February 11, 2009

Grey's Anatomy தொடருக்கு பின்னடைவு


2005 முதல் abc நிறுவனம் தயாரித்து ஒளிபரப்பி வருகின்ற மருத்துவ தொலைக்காட்சி தொடரான Grey's Anatomy ல் Dr.Izzie Stevens கதாபாத்திரத்தில் நடித்த Katherine marie Heigl ம் Dr.George O'Malley கதாபாத்திரத்தில் நடித்த T.R. Knight ம் விடை பெறுகிறார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

வளைகுடா நாடுகளில் mbc4 தொலைக்காட்சி சானல் இந்த மருத்துவ தொடரை ஒளிபரப்பி வந்தது. மிக பிரபலமடைந்த இந்த தொடருக்கு ஆர்குட்டிலும் facebook ம் பலத்த வரவேற்பு உள்ளது. அதற்கென தனி Community களும் இருக்கின்றன.


Katherine marie Heigl with T.R. Knight


மருத்துவ பிண்ணனியோடு வாழ்க்கையின் தினசரி பிரச்சினைளையும் அடக்கிய ஒரு அற்புதமான தொடர் Grey's Anatomy. Anatomy=உடல் கூறு என்ற வாக்குக்கேற்ப உடல் கூறை அலசுவதோடு; வாழ்க்கையின் ஒவ்வொரு கூறையும் அலசியதே இதன் வெற்றிக்கு துணை செய்தது எனலாம்.அத் தொடரின் வசனங்கள் பல முறை நம்மையும் கூட தன்னம்பிக்கை பெறச் செய்வது தான் அதன் சிறப்பம்சம்.
வளைகுடாவில் (mbc4 சானல்) அதன் ஒளிபரப்பு ஒரு மாதமாக நிறுத்தப்பட்டிருக்கின்றது குறிப்பிடத்தக்கது.

2006 ல் Screen Actors Guild Award என்ற ஹாலிவுட்டின் உயரிய விருதையும் பெற்றுள்ளது.

Dr.Stevens கதாபாத்திரத்தில் தனது எளிமையான அதோடு சிறப்பான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த Katherine marie Heigl 2007 ல் சிறந்த நடிகைக்கான அமெரிக்காவின் Emmy விருதை வென்றார். Knocked up, 27 Dresses போன்ற ஆங்கில திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்ற இவர் தற்பொழுது Ugly Truth என்ற திரைப்படத்தில் நடித்து வருவதாலேயே தொலைக்காட்சியிலிருந்து விலகிச் செல்வதாக சொல்லப்படுகிறது.

எதுவாயினும் Grey's Anatomy ரசிகர்கள் ஏமாற்றம் அடைவது நிச்சயமே. Grey's Anatomy குறித்த மேலதிக விவரங்களுக்கு http://en.wikipedia.org/wiki/Greys_anatomy

Obstacles are put in your way for a reason to see if what you really want is worth fighting for.... Grey's Anatomy

Katherine Marie Heigl ன் சில புகைப்படங்கள் இங்கே; Youtube video அதன் கீழே



February 10, 2009

கிரிக்கெட்டில் இன்று சகோதரர்களின் தினம்

இலங்கையில் இந்தியா-இலங்கை இடையே நடைபெற்ற T20 கிரிக்கெட் ஆட்டத்தில் யாருமே எதிர்பாராத நிலையில் 7 முன்வரிசை ஆட்டக்காரர்கள் ஆட்டமிழந்த பின்னரும் இந்திய அணி பத்தான் சகோதரர்களால் வெற்றி பெற்றுள்ளது.

சுருக்கமான ஸ்கோர் இலங்கை 171/4 இந்தியா 174/7
ஆஸ்திரேலியாவில் நியுசிலாந்து அணியை ஆஸ்திரேலிய அணி ஹஸி சகோதரர்களின் அற்புத ஆட்டத்தால் வென்றதோடு இரண்டு தொடர் வெற்றிகளைப் பெற்று தொடரையும் 2-2 என சமன் செய்துள்ளது.

ஆஸ்திரேலியா இறுதிப்போட்டியில் வெற்றி பெறுவார்களானால் தொடரையும் கைப்பற்றும் நிலை உருவாகியுள்ளது. மைக்கேல் ஹஸி ஆட்டமிழக்காமல் 75 ஓட்டங்களும் டேவிட் ஹஸி 79 ஓட்டங்களும் எடுத்து ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு வழி செய்தார்கள்.

