பவுன்சருக்கு எகிறும் கவுதம் கம்பீர்
முரளி விஜய் என்னமா ஆடுறான்யா ; தோனி அடிக்கிறான் பார்ரா சிக்சர்; ஆஹா செமையா இருக்கில்ல ஆட்டம் ... கிங்கில்ல... சென்னை சூப்பர் கிங்கில்ல என ஆர்ப்பாட்டம் செய்து இரு வாரங்கள் நிறைவடையவில்லை அதற்குள்ளாக சொந்த செலவில் சூனியம் வைத்திருக்கிறார்கள் இந்திய கிரிக்கெட் அணியினர்.
ஐ.பி.எல் குறித்து ஆஹா! ஓஹோ! என வாயைப் பிளந்து கொண்டு இருந்தது தான் மிச்சம். இப்போ உலக அரங்கில இந்திய அணியோட முதுகை பிளந்துட்டாங்கல்ல... இதுக்கு என்ன சொல்லப் போற அப்பிடின்னு நண்பர்கள் ஏளனமாய் பார்க்க தொடங்கி விட்டார்கள்.
T20 உலகக்கோப்பை போட்டியில் பிற அணிகளின் அருமையான ஆட்டங்களுக்கும், வேகப்பந்து வீச்சிற்கு சாதகமான மேற்கு இந்தியத்தீவு மைதானங்களின் ஆடுகளங்களுக்கும் ஈடுகொடுக்கமுடியாமல் ஆட்டம் கண்டு இருக்கிறது இந்திய அணி.
பணம் கொழித்த ஐ.பி.எல் ல் திறம்பட ஆடிய பலர் சர்வதேச போட்டிகளில் சொதப்பியது நிச்சயம் நன்மைக்கே என்று கூட சொல்லலாம். ஐ.பி.எல் மூலம் (இந்திய) ஆட்டக்காரர்கள் அடைந்தது பணம் மட்டுமே தானே ஒழிய ஆட்டத்திறன்களை அல்ல என்ற உண்மையாவது வெளிவர காரணமாகியிருக்கிறது இந்த தோல்விகள்
மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான போட்டிக்கு பின்னர் தோனி அளித்த பேட்டியிலிருந்தே அவரும் அணியினரும் என்ன விதமான மனநிலையில் இருக்கிறார்கள் என புரிந்து கொள்ள முடிந்தது. தோல்விக்கு என்ன காரணம் சொல்லலாம் என தோனி தடுமாறியது வெகு நாட்களுக்கு பின்னர் தற்போது தான்.
எனினும் இந்தியாவில் வேகப்பந்து வீச்சிற்கு சாதகமான ஆடுகளங்களை அமைக்காததும் ஒரு காரணம் என கூறி தப்பிக்க பார்ப்பது சற்றும் நியாயமல்லவே. ஒரு அணித்தலைவராக இருப்பவர், தென்னாப்பிரிக்காவில் முதல் T20 உலகக்கோப்பையை பெற்றுத்தந்தவர், அதன் பின்னர் தென்னாப்பிரிக்காவில் ஐ.பி.எல்-2 ன் போட்டிகளிலும் ஆடியவருக்கு இந்தியாவில் என்ன விதமான ஆடுகளங்களை அமைக்க வேண்டுமென்று தெரியாதா? இல்லையென்றால் மறைமுகமாக இந்திய கிரிக்கெட் ஆணையத்தை சாடுகிறாரா?
இது போதாதென்று சிம்பாப்வே, இலங்கை அணிகளுடனான முத்தரப்பு தொடருக்கு மூத்த ஆட்டக்காரர்கள் பலரும் விலக்கி வைக்கப்பட்டிருப்பது என்னத்திற்கு என்பதும் புரியவில்லை. இப்பவே இந்த ஆட்டம் ஆடுறவங்க இனி என்ன அழுகுணி ஆட்டம் ஆடுவாங்களோ தெரியல.அந்த அணியிலும் ராபின் உத்தப்பா சேர்க்கப்படாதது ஆச்சரியமே.
தேர்வுக்குழு வச்சிருக்காங்களா இல்ல சோர்வா இருக்கிறவங்கள கண்டுபிடிக்கிறதற்காக சோர்வுக்குழு ஏதும் ஸ்ரீகாந்த் தலைமையில வச்சிருக்காங்களான்னு தெரியல.
'இந்தியால கிரிக்கெட் டீம் இருக்குதாடா' அப்பிடின்னு கேக்குற ஒரு காலம் வந்தா இன்னும் நல்லா இருக்கும்னு நண்பன் சொல்றான். அதுக்கு அவன் சொல்லும் காரணம்... கிரிக்கெட்டில் அரசியல்வாதிகளின் குறுக்கீடு, வீரர்கள் தேர்வில் நடக்கும் அரசியல், சூதாட்டம், பணக்கொழுப்பு, அகங்காரம் மற்றும் கிரிக்கெட் அல்லாத விளையாட்டுகளுக்கு இந்தியாவில் கொடுக்கப்படும் மரியாதை. அவன் சொல்றதும் நியாயமாத் தான் இருக்குது... ம்ம்ம் பாக்கலாம்.
