September 16, 2009

தென்கச்சி கோ.சுவாமிநாதன் அவர்களுக்கு அஞ்சலிகள்


தொண்ணூறுகளில் வானொலியில் தென்கச்சி கோ.சுவாமிநாதன் அவர்களின் "இன்று ஒரு தகவல்" நிகழ்ச்சியை கேட்காமல் இருந்தால் அன்றைய தினம் முழுவதும் எதையோ இழந்த ஒரு உணர்வு தோன்றும்.

தனது குட்டி கதைகள் மூலம் நல்லெண்ண கருத்துகளை பரப்பியதோடு, சிந்தனைகளையும் தூண்டியவர் அவர்.

"இன்று ஒரு தகவல்" நிகழ்ச்சியை நாள் தவறாமல் 14 ஆண்டுகள் தொடர்ந்து வழங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது

சில வாரங்களாக நோய்வாய்ப்பட்டிருந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அன்னார் இன்று மாரடைப்பால் இயற்கை எய்தினார்.

அன்னாருக்கு அஞ்சலிகள்.

2 comments:

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

இவர் சொன்ன கதைகள் இன்னும் உள்ளே இருக்கின்றன. மரியாதைக்குரிய ஒரு தமிழர். ஏற்கனவே செய்தியறிந்தேன். வருத்தத்துக்குரிய விஷயம். இவரது மரணமும் அதிகம் கவனிக்கப்படாமலே போய்விட்டது.

-ப்ரியமுடன்
சேரல்

Anonymous said...

I have written an obituary for him in my English blog

http://www.myownquiver.blogspot.com/

Post a Comment

Related Posts with Thumbnails