சுருக்கமான ஸ்கோர் நியுசிலாந்து 244/8 ஆஸ்திரேலியா 247/4

இந்த தொடரை வெல்லும் பட்சத்தில் ஆஸ்திரேலிய அணி ஒரு நாள் போட்டிகளின் தரவரிசையில் மீண்டும் முதலிடத்தை பெறும் வாய்ப்பு அதிகரிக்கும்.

தற்போது தென்னாப்பிரிக்கா 125 புள்ளிகளுடன் முதலிடத்திலும், ஆஸ்திரேலியா 122 புள்ளிகளுடன் இரண்டாமிடத்திலும், 120 புள்ளிகளுடன் இந்தியா மூன்றாமிடத்திலும் இருக்கின்றன.
இவற்றின் சந்தோஷம் ஒரு புறமிருந்தாலும்.இலங்கையில் நடந்து வரும் தமிழினப் படுகொலைகளால் மடிந்து வரும் உயிர்களும் ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீயினால் இதுவரை மரணமடைந்த 200 உயிர்களும் மனதை கனக்கச் செய்யாமலில்லை. இவை மாற வேண்டும் என பிரார்த்திப்பதைத் தவிர வேறென்ன செய்வேன் இறைவனே.

உயிர் காக்கும் CPR

சுல்தான் அவர்களின் பதிவைப் பார்த்ததும் CPR குறித்து பதிவிட வேண்டுமென்று நினைத்தேன்.

CPR-Cardio Pulmonary Resusicitation எனப்படும் உயிர் காக்கும் முதலுதவி குறித்து அனைவரும் அறிந்திருத்தல் அவசியம். நினைவிழந்து காணப்படுபவர் ஓரிரு நிமிடங்களில் சுய நினைவிற்கு திரும்பாவிட்டால் Mouth to Mouth Respiration மற்றும் Chest compressions அடங்கிய CPR-Cardio Pulmonary Resuscitation எனப்படும் உதவி மிக அவசியம்.

ஒருவர் தனது சுய நினைவினை கீழ்கண்ட நிலைகளில் இழக்கலாம்

>இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவு/கூடும் போது

>இரத்த அழுத்தம் குறைவு/ கூடும் போது

>உடலின் வெப்பநிலை குறைவு/கூடும் போது

>விபத்துகளினால் ஏற்படும் அதிக இரத்த இழப்பின் போது

>தலைக்காயத்தினால் ஏற்படும் இரத்தக் கசிவின் போது

>அதிர்ச்சியின் போது ( in a state of shock)

>வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தியினால் அதிக நீர் சத்து வெளியேறும் போது

>மின்சாரம் உடலில் பாயும் போது (Electric Shock)

>இருதய நோய்களினால் (உதாரணத்திற்கு CAD-Coronary Artery Disease போன்ற மாரடைப்பு ஏற்படுத்தும் வியாதிகளால் )

CPR செயல்படுத்துதல் தேவைதானா என்பதற்கு சிலவற்றை ஆரம்பத்தில் நாம் உறுதிப்படுத்திக் கொள்வதும், சில பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதும் அவசியம்.

>ஆபத்திலிருப்பவரை சற்றே பாதுகாப்பான இடத்திற்கு மாற்றுதல்உதாரணத்திற்கு மின்சார கசிவு மற்றும் தீ விபத்துகளின் போது மின்சார கம்பிகள், பெட்ரோல் போன்ற பின்விளைவுகளை ஏற்படுத்தும் இடங்களிலிருந்து அவரை அப்புறப்படுத்துவது (அவை உதவியளிக்கும் நமக்கும் எமனாக அமையலாம்)

>இரத்தக்கசிவை நிறுத்துதல்(இருக்குமானால்)

>நினைவிருக்கிறதா என உறுதி செய்தல்

>சுவாசிக்கிறாரா என்பதை நெஞ்சின் விரிவை வைத்தும் (Chest expansion), மூக்கு துவாரத்தினருகில் செவி மற்றும் உள்ளங்கையின் பின்புறத்தை வைத்தும் உறுதி செய்தல்

>உடலில் அசைவு ஏதுமிருக்கிறதா என உறுதி செய்வது.

