இது ஒரு மீள்பதிவு. இன்று (24.04) சச்சினின் பிறந்த நாளாதலால் அவரின் சாதனைகள் சிலவற்றை இந்த பதிவில் திரும்பிப்பார்க்கலாம்.முந்தைய பதிவு இங்கே.சச்சினுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

பள்ளிப்பருவத்திலே அச்ரேக்கர் ஒரு ரூபாய் நாணயத்தை விக்கெட் மீது வைத்து விடுவாராம்,சச்சினின் விக்கெட்டை எடுப்பவர்களுக்கு அந்த நாணயம் வழங்கப்படும் என்று பந்தயம் வைத்திருக்கிறார்.இல்லையென்றால் அந்த நாணயம் சச்சினுக்கு சொந்தம். அப்படியாக 13 நாணயங்களை பெற்ற சச்சின் இன்றும் கூட பொக்கிஷமாக வைத்திருக்கிறார்.
1988 களில் சச்சினின் ஆட்டம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் இருந்தது.1988 ல் அவர் ஆடிய அனைத்து போட்டிகளிலும் சதமடித்தார்.அந்த வருடத்தில்

14 வயதுடன் தனது முதல் தரக் கிரிக்கெட்டை சச்சின் தொடங்கிய போது திரு.சுனில்கவாஸ்கர் அவர்கள் இரண்டு மென்மையான கால் கவசத்தை (Pad)அளித்திருக்கிறார்.அது தான் நான் நன்றாக விளையாட தனக்கு மிகுந்த ஊக்கமளித்ததாக 20 ஆண்டுகளுக்கு பின்னர் உலக வரலாற்றில் அதிக சதமாகிய கவாஸ்கரின் 34 சதத்தை முறியடித்த போது கூறி கவாஸ்கருக்கு மரியாதை செலுத்தியிருக்கிறார்.
1988 டிசம்பர் 11ல் 15 வயது 232 நாட்களாகிய சச்சின் தனது முதல் தர கிரிக்கெட்டின் முதல் ஆட்டத்திலேயே மும்பைக்காக குஜராத்திற்கு எதிராக ஆட்டமிழக்காமல் சதமடித்து மிக இள வயதிலேயே சதமடித்தவர் என்ற புகழைப் பெற்றார்.

என்றாலும் சச்சினின் சர்வதேச அறிமுக ஆட்டங்களிலும் ஆரம்ப காலங்களிலும் சொல்லும்படியான பங்களிப்பு இல்லை.16 வயதில் 15 நவம்பர்,1989

அதே ஆண்டு டிசம்பர் 18 ல் சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் தனது கால் தடம் பதித்தார்.முதல் ஆட்டத்தில் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார்.டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளின் அறிமுக ஆட்டங்களில் சச்சினின் விக்கெட்டைச் சாய்த்தவர் வக்கார் யூனிஸ்.வக்காருக்கும் அது அறிமுக ஆட்டங்கள் தான் என்பது சுவாரஸ்யம்.
17 ஆவது வயதில் 1990 ஆம் ஆண்டு தனது முதல் டெஸ்ட் சதத்தை சச்சின் இங்கிலாந்து அணிக்கு எதிராக ஓல்ட் ட்ரஃபோர்டில் எடுத்தார்.அதன் பின்னர்

1991-1992 ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது சிட்னியில்(ஷேன் வார்னின் முதல் போட்டி) சச்சின் ஆட்டமிழக்காமல் குவித்த 148 ஓட்டங்கள் மற்றும் பெர்த் வாக்கா மைதானத்தில் அடித்த சதமும் தான் இன்று வரை அவரடித்த சதங்களில் முதலிடம் பெறுகிறது.ஏனென்றால் பெர்த் மைதான ஆடுதளம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு மிக சாதகமானது.
அன்றே ஆஸ்திரேலியாவின் மெர்வ் ஹூஜ்ஸ் ஆலன் பார்டரிடம் இந்த பொடியன் உன்னை விட அதிக ஓட்டங்கள் குவிப்பான் என்று கூறியிருக்கிறார்.

