Comic sans எழுத்துருவானது எழுதப்படும் ஒரு சொல்லுக்கு அற்பமான, சிறுபிள்ளைத்தனமான, அவமரியாதை அளிப்பது போன்ற அர்த்ததை வெளிப்படுத்துவதாகவும்,எரிச்சலூட்டும் படி உள்ளது எனவும் பலர் ?? கருதுகிறார்களாம்!
இதனால் இதற்கு தடை விதிக்கும் முயற்சியில் சில அமைப்புகள் ஓரிரு வருடங்களாக செயல்பட்டு வருகின்றன.ப்ளாக்கரிலும் 'comic sans' எழுத்துரு வசதி இல்லாதது குறிப்பிடத்தக்கது.
1994 ல் Vincent Connare என்பவரால் Comic sans font வடிவமைக்கப்பட்டது.காமிக் புத்தகங்களில் எழுதப்படும் எழுத்துருக்களின் தாக்கத்தால் வழக்கமான Times New Roman font லிருந்து ஒரு மாற்றத்திற்காக Comic sans font ஐ அவர் உருவாக்கியதாக தெரிகிறது.
மைக்ரோசாஃப்ட் வின்டோஸிற்காக புதிய மென்பொருள் ஒன்றினை உருவாக்கும் முயற்சியில் வின்சென்ட் ஈடுபட்டிருந்த போது கணினி திரையில் தோன்றிய கார்ட்டூன் நாய் ஒன்றின் பேச்சு Times New Roman font ல் கணினி திரையின் கீழே செய்தியாக தோன்றியிருக்கிறது.
அதனை வேறு எழுத்துருவாக மாற்ற நினைத்தவர் இரு காமிக் புத்தகங்களின் எழுத்துருக்களை மையமாகக் கொண்டு ஒரு வாரத்திற்குள்ளாக comic sans ஐ உருவாக்கியிருக்கிறார்.
ஆரம்பத்தில் இந்த எழுத்துரு comic book என்ற பெயரில்அறியப்பட்டிருந்திருக்கிறது,அச்சொல் எழுத்துருவிற்கான சொல் போல் இல்லை என வின்சென்டிற்கு தோன்றியதால் comic sans என பெயர் மாற்றம் செய்திருக்கிறார்.
sans என்றால் sans-serif என்பதன் சுருக்கமாம். அதாவது comic sans எழுத்துருவின் எழுத்துக்கள் எதுவுமே (Capital 'I' ஐ தவிர) பிற எழுத்துருக்களைப் போன்ற சிறிய வரையை கொண்டிருப்பதில்லை(small features at the end of strokes)
sans என்றால் sans-serif என்பதன் சுருக்கமாம். அதாவது comic sans எழுத்துருவின் எழுத்துக்கள் எதுவுமே (Capital 'I' ஐ தவிர) பிற எழுத்துருக்களைப் போன்ற சிறிய வரையை கொண்டிருப்பதில்லை(small features at the end of strokes)
1994 ற்கு பின்னர் கணினிகள் வீடுகளிலும் நுழையவே அவரவர் ரசனைக்கேற்ப வித்தியாசமான பல எழுத்துருக்கள் சாதாரண மக்களின் மனதைக் கவர்ந்திருக்கின்றன.அவற்றில் comic sans முக்கிய இடம் வகிக்கிறது.குழந்தைகளையும் அதிகம் கவர்ந்திருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
நானும் பலமுறை comic sans எழுத்துருவையே உபயோகப்படுத்தியிருக்கின்றேன்.ரசிக்கும் படி தான் இருக்கிறது.இதன் மீதான தடைக்கு ஓரிரு வருடங்களாகவே ஆதரவு திரட்டப்பட்டு வருவதாக தெரிய வருகிறது.comic sans எழுத்துருவை பிடிக்காதவர்கள் உபயோகிக்காமல் இருக்கலாம்,மாறாக தடை விதிக்க வேண்டுமென பிரச்சாரம் செய்வது ஏனோ தெரியவில்லை.
நன்றி: யாஹூ
-------------------
2 comments:
//comic sans எழுத்துருவை பிடிக்காதவர்கள் உபயோகிக்காமல் இருக்கலாம்,மாறாக தடை விதிக்க வேண்டுமென பிரச்சாரம் செய்வது ஏனோ தெரியவில்லை.// nice words.
//comic sans எழுத்துருவை பிடிக்காதவர்கள் உபயோகிக்காமல் இருக்கலாம்,மாறாக தடை விதிக்க வேண்டுமென பிரச்சாரம் செய்வது ஏனோ தெரியவில்லை.//
Correct brother. Why to ban it?
Post a Comment