சுவாசிக்கவில்லை, உடலில் அசைவே இல்லை என்றால் CPRஐ செயல்படுத்துவது மிக முக்கியமானது.
இவற்றை உறுதி செய்தவுடன் செய்ய வேண்டியவை

>அருகில் யாரேனும் இருப்பார்களெனில் உதவிக்கு அழைப்பது; ( தனிமையாகவும் CPR ஐ செயல்படுத்தலாம்)

>ஆம்புலன்சுக்கு உடனடியாக தகவல் கொடுப்பது.

இதன் பின்னரே CPR ஐ செயல்படுத்த வேண்டும்.

CPR ABC என்ற வரிசைக் கிரம அடிப்படையில் அமைந்த ஒரு கோட்பாடு.அதாவது A=Airway B=Breathing C=Circulation

முதலில்-Airway

சுவாசப்பாதை தடையில்லாமல் சீராக இருக்கிறதா என பார்த்தல் அவசியம்.

நினைவிழந்த நபரை சரிசமமான தரையில் அல்லது தட்டியில் நேராக கிடத்தி அவரது முன்னந்தலையையும் தாடையையும் பிடித்து தலையை நிமிர்த்த வேண்டும். இதனால் சுவாசப் பாதையை அடைத்துக்கொண்டிருக்கும் அவரது நாவு முன்பக்கமாக விழுந்து சுவாசப்பாதையை சீராக்கும்.
பின்னர் மூக்கின் துவாரம் மற்றும் வாய் சுவாசத்திற்கு தடையில்லாமல் சீராக இருக்கிறதா என உறுதிப்படுத்த வேண்டும். (ஏதேனும் பொருள்களினால் மூக்கு அடைபட்டிருந்தால், வாந்தி அல்லது பிற பொருள்களினால் வாய் நிறைந்திருந்தால் அவை அகற்றப்பட வேண்டும்.)

இரண்டாவதாக-Breathing

சுவாசப்பாதையை சரிசெய்த பின்னும் சுவாசம் சரியாகவில்லையெனில் பாதிக்கப்பட்ட நபரின் மூக்கினைப் பிடித்துக்கொண்டு வாயினை அவரது வாயின் மீது வைத்து( Mouth to Mouth Respiration) ஐந்து நொடி இடைவெளிகளில் இருமுறை வேகமாக காற்றை ஊத/உள்செலுத்த வேண்டும்.
மூன்றாவதாக-Circulation

ஒருவர் நினைவிழந்திருக்கும் சமயத்தில் இருதயம் சில நேரம் தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ செயலிழந்து அதினிமித்தம் இரத்த ஓட்டம் பாதிக்கப்படுகிறது.
மணிக்கட்டில் நாடித்துடிப்பு இல்லையென்றால் குரல் வளையின் இருபுறமும் நாடி துடிப்பினை(Carotid Pulse) நோக்குவதன் மூலம் இரத்த ஓட்டம் சீராக இருக்கிறதா இல்லையா என தெரிந்து கொள்ளலாம்.
நாடித்துடிப்பு இல்லையெனில் நெஞ்சின் மீது அழுத்தி (Chest Compressions) இருதயத்திற்கு அதிர்ச்சி கொடுப்பதன் மூலம் அதனை மீண்டும் செயல்பட வைத்து இரத்த ஓட்டத்தை சீர்செய்யலாம்.

Chest Compressions எப்படி அளிப்பது

விலா எலும்புகள் வந்து குவிகின்ற நெஞ்சின் மைய எலும்பின் (Sternum) இறுதிப் பகுதியில் ஒரு உள்ளங்கையை வைத்து அதன் மேல் அடுத்த கையையும் வைத்து 30 முறை தொடர்ச்சியாக அழுத்த வேண்டும்.
1-8 வயது வரையுள்ள சிறுவர்களுக்கு ஒரு கையினாலும் (30 முறை) , ஒரு வயதிற்கும் குறைவுள்ள குழந்தைகளுக்கு இரு விரல்களாலும் (5 முறை) அழுத்தினால் போதுமானது.
இவற்றின் பின்னரும் நினைவோ, சுவாசமோ, நாடித்துடிப்போ திரும்பவில்லை என்றால் மீண்டும் இருமுறை வாயோடு வாய் வைத்து சுவாசமளித்து நெஞ்சின் மீதான அழுத்துதலையும் மேற்கூறியபடி தொடர வேண்டும். இப்படியாக மருத்துவக்குழு வரும் வரை அல்லது மருத்துவமனையில் சேர்க்கும் வரை அல்லது மரித்து விட்டார் என முடிவு செய்யும் வரை செய்தல் அவசியம்.


