இந்த பதிவை இட காரணமான... பதிவர் ஜீவா அவர்களுக்கு முதலில் நன்றி
-----------------------------
நீரின்றி அமையாது உலகம் எனவும்; நீர் வாழ்க்கையின் அமிர்தம் எனவும்,(water is the elixir of life) எனவும் பள்ளிக்கூடத்தில் படித்த ஞாபகம்.
அமிர்தம் போன்ற அந்த நீரானது இன்று பல பகுதிகளில் கிடைக்கவே மிகக் கடினமாக இருக்கிறது.
நான் அறிந்த வரை...தண்ணீர் தட்டுப்பாடு குறித்து அதிகம் கேட்டிராத தமிழகத்தின் பல பகுதிகளிலும் கூட இன்று தண்ணீர் தட்டுப்பாடு குறித்து கேள்விப்பட நேரிடுகிறது.
நம்மில் பலர் அன்றாட வாழ்க்கையில் அறிந்தும் அறியாமலும் பல நேரங்களில் தண்ணீரை வீணாக்குகிறோம்.
wwf-world wide fund for nature எனப்படும் அமைப்பானது இயற்கையை இன்றைய உலகமயமாக்கலில் இருந்தும்,வெப்பமாகுதலில் இருந்தும் பாதுகாக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கி இருக்கிறது. அதன் ஒரு பகுதியாக கடந்த மாதத்தில் பூமி நேரம்(Earth Hour) என்ற பெயரில் அந்த அமைப்பு உலகம் முழுவதும் விழிப்புணர்வை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
wwf அமைப்பு தண்ணீர் வீணாகுதலைக் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த 2007 ல் வெளியிட்ட 40 வினாடிகளே கொண்ட இந்த காணொளியில் சிறுகுழந்தை ஒன்று குழாயிலிருந்து வீணாகிக் கொண்டிருக்கும் தண்ணீரை நிறுத்த முயற்சிப்பது மனதை தொடும்படி உள்ளது.நீங்களும் கொஞ்சம் பாருங்களேன்.
ஒவ்வொரு வருடமும் மார்ச் 22 அன்று சர்வதேச தண்ணீர் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
தண்ணீரை தேவைக்கு மட்டும் உபயோகித்து, வீணாகாமல் பார்த்துக் கொள்வது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.
7 comments:
நல்லா இருக்கு,,,அழகான vedio
நீங்க சொல்றது ரொம்ப சரி...ஆனா யாரு கேக்கறாங்க ? தண்ணியை வீணாக்காதே அப்படின்னா நம்மளை மட்டமா, கஞ்சன் மாதிரி பாக்கறாங்க வீட்டுகார அம்மா...
நன்றி சார்லஸ், நெல்லை தமிழ், பொடியன்...
-----------------
நெல்லைக்கு விரைவில் வருகிறேன்.
------------------
சிறிதேனும் சமூக அக்கறை உள்ளவர்கள் இதை பின்பற்றினால் சரி தான்... மத்தவங்கள விடுங்க பொடியன்.
தம்பி எட்வினுக்கு மிக்க நன்றி, அடுத்த பதிவு ஓன்று உங்களுக்காக காத்துகொண்டிருக்கிறது, உங்கள் பனி தொடர வாழ்த்துக்கள்.
அன்புடன் ஜீவா
விழிப்புணர்வூட்டும் பதிவு.நன்றி.
விழிப்புணர்வூட்டும் பதிவு.நன்றி
நன்றி ஜீவா அண்ணன், பட்டாம்பூச்சி சகோதிரி,சின்னப்பையன் சார்.
Post a Comment