சங்கமம் திரைப்படத்தில் இடம்பெற்ற "வராக நதிக்கர ஓரம் ஒரே ஒரு பார்வ பாத்தேன்" பாடலை ஆரம்பத்தில் கேட்ட போது என்னடா தமிழ் திரையுலகில இப்படி ஒரு குரலா என வியந்ததுண்டு. அதே பாடலின் முதல் சரணத்தில் 'காவேரிக் கரையில் மரமாய் இருந்தால் வேருக்கு யோகமடி' என உச்ச ஸ்தாயியில் அவர் பாடியதை இப்போது கேட்டாலும் வியக்கிறேன். அந்த பாடலை கீழே இணைத்துள்ளேன்
அண்மைக் காலத்தில் ரஹ்மானிற்கு அடுத்தபடியாக உச்ச ஸ்தாயியில் பாடுபவர்களில் நான் அதிகம் ரசித்தது ஷங்கர் மஹாதேவனைத் தான். ரஹ்மானே பலமுறை அவரைப் பாராட்டியிருக்கிறார்.
TamilBeat.Com - Varaaga Nadhi .mp3 | ||
Found at bee mp3 search engine |
சில தினங்கள் முன்னர் அந்த பாடலை மீண்டும் கேட்கும்படியான ஒரு வாய்ப்பு கிடைக்கவே ஷங்கர் மஹாதேவனை குறித்து எழுதலாமே என்ற எண்ணம் தோன்றியது.
இந்த பாடலில் ஷங்கருக்கு சொல்லுபடியான புகழ் கிடைத்தாலும் அதற்கு முன்னரே ஒரே மூச்சில் தான் பாடிய Breathless என்ற POP பாடலின் மூலம் பாலிவுட்டில் பிரபலமாகியிருந்தார் அவர். தமிழ் திரையுலகிலும், பாலிவுட்டிலும் பல பாடல்களைப் பாடியிருக்கிறார்.
Shankar Mahadevan - Breathless | ||
Found at bee mp3 search engine |
1999 ல் 'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்' திரைப்படத்தின் 'என்ன சொல்ல போகிறாய்' பாடலுக்காகவும் அதன் பின்னர் மூன்று இந்தித் திரைப்பட பாடல்களுக்காகவும் தேசிய விருதைப் பெற்றிருக்கிறார்.
என்னடா இந்திக்காரர் ஒருத்தர் சரியான தமிழ் உச்சரிப்போட மிகத்தெளிவா பாடுறாரேன்னு ரொம்ப காலமா எனக்கு சந்தேகம் இருந்தது. பக்கா ஐயர் குடும்ப சூழ்நிலையில வளர்ந்தவர் அப்படின்ற விஷயம் அப்புறம் தான் தெரிய வந்தது. பாலக்காட்டில் பிறந்தாலும் மும்பையிலேயே வளர்ந்ததால் இந்தியின் பக்கம் அவரது பார்வை அதிகம் இருப்பதில் ஆச்சரியமில்லை.
எஹ்சான் மற்றும் லாய் என்ற இருவருடன் இணைந்து இசையமைப்பாளராக அசத்தி வருகிறார் ஷங்கர் மஹாதேவன். அவர்கள் இசையமைத்த திரைப்படங்களில் ஆளவந்தான், kal ho na ho, kabhi alvida naa kehna, Dil chahta hai, Mission Kashmir, Rock On, Taare Zameen Par குறிப்பிடும்படியானவை.
ஷங்கர்-எஹ்சான்-லாய் ஜூலை 16, 2010 முதல் உலக அளவில் இசைப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்களாம் . மேலும் தகவல்களுக்கு அவர்களது இணையதளமான http://www.shankarehsaanloy.com/ பாருங்கள்.
ஷங்கர்-எஹ்சான்-லாய் ஜூலை 16, 2010 முதல் உலக அளவில் இசைப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்களாம் . மேலும் தகவல்களுக்கு அவர்களது இணையதளமான http://www.shankarehsaanloy.com/ பாருங்கள்.
4 comments:
எனக்கு மிகப்பிடித்த பாடகர்.. எப்படி வேணும்னாலும் வரிகளை வளைச்சு நெளிச்சு வேகமா மெதுவா பாடறதுல கில்லாடி..
இது Breathless stage performance.. மூச்சு விடாம பாடியிருக்காரு..
http://www.youtube.com/watch?v=XXUH030NxpU&feature=related
ஹிந்தியில் சமீபத்தில் வந்த டான் படத்தை விட்டுடீங்களே...
நன்றிங்க ஜெய். நிச்சயமா அவர் கில்லாடி தான்
@ Dinesh
இன்னும் எழுதினா லிஸ்ட் எகிறுமேன்னு தான் எழுதல நண்பரே. டான்2 ல வரும் Aaj Ki Raat பாட்ட மறக்க முடியுமா என்ன!
Post a Comment