மேலேயுள்ள படத்தை நகலெடுத்து உங்கள் அலுவலகங்களில் தகவல் தட்டிகளில் வைத்தால் மற்றவர்களுக்கும் உபயோகமாகயிருக்கும்.
pdf format ல் தரவிறக்கம் இங்கே செய்யவும்
மேலதிக விவரங்களுக்கு. resus.aus, resus.uk & search engine

February 09, 2009

வெப்பமாகுதலை (Global warming) தடுக்கும் முயற்சி

இந்தியா தொழில்நுட்பத்தில் முன்னேறியிருந்தாலும்; முன்னெப்போதுமில்லாத அளவு தொலை தொடர்பில் வளர்ச்சி கண்டிருப்பினும் (செல்போன் இல்லாத நபரே இல்லையெனலாம்) 50 வருடத்திற்கு முன்னிருந்த அதே வளமையும், பசுமையும்,செழுமையும், ஆரோக்கியமும்இன்று இல்லை என்பதே வல்லுநர்களின் கருத்து.

Global warming - உலகம் வெப்பமாகுதல் இன்றைய காலகட்டத்தின் மிக முக்கியமான பிரச்சினையில் ஒன்று. நமது சுற்றுப்புறத்தை நாமே சீரழித்து வருவதாகவே எனக்கும் சில ஆண்டுகளாக தோன்றுகிறது. பிற மாநிலங்களை விடுவோம்; மெட்ரோ என அழைக்கப்படும் சென்னை, மும்பை, பெங்களூரு, தில்லி, கல்கத்தா நகரங்களில் நாம் காணும் குப்பைகளும், வீதிகளில் வழிந்தோடும் கழிவு நீரும் உலக அரங்கில் நமது புகழ் பாடுகின்றன.

சென்னை மெரினாவே குப்பைகளால் அலங்கோலமாக காட்சி தருவது இன்னும் வேதனை. இந்தியாவை குப்பை மேடாக்குவதில் படித்தவர்கள், படிக்காதவர்கள் என்ற பாகுபாடு இன்றி இரு தரத்தினரும் இத்தவறைச் செய்கின்றனர்.


எனது பழைய பதிவில் கூறியபடி பிளாஸ்டிக் குவளைகளில் தேனீர் மற்றும் குளிர்பானங்கள் அருந்தும் நம்மில் சிலர் அதனை அலேக்காக ஓடும் ரயிலில் இருந்து அப்படியே வீசியெறிவதும், பேருந்து பயணச் சீட்டுகளை பயணம் முடிந்ததும் காற்றில் பறக்க விடுவதும், போதை வஸ்துக்களை மென்றுவிட்டு நடைமேடைகள் மற்றும் திரையரங்குகளில் உமிழ்வதும்.வேர்க்கடலைகளை வயிற்றினுள் தள்ளிவிட்டு அதன் தோடுகளை ஹாயாக பேருந்திலும், ரயிலிலும், திரையரங்குகளிலும் இருக்கைகளின் அடியிலே தள்ளுவதும் போன்ற தவறுகளை நாமே செய்கிறோம்.

...இவற்றை நிறுத்துவதோடு

# பிளாஸ்டிக் பையை நம்பாமல் துணிகளினாலான பையை கடைகளுக்கு செல்லும் போது எடுத்துச் செல்வது
# செல்போன் சார்ஜ் ஆகிவிட்டால் மின்சாரத்திலிருந்து துண்டிப்பது
# வேலையற்ற ஓய்வு சமயங்களில் கணினியை turn off செய்வது
# ஆளில்லாத அறைகளில் மின்சார ஒளி விளக்கை நிறுத்துவது
# அவசிய தேவைகளுக்கு மட்டும் கார் அல்லது இரு சக்கர வாகனம் உபயோகித்தல் மற்ற நேரங்களில் சைக்கிள் உபயோகித்தல்
# தேவையான அளவு மட்டும் நீரை செலவழிப்பது
# மற்றவர்களுக்கும் உலகம் வெப்பமாகுதல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது...

