February 27, 2009

தோல்வியிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளாத இந்திய அணி


நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் இந்திய அணி இன்று மீண்டும் தோல்வியடைந்துள்ளது.கிரைஸ்ட் சர்ச் முதல் T20 போட்டியில் அடைந்த தோல்வியிலிருந்து கற்றுக் கொள்ளாத இந்திய வீரர்கள் இந்த தொடரின் மீதமுள்ள ஆட்டங்களை எப்படி அணுகப் போகிறார்கள் என தெரியவில்லை.

முதல் T20 ஆட்டத்தில் அடித்து ஆடி ஓட்டங்கள் குவிக்க முற்பட்டு அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து அதிக ஓட்டங்கள் குவிக்கவியலாமல் போனது இந்திய அணிக்கு.இன்றும் அதே நிலைமை தான்.பந்து வீச்சும் சொல்லிக்கொள்ளும் படி இல்லை முதல் ஆட்டத்தில்.

நியூசிலாந்தின் சூழல் இந்தியருக்கு புதிதாக இருக்கலாம்; குளிர்ந்த தட்பவெப்பநிலையும்,மிதமான காற்றும் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும்;அது இந்திய வீரர்களுக்கு பாதகம் என நம்பப்பட்டாலும்.நியூசிலாந்து பந்து வீச்சாளர்கள் சொல்லும் படியாக பந்தை ஸ்விங்க்(Swing) செய்யவில்லை என்றே நினைக்கிறேன்.

மாறாக அவர்களின் சீரான,விக்கெட்டில் நின்று சற்றும் விலகாத பந்து வீச்சு இந்திய மட்டையாளர்களுக்கு தர்ம சங்கடத்தை கொடுத்தது,ஓட்டங்கள் பெற முடியவில்லையே என மட்டையை வீணாக வீசத் தொடங்கிவிக்கெட்டுகளைப் பறிகொடுத்தனர்.
இன்றைய போட்டியில் ஒரே ஒரு அகலப்பந்து(wide)மட்டுமே நியூசிலாந்து வீரர்களால் வீசப்பட்டது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள் அவர்களது பந்து வீச்சின் ஒழுங்கை.ஆனால் இந்திய பந்து வீச்சாளர்கள் கொடுத்த உதிரி ஓட்டங்கள் அவற்றை விட அதிகம்.

முதல் ஆட்டத்தைப் போன்றே இன்றும் நல்ல துவக்கத்திற்கு பின்னர் விக்கெட்டுகள் வேகமாக சரிந்தன. அதோடு நியூசிலாந்து வீரர்களின் களத்தடுப்பும் (Fielding) ஓட்டக்குவிப்பிற்கு வினை வைத்தது.

இன்று பத்தான் சகோதரர்கள் ஒருபுறம் சொதப்ப மறுபுறம் மெக்குலம் சகோதரர்கள் சாதித்திருக்கிறார்கள்.இர்ஃபான் பத்தான் இன்று இரு விக்கெட்டுகள் எடுத்தாலும் அதிக ஓட்டங்களை விட்டுக்கொடுத்தார்.கடந்த போட்டியிலும் பத்தான் சரியாக பந்து வீசவில்லை.

இனியும் இந்தியர்கள் தோல்விகளிலிருந்து கற்றுக் கொள்ளவில்லையென்றால் தொடர்ந்து வெற்றிகள் பெறுவதற்கு அது பாதகமாக அமையும்.

இன்றைய ஆட்டத்தின் ஸ்கோர்:
இந்தியா-149/6
நியூசிலாந்து-150/5

9 comments:

எட்வின் said...

தமிழிசில் நண்பர் கில்லி அவர்களின் கருத்தையும் இங்கு பின்னூட்டத்தில் இணைக்கிறேன்.

written by gilli
அர்னோல்ட் நீங்கள் போட்டியின் நேரடி ஒளிபரப்பை தொலைகாட்சியில் பார்த்தீர்களா?

