April 06, 2009

விகடனுக்குமா டப்பிங் ஆர்ட்டிஸ்ட் பஞ்சம்!

தமிழ் சினிமாக்களில் நடிக்கும் பெரும்பாலான நடிகைகள் வெறும் வாயசைப்பதோடு சரி,மற்றவை எல்லாம் டப்பிங் ஆர்ட்டிஸ்டுகளால் பேசி முடிக்கப்படுகின்றது.இது தான் கடந்த 15 வருடமாக நடந்து வருகிறது என்றே நினைக்கிறேன்.

கடந்த 10 வருடமாக தமிழ் சினிமா நாயகிகளுக்கு தனது குரலால் பெருமை சேர்த்தவர்களில் சவிதா குறிப்பிடத்தக்கவர்.டப்பிங் ஆர்ட்டிஸ்டுக்கான தமிழக அரசின் முதல் விருதை வென்றவரும் சவிதா தான்.

1998 முதல் கவனித்து கேட்டு வருகிறேன் டப்பிங் கலைஞர் சவிதாவின் குரலை.நல்ல குரல்வளம் கொண்டவர்.சிம்ரன் முதல் அசின் வரை பலருக்கு குரல் கொடுத்திருக்கிறார் சவிதா.

இவரது உச்சரிப்புகளில் பெரிதாக தவறு காணப்படுவதில்லை அதோடு ரசிக்கும் படி இருக்கிறது,என்றாலும் பல நாயகிகளுக்கும் இவரது குரலையே கேட்டு கேட்டு சலித்து போனதாக உணர்கிறேன்.

பல நேரங்களில் சின்னத் திரையிலோ,பெரிய திரையிலோ சினிமா ஓடிக்கொண்டிருந்தாலும் கண்களை மூடி குரலை மட்டும் ரசிக்கும் (லூசுத்தனமான?) பழக்கம் எனக்கு உண்டு.

அந்த வகையில் விகடன் குழுவின் முதல் திரைப்படமான 'சிவா மனசில சக்தி' திரைப்படத்தின் முன்னோட்டத்தை தொலைக்காட்சியில் கடந்த வாரம் கண்டும் காணாமல்(அதாங்க கண்ண மூடிக்கிட்டு) ரசிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

நாயகி சக்தி பேசியதுமே புரிந்தது சவிதாவின் குரல் தான் என,முன்னோட்டத்தை மேலும் இரு தடவை(நாட்கள்) கூர்ந்து கேட்டதும் அது டப்பிங் ஆர்ட்டிஸ்ட் சவிதாவின் குரலே தான் என தெளிவாகியது.

தமிழ் திரைப்படத் துறையில் தமிழ் பேசுபவர்களுக்கு பஞ்சம் போலும் என நினைத்துக் கொண்டேன்.ஆனால் விகடனுக்குமா இந்த கதி என்ற போது தான் சிறிய நெருடல்.

வேற்று மாநில நாயகிகள் சிலர்(ஏன்,நாயகர்கள் கூட!) குறிப்பாக கேரளத்திலிருந்து வருபவர்கள் அவர்களது சொந்த குரலிலேயே டப்பிங் பேசுகிறார்கள்(நயன் நிச்சயமாக இல்லை என நினைக்கிறேன்!)

இந்த நிலையில் தமிழ் தெரிந்த நாயகிகள் பலர், பிறரின் குரலிலேயே காலத்தை தள்ளுகிறார்கள். தமிழ் நாயகிகள் எல்லோருக்கும் தமிழில் தெரிந்த ஒரே வார்த்தை "பண்ணி"யாக தான் இருக்க வேண்டும்;(பேட்டிகளில் இப்படித் தானே பேசுகிறார்கள்)மேக்கப் பண்ணி,ஆக்ட் பண்ணி,டைரக்ட் பண்ணி,ஷூட் பண்ணி,காமெடி பண்ணி,மியூசிக் பண்ணி,சாங் பண்ணி,டான்ஸ் பண்ணி... அட போங்கப்பா.

பாவம் 'பண்ணி'யை மட்டும் வைத்துக் கொண்டு அவர்கள் என்ன செய்வார்கள்.

(சவிதாவை குறித்து அறியாதவர்கள்,தங்கம் ஆன்லைன் இணையத்திற்கு அவர் அளித்த பேட்டியிலிருந்து மேலும் அறிந்து கொள்ளலாம்.வாழ்த்துக்கள் சவிதா மேடம்)

http://www.thangamonline.com/Cinema%20Interviews/files/SavithaInterview.htm

10 comments:

Suresh said...

சூப்ப்ர ம்ச்சான்

Suresh said...

வோட்டும் போட்டாச்சு

டக்ளஸ்....... said...

நல்ல ஆய்வு எட்வின்...

rksrini said...

savitha never dupped for asin.asin always doing own dubbing.

ஆ.ஞானசேகரன் said...

தெரியாத மேட்டர்

கிரி said...

நம்ம நடிகைகள் சொந்த குரலில் பேசினா எப்படி இருக்கும்னு கண்ணை மூடி யோசித்து பார்த்தேன் ..ஐயயோ! ரணகளமா இருக்கும் போல இருக்கே

எட்வின் said...

நன்றி சுரேஷ்,டக்ளஸ்,ஸ்ரீனி,ஞானசேகரன்,கிரி, (எல்லோர் பேருக்கும் முன்னாடி திரு போட்டுக்கிறேன்)

rksrini said...

//savitha never dupped for asin.asin always doing own dubbing//

In an interview Savitha herself said i hav dubbed for "ASIN".

Agreeing that recently Asin is doing her own dubbing.Asin knows 9 languages she said in an interview that includes "Tamil"

http://www.thangamonline.com/Cinema%20Interviews/files/SavithaInterview.htm

GERSHOM said...

சவிதா விசிறி யா நீங்க? சரி தான் ஏன் தான் இவங்க எல்லாம் இப்பிடி தமிழ் தெரியாத மாதிரி சீன் போடுறாங்களோ ப்பா...

mcharlespravin said...

உண்மைதான்,புது நடிகைகளுக்கு,,,,,,,,,,,,,தெரியல,,,இதே போல் s n சுரேந்தர்,,,,இவர் குரலில் ,,மைக் மோகன் {அனைத்து படங்கள்},மற்றும் நம் முன்னணி நடிகர்கள் பலரின்,அறிமுக படங்கள் ,,நல்ல காலம் இப்போ அப்டி ஹீரோகளில் இருக்குறமாதிரி தெரியல,,,

எட்வின் said...

தங்கம் ஆன்லைன் வலையிலிருந்து சவிதாவின் நேர்காணல் நீக்கப்பட்டுள்ளது நண்பர்களே.

Post a Comment

Related Posts with Thumbnails