...போன்ற சின்னச் சின்ன விஷயங்களை கடைபிடிப்போமென்றால் உலக வெப்பமாகுதலை நம்மால் இயன்ற மட்டும் தடுக்கவியலும் அதோடு இன்னும் மின்சாரமில்லாத கிராமங்களுக்கு மின்சாரமும் வழங்க இயலும்; மட்டுமல்லாமல் நாம் நோயற்ற வாழ்வை வாழ்வதோடு நமது வருங்காலத்தினரும் அனுபவிக்கும்படி செய்யலாம்.

இதற்கான முயற்சியில் NDTV தொலைக்காட்சி இறங்கியிருப்பது வரவேற்கத்தக்கது.

மும்பை நவம்பர் 2008ல் தீவிரவாதிகளின் தாக்குதலின் போது பாரபட்ச ஒளிபரப்பும், ஈழத்தமிழர்கள் விஷயத்தை இருட்டடிப்பும் செய்யும் தனியார் தொலைக்காட்சி NDTV என்றாலும் அவர்களின் இந்தமுயற்சி பாராட்டப்பட வேண்டிய ஒன்று.

நேற்றைய முன்தினம் (07.02.2009) இந்திய நேரப்படி இரவு 7 மணி முதல் நேற்று (08.02.2009) இரவு 7மணி வரை NDTV தொலைக்காட்சியில் இந்தியாவை பசுமையாக்கும் ஒரு முயற்சியாக Greenathon என்ற 24 மணி நேர நேரடி ஒளிபரப்பை டொயாட்டோ நிறுவனத்தின்உதவியுடன் நடத்தினார்கள்.

உலக வெப்பமாகுதலை (Global Warming) என்னென்ன முறைகளால் தடுக்கலாம் எனவும், சுற்றுப்புறத்தை நாமே எவ்விதம் தூய்மையாக வைத்துக்கொள்ளலாம் எனவும் பல கருத்துக்கள் சமூக நல ஆர்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் வட இந்திய சினிமா பிரபலங்களால் முன் வைக்கப்பட்டன.

பொதுமக்கள் அனைவர் கவனத்தையும் ஈர்க்கும் விதம், இடையிடையே வட இந்திய சினிமா பிரபலங்களின் கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.(சந்தடி சாக்கில் மக்களிடம்விழிப்புணர்வு ஏற்படுத்தலாம் என்ற நம்பிக்கையில் !!)

அதோடு மின்சாரமில்லாத கிராமங்களில் மின்சார வசதி ஏற்படுத்தும் விதம் உதவியை நாடியும் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் IPL சேர்மன் லலித் மோடி ஒரு கிராமத்தை தத்து எடுத்து அதற்கான உதவிகளை செய்வதாக உறுதியளித்தார்.

இயக்குனர் P. வாசுவின் குசேலன் திரைப்படத்தின் ஹிந்தி Remake ல் பிரியதர்ஷன் இயக்கத்தில் நடித்துள்ள நடிகர் ஷாருக்கானின் Billu Barber திரைப்படக்குழு 5 கிராமங்களுக்கு மின்சார உதவியளிப்பதாக ஷாரூக் உறுதியளித்தார்.

ஏறக்குறைய 2 கோடி ரூபாய் நிதி திரட்டப்பட்டது. அவை அனைத்தும் IPCC (Intergovernmental Panel on Climate Change) சார்பாக நோபல் விருது பெற்ற திரு.பச்சோரி(Dr. R.K Pachauri) அவர்கள் துணை வேந்தராக பணிபுரியும் TERI(The Energy and Resource Institute) என்ற தனியார் தொண்டு நிறுவனத்திடம் வழங்கப்படுகிறது.

இதன் ஒருபகுதியாக, தென்னிந்திய பிராந்தியமான புதுச்சேரி பள்ளி ஒன்றில் 24 மணி நேரம் தொடர்ச்சியாக வினாடி வினாவும், மேற்கு பிராந்தியமான மும்பையில் தாதர் கடற்கரை சுத்தமாக்கும் பணியும், வடபிராந்தியமான தில்லியில் 24 மணி நேர தொடர் ஓட்டம் மற்றும் யமுனா நதியை சுத்தமாக்கும் பணியும் நடைபெற்றன.