பதான் எடுத்த கடைசி இரண்டு விக்கெட் கள் தான் ஆட்டத்தை கடைசி பாத்து வரை கொண்டு சென்றது. இன்றைய ஆட்டத்தில் அவர் நன்றாகவே பந்து வீசினார். இந்தியா தோற்றாலும் இன்றைய ஆட்டம் அட்டகாசமாக இருந்தது. அந்த கடைசி பந்து கேட்ச்சை ரோஹித் ஷர்மா பிடித்து இருந்தால் bowl-out வரை சென்று இருக்கும்.

எட்வின் said...

நண்பர் கில்லி அவர்களே ,ஆட்டம் நன்றாகவே இருந்தது.குறை சொல்லவில்லை.ஆனால் பத்தான் இன்று 4 ஓவர்களில் 41 ஓட்டங்கள்(with 2 wides) விட்டுக் கொடுத்தார். கடந்த ஆட்டத்தில் 3 ஓவர்களில் 38 ஓட்டங்கள் கொடுத்தாரே!!

கைவசம் விக்கெட்டை வைத்து விட்டு அடித்து ஆடலாமே... காம்பீர்,ரைனா,சேவாக் ஏன் ஆரம்பதிலேயே அடித்து ஆட முற்பட வேண்டும்

Anonymous said...

இன்று நாம் தோல்வி அடைந்ததற்கு மட்டையாளர்கள் தான் காரணம்.. இருபது ஓவர் போட்டியில் நாம் எடுத்து மிக மிக கம்மியான ஸ்கோர்..

அந்த கடைசி ஓவர் பதானுக்கு கொடுத்திருக்க வேண்டாம். அவர் அந்த ரெண்டு விக்கெட் எடுத்து திருப்பு முனை தான்!! ஆனால் கடைசி ஓவரில் நாம் ரன் எடுப்பதை தவிக்க செய்ய Zaheer தான் சரி!!

எட்வின் said...

தமிழிசில் நண்பர் கில்லியின் பதில் வாதம்...

written by gilli 4 hours ago in tamilish

பவர் ப்ளேயில் அடித்து ஆடுவது சகஜம்தான். யுவராஜ் கூட பவர் ப்ளே யில் அடித்து ஆடி அடுத்து சற்று நிதானம் காத்தார். எல்லாம் நல்லாத்தான் போய் கிட்டு இருந்தது. யுஸுப் பதானின் அதிர்ச்சியான அவுட்டும், தோனியின் சொதப்பலான ஆட்டமும் தான் தோல்விக்கு காரணம். தோணி நான்கு அடிக்கவே திணறினார்.

என்னை பொறுத்தவரயில் இந்திய பவுலர்கள் இரண்டு போட்டிகளிலும் திருப்திகரமாகவே செயல் பட்டார்கள் :) . மட்டயாளர்களின் சொதப்பலான பாட்டிங்கே தோல்விக்கு காரணம்.


written by gilli 4 hours ago

//கைவசம் விக்கெட்டை வைத்து விட்டு அடித்து ஆடலாமே..//

நீங்கள் சொல்வது சரியான அணுகுமுறைதான். அனால் கடைசியில் விக்கெட்டை வைத்து கொண்டு தோணி அடிக்காமல் சொதப்பினார்.


written by EDWIN 32 minutes ago //மட்டயாளர்களின் சொதப்பலான பாட்டிங்கே தோல்விக்கு காரணம். //

உங்கள் வாதமும் சரி தான் நண்பரே... இன்று யுவி நிலைமை அறிந்து ஆடினார். தோனியின் Cross bats நியூசிலாந்தில் எடுபடவில்லை.5-10 ஓட்டங்கள் இரு ஆட்டங்களிலும் அதிகம் எடுத்திருப்பார்களென்றால் ஜெயித்திருக்கலாம்.

எட்வின் said...

