இந்தியா - பாகிஸ்தான்
இஸ்ரேல் - பாலஸ்தீன்
உலக டென்னிஸ் தரவரிசையில் 48 ஆவது இடத்திலிருக்கும் இஸ்ரேல் டென்னிஸ் வீராங்கனை ஷஹார் பியருக்கு துபாய் WTA டென்னிஸ் போட்டிகளில் விளையாட ஐக்கிய அரபு நாடுகள் விசா வழங்க அனுமதி மறுத்துள்ளது.
இஸ்ரேல்-பாலஸ்தீனத்தினிடையிலான காசா பகுதி பிரச்சினையில் பாலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் அநியாய தாக்குதலின் போது குரல் கொடுக்காமலிருந்த வளைகுடா நாடுகளில் ஒன்றான ஐக்கிய அரபு நாடுகள் இப்போது இஸ்ரேலிய வீராங்கனை ஒருவரை ஏற்க மறுப்பது ஏனோ தெரியவில்லை.
துபாயின் இச்செயலுக்கு உலக டென்னிஸ் அமைப்பின் சேர்மனான லேரி ஸ்காட் ஆட்சேபம் தெரிவித்துள்ளார்.தரவரிசையின்படி ஆடுவதற்கு தகுதி பெற்ற வீரர் ஒருவருக்கு அனுமதியளிக்காமல் இருப்பது சரியல்ல என கூறியுள்ளார்.
இப்பிரச்சினையால் வருங்காலங்களில் துபாயில் டென்னிஸ் போட்டிகள் நடத்த தடை விதிக்கப்படும் எனவும் தெரிகிறது.ஷஹார் ஒரு இஸ்ரேலியர் என்பதை தவிர அனுமதி மறுப்பிற்கு வேறு காரணங்கள் இருப்பதாகத் தெரியவில்லை.
இது ஒருபுறமிருக்க ஆசியாவிலோ,இந்தியாவிற்கு பாகிஸ்தானும், பாகிஸ்தானிற்கு இந்தியாவும் தங்கள் வீரர்களை அனுப்புவதில்லை என கடந்த மாதம் முடிவெடுத்ததும் குறிப்பிடத்தக்கது.
விளையாட்டுகளின் மூலம் சகோதரத்துவத்தை வளர்த்த காலங்கள் மாறி இன்று விரோதங்கள் பெருகி வருவது நாம் வாழ்ந்து வரும் காலகட்டம் எத்தனை ஆபத்தானது என்பதை மீண்டும் உணர்த்துகிறது.
5 comments:
நம்ம ஊர்லதானே வெளையாட்டு வெனயாகுதுன்னு சொல்ல்வாங்க......
//ஆகாயமனிதன்.. said...
நம்ம ஊர்லதானே வெளையாட்டு வெனயாகுதுன்னு சொல்ல்வாங்க......//
ஆமாம் தோழரே, ஆனா இப்போ சில நாடுகளில் இருக்கிற நிலைமய பாத்தா, விளையாட்டு வீரர்கள் பிற நாட்டுக்கு போக மாட்டாங்க போல ராணுவ வீரர்களும் வெடிகுண்டுகளும் தான் போகும் போல.
ம்...........எப்பிடியெல்லாம் பழிவாங்குறாங்கள் பார்த்தீர்களா??
//விளையாட்டுகளின் மூலம் சகோதரத்துவத்தை வளர்த்த காலங்கள் மாறி இன்று விரோதங்கள் பெருகி வருவது நாம் வாழ்ந்து வரும் காலகட்டம் எத்தனை ஆபத்தானது என்பதை மீண்டும் உணர்த்துகிறது.//
விளையாட்டு விளையாட்டகாக இருக்கவேண்டும்.
கமல் said...
//ம்...........எப்பிடியெல்லாம் பழிவாங்குறாங்கள் பார்த்தீர்களா??//
ஆமாங்க நண்பரே
வருகைக்கு நன்றி.
-------------------------------------------
சொல்லரசன் said...
//விளையாட்டு விளையாட்டகாக இருக்கவேண்டும்//
இங்க விளையாடவே அனுமதியில்லீங்களே சார்
Post a Comment