Greenathon குறித்த மேலும் விவரங்கள் இங்கே

நாம் மனது வைத்தால் இந்தியாவை பசுமையாக்க முடியும் என்றே நம்புகிறேன்.

February 08, 2009

கிரிக்கெட்: இலங்கை தொடர் ஒரு பார்வை

இந்திய அணியின் தொடர் 9 வெற்றிகளுக்கு இலங்கை அணி இன்று பெற்ற வெற்றி முற்றுப்புள்ளி வைத்துள்ளது. கடந்த மூன்று ஆட்டங்களிலும் பூவா தலையா வென்று முதலாவது மட்டை வீசிய அணிக்கே (இந்தியா) வெற்றி கைவசமானது. எதிர்பார்த்தபடியே இந்த தொடரின் இறுதி ஆட்டத்திலும் பூவா தலையா வென்று முதலில் ஆடிய அணியே (இலங்கை) வெற்றியும் பெற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் ஆட்டத்தில் இரண்டாவதாக மட்டை வீசிய இந்திய அணி வெற்றி பெற்றிருந்தாலும் அத்தனை எளிதில் கிட்டிய வெற்றியல்லவே அது. இலங்கை அணி ஆட்டத்தை 48 ஆவது ஓவர் வரையிலும் கொண்டு சென்றனர்.

கடந்த ஒரு சில வருடங்களாகவே நிர்ணயிக்கப்பட்ட ஓட்டங்களை எடுப்பதில் (Chasing) தடுமாற்றம் காட்டி வரும் இந்திய அணி இன்று மீண்டும் சொதப்பியது. அதோடு அதீத நம்பிக்கையில் அடித்து ஆட முற்பட்ட சேவாக்,கம்பீர்,ரோஹித் ஷர்மா போன்றோரின் விக்கெட்டுகளும் இலங்கையின் வெற்றிக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தன எனலாம்.

பங்களாதேஷ், பாகிஸ்தான் அணிகளுடனான தொடர்களில் சிறப்பாக ஆடிய ஆல் ரவுண்டர் தில்ஷான் இந்தியாவிற்கு எதிரான இத்தொடரிலும் தொடர்ந்து சிறப்பாக ஆடியது குறித்து இலங்கை அணி சந்தோஷப்படப் பட்டுக் கொள்ளலாம். சங்கக்காராவும் அவரின் சிறப்பான ஆட்டத்தை இந்த தொடரில் வெளிப்படுத்தினார்.

கடைசி ஆட்டத்தில் தில்ஷானுடன் இணைந்து சங்கக்காரா குவித்த 143 ஓட்டங்கள் தான் வெற்றிக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தது.தில்ஷானின் சிறப்பான ஆட்டம் அவருக்கு எதிர்வரும் 20-20 ஆட்டத்திற்கான அணித்தலைவர் பதவியையும் பெற்றுத்தந்துள்ளது.

தொடர்ந்து மோசமாக ஆடிவரும் இலங்கை அணித்தலைவர் ஜெயவர்தனே 20-20 அணியில் கூட சேர்க்கப்படவில்லை. இந்த தொடரின் ஐந்து ஆட்டங்களிலும் அவர் எடுத்த ஓட்டங்கள் முறையே 11,52,30,28,1

ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் வாசிம் அக்ரமின் அதிக விக்கெட்டுகளான 502 ஐ கடந்த முரளிதரனின் சாதனையும் மறக்கவியலாது, அதினிமித்தம் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

இந்திய அணியைப் பொருத்த வரையில் நடுவர்களின் தவறான முடிவினால் ஓட்டங்கள் குவிக்கவியலாத சச்சினைத் தவிர அனைவரும் தங்கள் பங்கை சரிவர செய்தனர் என்றே கூறலாம்.
இங்கிலாந்து தொடரைத் தொடர்ந்து இந்த தொடரிலும் யுவ்ராஜ் சிங் தொடர் நாயகன் விருது பெற்றுள்ளார்.

இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட ஓட்டங்களை எடுப்பதில் (Chasing) தங்களை சற்றே சரிப்படுத்துவார்களெனில் உலகின் தலைசிறந்த கிரிக்கெட் அணியாகும் நாள் வெகு தொலைவிலில்லை.
புகைப்படங்கள் நன்றி: cricinfo

February 06, 2009

கன்னியாகுமரியின் சூர்ய அஸ்தமன புகைப்படங்கள்

ஜனவரி 30, காந்தி நினைவு தினத்தன்று கன்னியாகுமரியில் சூர்ய அஸ்தமன சமயத்தில் எடுத்த புகைப்படங்கள் இங்கே
At 18:04:16 hrs
At 18:06:21
At 18:06:58
At 18:08:15
At 18:08:52
At 18:09:02
At 18:09:46
At 18:10:08
At 18:11:20
At 18:12:10
At 18:12:57
At 18:13:24
At 18:13:54
At 18:14:03
At 18:14:24
At 18:14:46

February 05, 2009

சென்னை பேருந்து 50 காசு-கோயம்பேடு-நேர்மை

சென்ற வாரம் சென்னை சாந்தோமில் உள்ள செவிலியர் கழகத்திற்கு (Tamilnadu Nurses and Midwives Council) கனடாவின் தேவைக்காக மீண்டும் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படவே, பாரிமுனையிலிருந்து வேளச்சேரி செல்லும் பேருந்தில் ஏறினேன். நடத்துனரிடம் ஐந்து ரூபாய் கொடுத்து பயணச்சீட்டு பெற்றால் 3.50 போக மீதி கிடைக்கவில்லை. சார் டிக்கெட்டு காசு மீதி அப்படின்னு லேசா சவுண்டு விட்டா... என்னப்பா சில்லறையா தரது இல்லயா? எத்தன பேருக்குத் தான் நான் சில்லற குடுக்கிறது? என பேருந்திலிருக்கும் அத்தனை பேர் செவியிலும் விழுகின்ற படி ஒரு கத்தல் (500 ரூபா நோட்டா தந்து விட்டேன் என நான் எனது மனதிற்குள் நினைத்துக் கொண்டேன்) சலிப்புடன் ஒரு ரூபாயை எடுத்து இந்தா... என்கிறார். சார் 50 காசு குறயுது என்றால்... இருந்தா நீ குடு ஒரு ரூபா தரேன்கிறார்.
------------------------------------
போகும் போது தான் அப்படியென்றால், சாந்தோமிலிருந்து பாரிமுனைக்கு திரும்பி வருகையிலும் அதே 50 காசு விஷயம் தான். கேட்டால் அந்த நடத்துனரும் அதே பதிலளிக்கிறார் "50 காசு குறயுதா இருந்தா நீ குடு ஒரு ரூபா தரேன்" அப்போது தான் ஒரு விஷயம் விளங்கியது,அந்த காசுகள் நடத்துனரின் பாக்கெட்டிற்கென்று! 50 காசு சென்னையில் பிச்சைக்காசு ஆகி விட்டது என்றே தோன்றுகிறது.(பிச்சைக்காரன் கூட வாங்குவதில்லையோ என்னமோ?)50 காசு புழக்கம் இன்று வெகுவாக குறைந்து வருவதாகவும் தோன்றுகிறது. 25 காசை செல்லாக் காசு ஆக்கியது போன்று 50 காசையும் ஆக்குவார்களோ?
------------------------------------
செவிலியர் கவுன்சில் போனால் அங்கு இருந்த களேபரம் இன்னும் மனக்கஷ்டத்தை ஏற்படுத்தியது. 7 ஆண்டுகள் முன் மல்லுக்கு நின்ற அதே குறுகலான நடைபாதையுடைய பழைய அலுவலகம்;(50 பேர் நிற்பதுவே பெரிய விஷயம்) அதில் சான்றிதழ்களை பதிவு செய்ய வந்திருந்த மாணவிகள் கும்பலாக சான்றிதழ்களுக்கு கூட மதிப்பளிக்காமல் அவற்றை முட்டி முனங்கி கவுண்டரினுள் திணித்துக் கொண்டிருந்தார்கள். உள்ளிருந்து வரிசையில வாங்கனு பதிவாளர் சொல்றது யார் காதிலும் விழுந்ததாக தெரியவில்லை.