Bhuvanesh said... //தோல்வி அடைந்ததற்கு மட்டையாளர்கள் தான் காரணம்
//

வாங்க புவனேஷ், மிகச்சரியாக சொல்லியிருக்கீங்க.

//ஆனால் கடைசி ஓவரில் நாம் ரன் எடுப்பதை தவிக்க செய்ய Zaheer தான் சரி!!//
தோனி சார் யோசிக்க வேண்டியது!!

ஷாஜி said...

//அந்த கடைசி ஓவர் பதானுக்கு கொடுத்திருக்க வேண்டாம். அவர் அந்த ரெண்டு விக்கெட் எடுத்து திருப்பு முனை தான்!! ஆனால் கடைசி ஓவரில் நாம் ரன் எடுப்பதை தவிக்க செய்ய Zaheer தான் சரி!!//

-ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்....

எட்வின் said...

வாங்க ஷாஜி... சரிதான் உங்கள் கருத்தும்.

இர்ஃபான் இலங்கைக்கு எதிரான T20 போட்டியிலும் சரியாக பந்து வீசவில்லை... அதனை பேட்டிங்கில் சரி கட்டினார்,ஒருவழியாக இந்தியா வெற்றியும் பெற்றது.இப்போது தொடர்ச்சியாக இரு போட்டிகளிலும் பந்து வீச்சில் சொதப்பல்.

இர்ஃபான் Swing செய்வதில் தான் சிறந்தவர்.அதானால் தான் முதல் ஓவரை அவரிடம் கொடுத்தார்கள்.ஆனால் நியூசிலாந்து வீரர்களுக்கே பந்து சொல்லும் படியாக ஸிவிங்க் ஆகவில்லை.அதன் பின்னரும் ஏன் இந்த வீர விளையாட்டு?!!!

ARV Loshan said...

//இர்ஃபான் இலங்கைக்கு எதிரான T20 போட்டியிலும் சரியாக பந்து வீசவில்லை... அதனை பேட்டிங்கில் சரி கட்டினார்,ஒருவழியாக இந்தியா வெற்றியும் பெற்றது.இப்போது தொடர்ச்சியாக இரு போட்டிகளிலும் பந்து வீச்சில் சொதப்பல்.

இர்ஃபான் Swing செய்வதில் தான் சிறந்தவர்.அதானால் தான் முதல் ஓவரை அவரிடம் கொடுத்தார்கள்.ஆனால் நியூசிலாந்து வீரர்களுக்கே பந்து சொல்லும் படியாக ஸிவிங்க் ஆகவில்லை.அதன் பின்னரும் ஏன் இந்த வீர விளையாட்டு?!!!
//

100 PERCENT CORRECT !!!


இந்திய அணியின் ஆசிய ஆடுகளங்களின் பலம் நியூ சீலாந்தில் பலவீனம் ஆகியிருக்கிறது. தோனியின் சொதப்பல் அணியைப் பலமாகப் பாதித்திருக்கிறது. இந்த மாதிரி ஆடுகளங்களில் பொறுமை காத்து ஓட்டம் சேர்ப்பதே சிறப்பு என்பதை நியூ சீலாந்தின் வெற்றிகள் காட்டி இருக்கின்றன.

மக்கலம் சிறப்பாக ஆடி இருக்கிறார்,

ஒரு நாள் போட்டிகளில் என்ன செய்யப் போகிறார்கள் இந்திய அணியினர் என்று பார்க்கலாம்.

எட்வின் said...

நன்றி அன்பர் லோஷன்...

தோனியின் உத்திகள் சரியாக இல்லை. தோனிக்கு அறிவுரை கூறும் ஒரு மூத்த வீரர் அணியில் இல்லாததும் பெரும் குறை என நினைக்கிறேன். ஒரு நாள் போட்டிகளில் சச்சின் அந்த இடத்தை சரி பண்ணலாம்.

Post a Comment

Related Posts with Thumbnails