April 27, 2009

உலகை அச்சுறுத்தும் swine flu


(பதிவர் சுல்தான் அவர்களின் பதிவைத் தொடர்ந்து மேலும் சில தகவல்களுடன்)
swine flu எனப்படும் பன்றிக் காய்ச்சல் மேற்கத்திய நாடுகளை வெகுவாக கவலைக்குள்ளாக்கியிருக்கிறது

வட அமெரிக்க நாடுகளில் ஒன்றான மெக்சிகோவில் மட்டும் 150பேர் பலியாக காரணமாகியிருக்கும் இந்த பன்றிக் காய்ச்சல் தற்போது வேகமாக பிற நாடுகளுக்கும் பரவி வருகிறது.

பன்றிகளையே (swine) அதிகம் தாக்கியதால் பன்றிக் காய்ச்சல் என அறியப்படுகிறது.இந்த வகை காய்ச்சல் ஆரம்பத்தில் பன்றிகளில் இருந்து மனிதனுக்கு பரவியது என்றாலும் மெக்சிகோவில் தற்பொழுது பாதிக்கப்பட்ட எவரும் பன்றிகளுடன் நெருங்கி இருந்ததாகக் கண்டறியப்படவில்லை.

அமெரிக்கா,கனடா,இங்கிலாந்து, ஆகிய நாடுகளிலும் வேகமாக பரவி வருகிறது swine flu.

உலக சுகாதார அமைப்பு சர்வதேச அளவில் மருத்துவ நெருக்கடி நிலையை அமுல்படுத்தியுள்ளது.இந் நோய் பரவியுள்ள நாடுகளுக்கு பயணம் செய்யாமல் இருக்குமாறு இந்திய அரசாங்கம் இந்தியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

Swine flu வைக் குறித்து அனைவருக்கும் எழும் சில கேள்விகளும் பதில்களும்

ப்படி பரவுகிறது?

1.இந்த காய்ச்சல் H1N1 swine flu எனப்படும் வைரஸால் பரவுகிறது.
2.நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவரை விரைவாக தாக்குகிறது.
3.வைரஸ் தாக்கப்பட்ட ஒருவர் இருமும் போதோ தும்மும் போதோ வைரஸ் காற்றில் கலப்பதால் அருகில் இருப்பவருக்கு வருவதற்கான வாய்ப்பு உள்ளது.

வைரஸ் பரவுதலை தடுக்க முடியுமா?

1.வைரஸ் எதிர்ப்பு மருந்துகளை எடுத்துக் கொள்வதன் மூலம் 70-90% வரை வைரஸ் பரவுவதலை தடுக்க முடியும்
2.இருமும் போதோ தும்மும் போதோ கை அல்லது கைக்குட்டையால் வாயை மறைப்பதன் மூலம் வைரஸ் பரவுவதை தடுக்க முடியும்.
3.சுத்தமாக இருப்பதன் மூலம் தடுக்கலாம்.

வைரஸ் தாக்குவதால் என்ன பாதிப்பு?

1.மூன்று நாள்களுக்கும் அதிகமான காய்ச்சல்
2.தொடர்ச்சியான இருமல்
3.உடல் சோர்வு
4.வாந்தி,வயிற்றுப் போக்கு
5.கட்டுப்படுத்த முடியாத காய்ச்சல் மரணத்தையும் ஏற்படுத்தலாம்.

Swine flu விற்கு சிகிச்சை உள்ளதா ?

1.ஓரிரு நாள்களுக்கு அதிகமாக காய்ச்சல் இருப்பின் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்
2.வைரஸ் எதிர்ப்பு மருந்துகள் மூலம் தக்க சிகிச்சை பெறுதல்
3.வைரஸ் தாக்குதலுக்குள்ளான நபர் 48 மணி நேரத்திற்குள் வைரஸ் எதிர்ப்பு மருந்துகளை பெறுவாரானால் காய்ச்சலின் தீவிரத்தைக் குறைக்கலாம்.

swine flu வினால் பாதிக்கப்பட்டிருக்கும் மெக்சிகோவிற்கு பயணம் செய்ய வேண்டாமென சில நாடுகள் வேண்டுகோள் விடுத்துள்ளன. ஏற்கெனவே நலிந்திருக்கும் பொருளாதாரம் swine flu வினால் மேலும் வீழ்ச்சியடைய வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது.

நன்றி யாஹூ

9 comments:

Anonymous said...

தகவலுக்கு நன்றி.

Unknown said...

swine fluவிலிருந்து தடுத்துக் கொள்வது எப்படி? எவ்வாறு பரவுகிறது? என்னென்ன symptoms போன்ற முக்கியமான தகவல்களைத் தந்துள்ளீர்கள். மிக அவசியமான பதிவு. மிக்க நன்றி எட்வின்

Suresh said...

மிக நல்ல பதிவு, நானும் சொல்லாம் என்று இருந்தேன் உங்க பதிவு பார்த்தவுடன் ஆனந்தம்..

நல்ல விஷியத்தை பகிர்ந்து கொண்டதற்க்கு நன்றி

Subash said...

ம்ம்
நல்ல வேளை
ாநன் மெக்சிக்கோவிற்கு போகமுதல் சொன்னீர்கள்.
நன்றிங்க

எட்வின் said...

நன்றி அனானி,திரு.சுல்தான்,சுரேஷ்,சுபாஷ்

பதிவு எழுதிப்போடுங்க சுரேஷ். உங்கள் வலைப்பூவை வழக்கமாகப் படிக்கிறவர்களுக்கு உபயோகமாக இருக்கலாம் இல்லையா!

Suresh said...

உங்கள் பதிவு யூத்பூல் விகடனில் வாழ்த்துகள்

எட்வின் said...

தகவலுக்கு டேங்க்ஸ் தல.

//Suresh said...
உங்கள் பதிவு யூத்பூல் விகடனில் வாழ்த்துகள்//

ARV Loshan said...

useful info.. :)

உங்கள் பதிவு யூத்பூல் விகடனில் வாழ்த்துகள்//

:) :)

எட்வின் said...

நன்றிங்க லோஷன்... :)

Post a Comment

Related Posts with Thumbnails