உலகின் தலை சிறந்த மட்டையாளரும் ஆஸ்திரேலியருமான சர். டான் பிராட்மேனே சச்சினின் ஆட்டம் அவரது ஆட்டத்தைப் போன்றே இருப்பதாக சச்சினைப் புகழ்ந்திருக்கிறார். பிராட்மேனின் மனைவியாகிய ஜெசியும் அதை ஒப்புக் கொண்டுள்ளார்.
ஆஸ்திரேலியர் ஷேன் வார்ன் தனது புத்தகத்தில் உலகின் தலை சிறந்த வீரர்களின் பட்டியலில் சச்சினுக்கு முதலிடம் கொடுத்து கவுரவித்துள்ளார்.
1994 செப்டம்பர் 9 ல் ஒரு நாள் சர்வதேச போட்டியின் முதல் சதத்தை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இலங்கையில் நிறைவு செய்தார்.
1996 உலகக் கோப்பைப் போட்டிகளில் அதிக ஓட்டங்கள்(523) குவித்த வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.கொல்கொத்தா ஈடன் கார்டன் அரை இறுதியில் சச்சின் வெளியேறியதும் ஒருவர் பின் ஒருவர் பரிதாபமாக ஆட்டமிழந்த நேரத்தில் ரசிகர்கள் கலவரத்தில் ஈடுபட இந்தியா இலங்கையுடன் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டது.65 ரன்கள் குவித்தார் சச்சின் அரையிறுதியில்.
1998 ல் ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம்

1999ல் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதுகில் வலியையும் வைத்துக் கொண்டு அவர் குவித்த 136 ஓட்டங்கள் இன்றும் மறக்கவியலாதது. அப்போட்டியில் கடைசி நான்கு விக்கெட்டுகள் ஒற்றை இலக்க ஓட்டங்களில் வெளியேற இந்தியா தோல்வியடைந்தது.அந்த தோல்விக்காக இன்றும் வருத்தப்படுகிறார் சச்சின்.
1999 உலகக் கோப்பைப் போட்டிகளின் நடுவே தந்தையை இழந்த சச்சின் அவருக்கு இறுதி மரியாதை செலுத்தும் வண்ணம் ஜிம்பாப்வே அணியுடனான ஒரு போட்டியை விட்டுக் கொடுத்து இந்தியா வர வேண்டியிருந்தது.பின்னர் மீண்டும் அணியில் திரும்பி கென்யாவிற்கு எதிராக 141* குவித்தார்.அந்த சதத்தை தனது தந்தைக்கு அர்ப்பணிப்பதாகக் கூறி கண்ணீர் மல்கினார்.கிரிக்கெட் மீது அத்தனை ஈடுபாடு உள்ளவர் தான் சச்சின்.

2005, டிசம்பர் 10 அன்று திரு.கவாஸ்கரின் 34 டெஸ்ட் சதங்களை இலங்கைக்கு எதிராக முறியடித்தார்.
2007-2008 ல் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான காமன்வெல்த் பேங்க் தொடரில் தொடர்ச்சியாக இரு சதங்கள் அடித்து தொடர் வெற்றிக்கு வழி செய்தார்.
2008 அக்டோபர்17ல் உலகில் மேற்கு இந்திய தீவு ஆட்டக்காரர் லாராவின் சாதனையை முறியடித்து அதிக டெஸ்ட் ஓட்டங்கள் 12773 (ஏப்ரல் 7, 2009 ன் படி) எடுத்தவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் .டெஸ்ட் போட்டிகளின் வரலாற்றில் இதுவரை மொத்தம் 42சதங்கள் எடுத்து முதலிடத்திலுள்ளார். அதிக பட்ச ஓட்டம் 248*.
ஒரு நாள் போட்டிகளில் 43 சதங்களுடன் 16684 ஓட்டங்கள் எடுத்துள்ளார் (மார்ச் 8, 2009 ன் படி). அதிகபட்ச ஓட்டம் 186*. ஆனால் சச்சின் ஆடிய முதல் 78 ஒரு நாள் ஆட்டங்களில் சதமேதும் எடுக்கவில்லை என்பது சற்றே விசித்திரம் தான்.
23 முறை சச்சின் 90-99 ஓட்ட இடைவெளியில் வெளியேறி சதங்களை கோட்டை விட்டுமிருக்கிறார்.
ஒருநாள் மற்றும் டெஸ்ட் ஆட்டங்களில் கேட்ச் எடுப்பதிலும் சதமடித்துள்ளார்,ஒரு நாள் போட்டிகளில் 129, டெஸ்ட் போட்டிகளில் 102.மிகச்சிறந்த பந்துபிடிப்பாளருமாவார் சச்சின்.
இத்தனை சாதனைகளின் மத்தியில் சோதனைகள் இல்லாமல் இல்லை.
இருமுறை அணித்தலைவர் பொறுப்பு ஏற்றும் அவர் தலைமையின் கீழ் சொல்லத் தகுந்த வெற்றிகளை இந்திய அணி குவிக்கவில்லை.
2001 போர்ட் எலிசபெத்தில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான

2003 ல் முழங்கை வலியினால் (Tennis elbow) அவதிப்பட்டு 10 மாதங்கள் சர்வதேசப் போட்டிகளில் பங்குபெற முடியாமலிருந்தார்.
2004 ல் பாகிஸ்தானுடனான டெஸ்ட் தொடரில் 194 ஓட்டங்கள் குவித்து ஆடிக் கொண்டிருந்த போது அணித்தலைவர் திராவிட் ஆட்டத்தை டிக்ளேர் செய்வதாக அறிவித்து சச்சினின் இரட்டை சதத்திற்கு வேட்டு வைத்தார்.அது இன்றும் தனிப்பட்ட முறையில் வருத்தப்படுத்துவதாக சச்சினே கூறியுள்ளார்.
2006ல் தோள்பட்டை பிரச்சினைக்கு அறுவை சிகிச்சையும் செய்து கொண்டுள்ளார்.போட்டிகளில் பங்கேற்காமலிருந்த அந்த சில மாதங்கள் "கபில் தேவ், அந்நாள் பயிற்சியாளர் உள்ளிட்ட பலரும் சச்சின் ஓய்வு பெற வேண்டுமென வலியுறுத்தினார்கள்".அந்த நாட்களை மறக்க நினைக்கிறேன் என்று வருத்தப்படுகிறார் சச்சின் இப்போது.
விருதுகள்

1997-98 ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது
1997-விஸ்டனின் மிகச் சிறந்த வீரர் விருது
1999-பத்மஸ்ரீ விருது
2008-பத்மவிபூஷன் விருது
சச்சினின் ஆட்டத்தில் எனக்கு பிடித்தது
-அவரின் அற்புதமான Straight drive (சுனில் கவாஸ்கரே வியக்கிறார் சச்சினின் Straight drive ற்கு), Cover drive மற்றும் Leg flick.
-1998 சார்ஜாவில் ஆஸிக்கு எதிரான தொடர்ச்சியான இரு சதங்கள்.
-2003 உலகக் கோப்பைப் போட்டியில் பாகிஸ்தானின் சோயிப் அக்தர் பந்து வீச்சில் ஆஃப் சைடில் அவரடித்த சிக்சர்.
-2003 உலகக் கோப்பை போட்டியில் இங்கிலாந்தின் ஆன்டி கேடிக்கின் பந்தை மைதானத்திற்கு வெளியே விரட்டிய சிக்சர்.அதோடு கேடிக்கின் வார்த்தை விளையாட்டுகளுக்கு முற்றுப் புள்ளியும் வைத்தார்.
-2007-08 ல் காமன்வெல்த் பேங்க் தொடரில் அடித்த இரு சதங்கள்.
-1998 சார்ஜாவில் ஆஸிக்கு எதிரான தொடர்ச்சியான இரு சதங்கள்.
-2003 உலகக் கோப்பைப் போட்டியில் பாகிஸ்தானின் சோயிப் அக்தர் பந்து வீச்சில் ஆஃப் சைடில் அவரடித்த சிக்சர்.
-2003 உலகக் கோப்பை போட்டியில் இங்கிலாந்தின் ஆன்டி கேடிக்கின் பந்தை மைதானத்திற்கு வெளியே விரட்டிய சிக்சர்.அதோடு கேடிக்கின் வார்த்தை விளையாட்டுகளுக்கு முற்றுப் புள்ளியும் வைத்தார்.
-2007-08 ல் காமன்வெல்த் பேங்க் தொடரில் அடித்த இரு சதங்கள்.
------------------------------
சச்சினுக்கு அஞ்சலி என்ற மனைவியும்,அர்ஜுன்
என்ற மகனும் சாரா என்ற மகளும் உள்ளனர்.இந்தியாவிற்கு மேலும் புகழ் சேர்க்க சச்சினுக்கு வாழ்த்துக்கள்.