நானும் பொருத்துப் பொருத்துப் பார்த்து ஒரு சமயத்தில். என்ன எல்லாரும் படிச்சவங்க தான வரிசையில வரலாம்லனு சவுண்டு விட்டுப் பார்த்தேன்...ம்ஹூம் யாரும் கேட்டப்பாடில்லை.கவுண்டரினுள் சான்றிதழ்களுடன் பல கைகள் நுழையவே கடுப்பாகிய பதிவாளர் இருமுறை வெளியே வந்து வரிசையை சரிப்படுத்தி விட்டுச் சென்றார்.5 நிமிடமாகவில்லை மீண்டும் நெரிசல்.

அதனிடையில் 35வயது மதிக்கத்தக்க ஒரு பெண் வரிசையில் நில்லாமல் சான்றிதழை நீட்டினார்.ஏங்க இத்தன பேர் வரிசையில் நிற்கும் போது நீங்க மட்டும் என்ன என்று கேட்டுவிட்டேன்.அவ்வளவு தான் பெண்மணிக்கு கோபம் தலைக்கு ஏறி...நீ யாரு கேக்கிறதுக்கு;நீ டிப்ளமோ முடித்திருக்கிறாய் நீ பேசாத.நான் டிகிரி முடித்திருக்கிறேன்; இப்படித் தான் பண்ணுவேன் என என்னைக் குறித்து முழுதும் அறியாமலே கத்த ஆரம்பித்து விட்டார்.
பின்னர் தான் வந்தது எனக்கு கோபத்தின் உச்சம்; பதிலுக்கு நான் ஏங்க பட்டம் பதவியெல்லாம் முக்கியமில்ல, எப்படி இருக்கோம்ங்கிறது தான் முக்கியம்; வரிசையில வாங்கனு சொல்லவே... அருகிலிருந்த பிற மாணவிகளின் உறவினர்களும் என்னோடு சேர அம்மணி ஜகா வாங்கினார்.
------------------------------------
இன்று படித்தவர்களுக்கு தலைக்கனம் எப்படித்தான் வருகிறதோ என தெரியவில்லை.அதுவும் பிறரை முழுமையாக அறிந்து கொள்ளுமுன்பே அவரைக் குறித்தான அபிப்ராயங்களும் கூட முன்வைக்கப்படுவது இன்னும் வருத்தத்திற்குரிய விஷயம். நண்பர்களுள்,வீடுகளினுள் இதினிமத்தமே பிரச்சினைகள் தோன்றுகின்றன. அதைக் களைந்தால் வாழ்வு களிப்பு பெறும்.

"புறந்தூய்மை நீரானமையும் அகந்தூய்மை
வாய்மையால் காணப்படும்"
-----------------------------------------
சாந்தோமில் பணியை முடித்துவிட்டு பெங்களூரு செல்ல கோயம்பேட்டில் கர்நாடக மாநில விரைவுப் பேருந்து ராஜஹம்சாவிற்காக கவுண்டரில் 297 ரூபாய் டிக்கெட்டிற்கு ரூ.300 கொடுத்துவிட்டு சில்லறை கேட்டால் அங்கும் இல்லையாம் சில்லறை. என்ன கொடும சார் காலைல தமிழக பேருந்தில் தான் அப்படினா முன்பதிவு செய்யும் கர்நாடகா கவுண்டரிலுமா இப்படி என நொந்து கொண்டேன். (சில்லறை விஷயம் பெரிய விஷயம் தான் போல)
-----------------------------------
9 மணிக்கு கோயம்பேடு பேருந்து நிலையம் சேர்ந்தேன். இரவு 11:45 ற்கு தான் பயணம்.Internet Cafe ஏதும் இருக்கிறதா என பார்க்கலாமென கோயம்பேடு பேருந்து நிலைய நடைபாதையில் நடக்க ஆரம்பித்தேன்...பேருந்து நிலையம் முழுவதும் மூன்று முறை சுற்றி வந்து விட்டேன்; ஒன்றும் சிக்கவில்லை. சரி வெளியே சென்று தேடலாமென்றால் அங்கேயும் ஏதுமில்லை. இத்தனை பெரிய பேருந்து நிலையத்தில் ஒரு Internet Cafe கூடவா இல்லை என சலித்துக்கொண்டு ipod தான் கதியென காதில் மாட்டிக்கொண்டேன்.

கோயம்பேட்டில் Internet Cafe இருக்கிறதென்றால் தெரியப்படுத்துங்கள் நண்பர்களே.
Related Posts with Thumbnails