இப்பிடி குனிய வைச்சிட்டானுகளே
8 comments:
கிரிக்கெட் வாழ்க
பெண்கள் கிரிக்கெட் வாழ்க
Ippadiyavadhu cricket mogam tholaindhal sari
Nice move by Indian Selection Board..
இதுலதான் நீங்க இந்தியன் செலக்சன் கமிட்டியோட சமயோசிதத்தைப் பாராட்டணும். இந்தத் தொடர்ல தோத்துப் போனா, நாங்க இளைய தலைமுறைக்கு வாய்ப்புக் குடுத்துப் பார்த்தோம் அப்பிடின்னு சொல்லி தப்பிச்சிக்கலாம். சப்போஸ் இந்த டீம் ஜெயிச்சிட்டு வந்திருச்சின்னு வச்சிக்குங்க.. பாத்தீங்களா, இந்தியாவோட பெஞ்ச் ஸ்ட்ரெங்க்த்தை.. அப்பிடின்னு மார்தட்டிக்கலாம்..
SUREஷ் (பழனியிலிருந்து) said...
//கிரிக்கெட் வாழ்க
பெண்கள் கிரிக்கெட் வாழ்க//
மருத்துவரே... அப்பிடி போடுங்க அருவாள.
பேநா மூடி said...
//Ippadiyavadhu cricket mogam tholaindhal sari//
இப்பிடித் தான் பலரும் எதிர்பார்த்திட்டு இருக்காங்க; தொலையவில்லையென்றாலும் மற்ற விளையாட்டுகளுக்கு கிடைக்க வேண்டிய முக்கியத்துவம் இனிமேலாவது சரியாக கிடைத்தால் நல்லதே.
முகிலன் said...
//பாத்தீங்களா, இந்தியாவோட பெஞ்ச் ஸ்ட்ரெங்க்த்தை.. அப்பிடின்னு மார்தட்டிக்கலாம். இதுலதான் நீங்க இந்தியன் செலக்சன் கமிட்டியோட சமயோசிதத்தைப் பாராட்டணும்//
நல்லா கிளப்புறாய்ங்க பீதிய... :) இந்தியா ஆட்டத்த பாக்கிறதுக்கு பதில் 'சுறா'வ பாத்திரலாம் போல.
வணக்கத்திற்குரிய அண்ணா,
மே.இ தீவில் இந்தியா தோல்வி அடையக் காரணங்கள் என்னவென்று சிந்திக்கையில் எனக்கென்னவோ
ஆஸிக்கு எதிரான முதல் சூப்பர் 8 போட்டியில் டாஸ் வென்ற தோனி நமது பலமான மட்டைவீச்சு தேர்ந்தெடுக்காமல் களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்ததும் ஒரு காரணம் என்று தோன்றுகிறது.
இரண்டாவது தோல்விக்குக் காரணம் [முதல் தோல்வியின் பாதிப்பு] மனபலம் இல்லாதது என்றும் நினைக்கிறேன்.
// violetisravel said...
வணக்கத்திற்குரிய அண்ணா,
மே.இ தீவில் இந்தியா தோல்வி அடையக் காரணங்கள் என்னவென்று சிந்திக்கையில் எனக்கென்னவோ
ஆஸிக்கு எதிரான முதல் சூப்பர் 8 போட்டியில் டாஸ் வென்ற தோனி நமது பலமான மட்டைவீச்சு தேர்ந்தெடுக்காமல் களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்ததும் ஒரு காரணம் என்று தோன்றுகிறது.
இரண்டாவது தோல்விக்குக் காரணம் [முதல் தோல்வியின் பாதிப்பு] மனபலம் இல்லாதது என்றும் நினைக்கிறேன்.
//
நீங்க சொல்றதும் ஒரு வகையில் சரி தான்.
என்னைக் கேட்டால்... காலங்காலமாக அதுவும் குறிப்பக மே.இ. தீவில் Bouncer களுக்கு நம்மாளுங்க திணறுவதே இந்த முறையும் தொடர்ந்திருக்கிறது.
அணி வீரர்களுக்கிடையே சரியான புரிந்து கொள்ளுதல் இல்லாததும் ஒரு குறையே; ஐ.பி.எல் லின் தாக்கம், களைப்பு பிற காரணங்கள்.
மே.இ.தீவுகளின் ஆடுகளங்களில் சரியான பயிற்சி மேற்கொள்ளாததும் மற்றொரு முக்கியமான விஷயம். போட்டிகள் துவங்கும் முன்னர் பிற அணிகள் பயிற்சி ஆட்டங்கள் ஆடின... இந்திய அணியைத் தவிர. http://www.cricinfo.com/world-twenty20-2010/content/series/456094.html?template=fixtures இந்த LINK ல அத பாக்கலாம். அவ்ளோ தெனாவட்டு நம்மாளுங்களுக்கு
Post a Comment