மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆ. ராசாவும் அவரது அமைச்சரவையும், அவர் மீதான ஊழல் குற்றச்சாட்டும் தான் தமிழகத்தின் எதிர்கட்சிகளுக்கு தற்போது கிடைத்திருக்கும் விவாதப்பொருள் .
அது ஒருபுறமிருக்க ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் முக்கிய அங்கம் வகிப்பவரும், தமிழக முதல்வருமான கலைஞர் கருணாநிதி அவர்கள் மந்திரி ஆ.ராசா ஒரு தலித் என்பதால் தான் அவரது பதவிக்கு குறிவைக்கப்படுகிறது என்ற ஒரு கருத்தை தெரிவித்திருக்கிறார்.
இன்னும் எத்தனை காலம் தான் இது போன்ற ஜாதி ரீதியான கருத்து அரசியல் செய்வார்களோ தெரியவில்லை. அவர் ஊழல் செய்தாரா இல்லையா என்பதை அறிய முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறதா என்பதை அறிவதை விட்டுவிட்டு இது போன்ற கருத்து அரசியல் தேவை தானா என கருதத் தோன்றுகிறது.
அவர் தலித் என்பது ஒருபுறமிருந்தாலும் அவர் மூலம் கட்சிக்கும், கழகத்திற்கும் கிடைக்கும் லாபம் கிடைக்காமல் போய் விடுமோ என்ற ஐயம் தானோ என்னமோ இவர்களை இப்படியெல்லாம் பேசச் செய்கின்றது!!
இதனைக் குறித்து சிந்திக்கையில் 'எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே" என்ற பாடல் தான் நினைவிற்கு வருகிறது
'எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே"
சத்தியம் தவறாத உத்தமன் போலவே நடிக்கிறார்
சமயம் பார்த்து பல வகையிலும் கொள்ளை அடிக்கிறார்
பக்தனை போலவே பகல் வேஷம் காட்டி
பாமர மக்களை வலையினில் மாட்டி
"எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே"
நம் நாட்டிலே
4 comments:
எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே??? ////
அரசியல் ஒரு சாக்கடையே...
நீங்கள் சொன்ன பாட்டு காஞ்சி சுப்புணிக்கு மிகவும் பொருந்தும்.
அமைச்சரைப் பற்றி மக்களவையிலோ,நீதி மன்றத்திலோ
உண்மைகளை எடுத்துக்காட்ட வேண்டும்.
பத்திரிக்கைகளின் தரம் பற்றி அனைவரும் அறிந்துதானே உள்ளார்கள்.
வெறும் கூச்சலும்,குழப்பமும் எதற்காக என்பதில் தான் சாதி வெளியே வருகிறது.
தமிழகத்தின் ஊழல் மகாராணி எத்தனை முறை அரசைப் பதவி விலகச் சொன்னதாகப் பத்திரிக்கைகள் வெளியிட்டன, அரசு பதவி விலக வேண்டியது தானா ?
@ கிறிச்சான்...
சரியா சொன்னீங்க போங்க
@ Thamizhan
//அரசு பதவி விலக வேண்டியது தானா ?//
யார் யாரோ என்னவெல்லாமோ சொல்லுறாக... என்னமோ போங்க. இங்க யார் சொன்னாலும் நாங்க கேக்கமாட்டோம்னு தலைமை இருக்கிற வரை எல்லாம் இப்பிடியே தான் போகும் போல
Post a Comment