழ்த்திய இங்கிலாந்திற்கு இறுதி ஒரு விக்கெட்டை வீழ்த்த இயலவில்லை.மே.இ.தீவின் பாவெலும்,எட்வர்ட்ஸும் 11ஓவர்கள் தாக்குப்பிடித்து இறுதி வரை ஆட்டமிழக்காமலிருந்தது இங்கிலாந்திற்கு ஏமாற்றமளித்திருக்கும்.
நிச்சயமாக முதல் டெஸ்ட் ஆட்டத்தில் அவர்கள் அடைந்த மகா கேவலமான தோல்வி அவர்கள் மனதை உறுத்தி கொண்டு இருந்திருக்க வேண்டும்;அந்த மனநிலை மூன்றாவது போட்டியில் ஆக்ரோஷமாக ஆட இயலாமல் தடுத்திருக்கலாம்.
அதோடு மே.இ.தீவின் மூத்த வீரர்களான சர்வான் மற்றும் சந்தர்பாலின் சிறப்பான ஆட்டமும் இங்கிலாந்திற்கு பேரிடியாக அமைந்தது.தற்பொழுது நடைபெற்று வரும் நான்காவது போட்டியில் இங்கிலாந்து 600/6 என்று ஓட்டங்களை குவித்திருந்தாலும் அதற்கு சவால் விடும் வகையில் மே.இ.தீவு வீரர்கள் ஆடி வருகின்றனர்.இந்த போட்டியின் சதத்துடன் சர்வான் இந்த தொடரில் தொடர்ந்து மூன்று சதங்களை எடுத்திருக்கிறார்
இங்கிலாந்து இந்த போட்டியை வென்றால் தொடரை சமன் செய்யலாம்.
---------------------
ஆஸ்திரேலியா தனது முதல் டெஸ்ட் ஆட்டத்தில் ஆரம்பத்தில் சிறிது தடுமாறினாலும் பிந்தைய வீரர்கள் உதவியுடன் 466 ஓட்டங்களைக் குவித்துள்ளது, தென்னாப்பிரிக்க தரப்பில் டிவில்லியர்சின் சதத்தை தவிர முதல் இன்னிங்சில் வேறு யாரும் சொல்லும் கொள்ளும் படி ஆடவில்லை. தெ.ஆ 220 ஓட்டங்கள் மட்டுமே எடுத்துள்ளது
மார்கஸ் நார்த்
ஆஸ்திரேலியாவிற்காக தனது அறிமுக டெஸ்ட் ஆட்டத்திலேயே புதிய வீரர் நார்த் சதம் எடுத்துள்ளார்.(இந்தியாவிற்காக அசாருதீன் தனது முதல் மூன்று டெஸ்ட் ஆட்டங்களிலும்,கங்குலி தனது முதல் இரு டெஸ்ட் ஆட்டங்களிலும் அடித்த சதங்களும் மறக்கவியலாது)
காலிஸ் - 10,000 ஓட்டங்கள்
தெ.ஆப்பிரிக்க வீரர் காலிஸ் டெஸ்ட் ஆட்டங்களில் 10,000 ஓட்டங்களை குவித்தவர்களில் எட்டாவதாக சேர்ந்திருக்கிறார். தனது 129 ஆவது ஆட்டத்தில் இந்த சாதனையை செய்திருக்கிறார். சச்சின் 156 போட்டிகளில் 12429 ஓட்டங்கள் குவித்து முதலிடம் வகிக்கிறார்.
ஆஸி-தெ.ஆ இடையேயான டெஸ்ட்டில் விக்கெட்டிற்கு களநடுவரின் முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்வதிலும் பல பிரச்சினைகள் காணப்பட்டன.மெக்கென்சியின் விக்கெட்டிற்காக பாண்டிங் முறையீடு செய்த போது அந்த நிகழ்வு கேமராவில் பதிவாகவில்லை. கேமரா பழுதடைந்திருக்கிறது... என்ன கொடும அய்யா இது. பவுச்சரின் விக்கெட்டும் மூன்றாவது நடுவரால் சர்ச்சைக்குரிய முறையில் கொடுக்கப்பட்டது
இந்த போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றிபெறும் பட்சத்தில் அவர்கள் முதலிடத்தை தக்க வைத்துக் கொள்ள முடியும்.அதோடு சொந்த மண்ணில் தென்னாப்பிரிக்காவிடம் இழந்த பெயரை காப்பாற்றவும் ஒரு வாய்ப்பு கிடைக்கும்
2 comments:
என்ன கிறிக்கெட் செய்தி எல்லாம் போட்டுக் கலக்குறீகள் தலை?? உலகத்தில் நான் தான் பெரியவர்கள் என்ற நினைப்பு இருக்கக் கூடாதாம். அப்படி இருந்தால் ஒஸ்ரேலியாவைப் போலத் தான் வர வேண்டும்??
வருகைக்கு நன்றி நண்பர் கமல் அவர்களே... கிரிக்கெட் என்றால் அத்தனை பிரியம் சிறு வயதிலிருந்தே...அது தான் கிரிக்கெட் பற்றிய பதிவுகளுக்கு காரணம்,கிரிக்கெட் மட்டுமல்லாமல் இசை,அரசியல்,விளையாட்டு என அனைத்து விஷயங்களையும் அலசியிருக்கிறேன்... பதிவுகளின் தொகுப்பில் பார்த்தால் தெரிந்து கொள்வீர்கள் ...
ஆஸ்திரேலிய அணிக்கு இருக்கும் அளவுக்கு தலைக்கனம் கூடாது தான்...
Post a Comment