November 12, 2008

இசைப்புயல் ரஹ்மானும் இசைமாமேதை பீத்தோவனும் இணையும் Yuvvraaj.

இசை உணர்வுகளை, உள்ளங்களை இணைக்கிறது-இது எங்கேயோ படித்தது.

இசை அன்பை/காதலை ஒன்றுசேர்க்கிறது/உறுதிப்படுத்துகிறது (Music binds love) - இது தான் திரு.சுபாஷ் காய் அவர்களின் புதிய இந்தித் திரைப்படமான (YUVVRAAJ)யுவ்ராஜின் கருப்பொருள்.

திரு.ரஹ்மான் புகழ்பெற்ற பாடலாசிரியர் திரு.குல்சார்(Omkara, Jaan E- Mann, Guru, Yuva போன்றவற்றுக்கு எழுதியிருக்கிறார்) மற்றும் இயக்குனர் திரு.சுபாஷ் காய் அவர்களுடன் இணைந்து ஒரு அற்புதமான இசைக்காவியத்தைப் படைத்திருக்கிறார்.இம் மும்மூர்த்திகள் இணைவது இது தான் முதல்முறை.ஏற்கெனவே தால் (Taal)(தாளம் தமிழில்) என்ற திரைப்படத்தை இசைமழை ஆக்கியவர்கள் தான் இயக்குனர் சுபாஷ் காயும் இசைப்புயல் ரஹ்மானும். அத்தனை அருமையான இசைத் தொகுப்பு மற்றும் கிராமிய வண்ணம் கொடுத்திருந்தார்கள் தால் திரைப்படத்தில்(தாலில் ஐஸ்வர்யா ராயின் அழகும் படத்திற்கு மெருகேற்றியது)
தங்களுக்குள் அடித்துக் கொண்டிருக்கும் ஒரு குடும்பத்தின் மூன்று சகோதரர்களை(சல்மான் கான்,அனில் கபூர்,ஷாயேத் கான்) தனது செல்லோ (Cello) இசைக்கருவியின் இசையால் ஒரு பெண்(கட்ரினா கைஃப்) எப்படி ஒன்று சேர்க்கிறாள் என்பதே கதை.

இத்திரைப்படத்திற்கு வார்த்தையால் விவரிக்க முடியாத இசையால் மனதை லயிக்க வைத்திருக்கிறார் ரஹ்மான்.இந்த திரைப்படத்திற்கான கதையை வடிவமைத்ததுமே ரஹ்மான் தான் இயக்குனர் சுபாஷ் காய்க்கு நினைவு வந்ததாம்(தமிழர்கள் நிச்சயமாகவே பெருமைப் பட்டுக் கொள்ள வேண்டிய விஷயம்)
மற்றொரு இசை மாமேதையான பீத்தோவனின் உலகப் புகழ் வாய்ந்த "FIFTH OF BEETHOVAN" என அழைக்கப்படும் "Symphony" இசையையும் ரஹ்மான் இணைத்திருக்கிறார் முதல் பாடலிலேயே.(சல்மான் அறிமுகமாகும் காட்சி) இதற்கு சிரீனிவாசமூர்த்தி அவர்களின் "CHENNAI STRING ORCHESTRA" சிம்பொனி முழுவடிவம் கொடுத்திருக்கிறார்கள்.

"FIFTH OF BEETHOVAN" என்ற இசையை பீத்தோவன் Prince Franz Joseph von Lobkowitz என்பவருக்காக இசைத்தபடியால் இந்த திரைப்படத்தில் இளவரசாக(இந்தியில் yuvraaj என்றால் இளவரசு) நடிக்கும் சல்மானுக்கு ரஹ்மானால் இந்த இசை தேர்ந்தெடுக்கப்பட்டதாக தெரிகிறது.

"Tu Meri Dost Hain" என்ற பாடலில் வரும் செல்லோவின் (cello) இசை புல்லரிக்க வைக்கிறது.குல்சார் நட்பின் ஆழத்தை அருமையான வரிகளால் அழகுபடுத்தியிருக்கிறார்.இந்த பாடலில் ரஹ்மானின் குரல் அற்புதம்.அதற்கு ஈடு கொடுத்து பாடியிருக்கிறார்கள் ஷ்ரேயா கோஷலும் தமிழில் வாரணம் ஆயிரம்,சுப்பிரமணியபுரம்,அழகிய தமிழ் மகன்(மதுரைக்கு போகாதடி பாடல்) போன்றவைகளில் பாடியிருக்கும் பென்னி தயாளும்.

"Zindagi" பாடலை தனியாக நம்மவர் சிரீனிவாஸ் பாடிருக்கிறார்.குல்சார் தனது வார்த்தை ஜாலத்தை இதிலும் காட்டியிருக்கிறார்.அருமையான ஒரு மேற்கத்திய மற்றும் இந்திய இசைக்கலவை (Fusion)இதிலும் வரும் செல்லோவின் (Cello string pluckings) இசை மனதைக் கொள்ளைக் கொள்கிறது.

"Manmohini Morey" என்ற மற்றுமொரு Fusion ஐ விஜய் பிரகாஷ் பாடியிருக்கிறார்.கர்நாடக சங்கீத ஆலாப்களால் மனதை நிறைக்கிறார்.

"Dil ka rishta" விலும் ரஹ்மானின் குரல் அற்புதம். பின்னணி (Backing vocals) பாடியிருக்கும் Clinton, suzanne, Vivienne, Naresh, Benny and Blazze அருமை.

"Shano Shano" பாடலிலும் "Dil ka rishta" விலும் வரும் ஆங்கில வரிகளை ரஜினியின் சிவாஜியில் THE BOSS பாடலைப் பாடியிருக்கும் "BLAZZE" எழுதியிருக்கிறார்."Shano Shano" சற்றே துள்ளல் இசை வகையைச் சார்ந்தது.பலர் இணைந்து பாடியிருக்கும் இதில் கார்த்திக்கும் குரல் கொடுத்திருக்கிறார்.
Sound Engineer and designer ஷ்ரீதரை எப்படி மறக்கவியலும்?இது அவர் சொன்னது...
"I think its gonna rock,well,it's gonna orchestrate...
it's going to reach a lot of people...and touch their minds and souls."

இசை ஒருங்கிணைப்பு(Music Co ordination) செய்த "NOELL JAMES" அவர்களின் பங்களிப்பும் எப்போதும் போல அருமை.

மொத்தம் 9 பாடல்கள்...இந்த வருடத்தின் ஒரு அற்புத இசைக்காவியம் இது.

இதனை அளித்த திரு.ரஹ்மான்,திரு.சுபாஷ் காய்,திரு.குல்சார் மூவருக்கும் இதயம் கலந்த நன்றி.
(ரஹ்மானின் இந்தி கஜினிக்காக காத்திருக்கிறேன்)
பாடல்களுக்கு இங்கே சொடுக்கவும்.

படத்தின் ஒரு முன்னோட்டம் இங்கே youtube வீடியோவில்


திரைப்படத்தின் ஒரு சில புகைப்படங்கள் இங்கே


1 comment:

GERSHOM said...

அத்தான்...நீங்க தான் ஆளு...கும்புடுறேன் சாமியோ !

Post a Comment

Related Posts with Thumbnails