-------------------
(ஆனாலும் 20-20 ஆட்டங்களுக்கு உடலை மிகவும் வருத்த வேண்டி இருக்கிறது, இளைஞர்கள் தான் 20-20 ஆட்டத்திற்கு சரி என 2007 ல் முடிவெடுத்து விலகியிருந்தவர் ஐ.பி.எல் ல் ஆட என்ன காரணம் என்பது தான் புரியவில்லை. 20-20 ஆட்டங்களில் அவரது இரட்டை நிலையும் ஏற்றுக்கொள்ளும் படி இல்லை)
நன்றி மற்றும் தகவல் ஆதாரம்,
6 comments:
Hi.
Thank you very much for sending those photos.
I added those photos in my photo blog.
And that post was published in Tamilish.
Great.
That post is my 250th post in that blog
That sounds really great.Congratulations on your 250th post brother.
Its all in the game :)
என்னடா இது தமிழ்-தமிழன் நு பேர் வச்சுகிட்டு இங்கிலீஷ்ல பேசிக்கிறாங்க ரெண்டு பேர் :)
நன்றி தலைவரே.
That is our spirit
//என்னடா இது தமிழ்-தமிழன் நு பேர் வச்சுகிட்டு இங்கிலீஷ்ல பேசிக்கிறாங்க ரெண்டு பேர் :)
நன்றி தலைவரே.
//20-20 ஆட்டங்களில் அவரது இரட்டை நிலையும் ஏற்றுக்கொள்ளும் படி இல்லை)//
அது இரட்டை நிலை கிடையாது தல..
ஐ.பி.எல் சும்மா ஜாலிக்கு பழைய நண்பர்களைப் பார்த்து சின்னப் பசங்கலுடன் விளையாடிவிட்டு வேண்டும்போது திரும்பி வீட்டுக்கு வந்துவிட்டு .......
அது ஒரு விடுமுறை கொண்டாட்டம்..
கில்கிறிஸ்ட், ஷேன் வார்ன் போன்றவர்கள் எல்லாம் வருவார்கள்
....................
ஆனால் தேசிய அணிக்காக ஆடுவது என்பது வேறு. அதற்கான கஷ்டம் வேறு........
//கில்கிறிஸ்ட், ஷேன் வார்ன் போன்றவர்கள் எல்லாம் வருவார்கள்//
இவங்க எல்லாம் ஓய்வு பெற்ற வீரர்கள். சச்சின் அப்படி இல்லையே!! இந்திய அணிக்கு அவர் இன்னும் பங்காற்ற வேண்டுமல்லவா?
அப்படியென்றால் ஐ.பி.எல் போட்டிகள் அவருக்கு ஒரு சுமை தானே மருத்துவர் அய்யா.
என்னமோ போங்க! காயமடையாமல் இருந்தால் அதுவே சந்தோஷம்.
//2007-2008 ல் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான காமன்வெல்த் பேங்க் தொடரில் தொடர்ச்சியாக இரு சதங்கள் அடித்து தொடர் வெற்றிக்கு வழி செய்தார்.
//
இரு சதங்கள் அல்ல. ஒரு போட்டியில் 91 ரன்கள். நல்ல கட்டுரை நன்றி. "தல" சச்சின் எப்பவுமே "தல"தான் :)
Post a Comment