April 12, 2009

ஆவேச பிரச்சாரங்களின் மத்தியில் ஒரு அமைதியான பிரச்சாரம்

15 ஆவது பாராளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தில் எந்த கட்சியைச் சார்ந்த தலைவராகட்டும்,போட்டியிடும் வேட்பாளராகட்டும் பிற கட்சியினரை அல்லது அவர்களது கொள்கைகளை குறை சொல்லாத மேடைகளே இல்லை.

அதோடு பெரும்பாலானோர் தனி மனித தாக்குதல் தான் செய்கிறார்கள் இது குறித்து எனது முந்தைய பதிவிலேயே குறிப்பிட்டிருந்தேன்.மக்களுக்கு நன்மை பயக்கும் நலத்திட்டங்களை முன்வைத்து பிரச்சாரம் செய்பவர்கள் வெகு சிலரே.

இவர்கள் அனைவரிலும் இருந்து முற்றிலும் மாறுபட்ட விதத்தில் பிரச்சாரம் செய்யும் ஒருவரும் இருக்கத்தான் செய்கிறார் என்றால் ஆச்சரியமாகத் தானிருக்கிறது.

பிரியங்கா தான் அவர்.மிக மிக எளிமையாக வருகிறார்.எவரையும் சாடுவதில்லை.தொகுதியின் மக்களிடம் அன்போடு அளவலாடுகிறார்.மக்களோடு மக்களாக ஒன்று சேர்ந்து கருத்துக்கள் பரிமாறுகிறார்.

இவரது அன்னை சோனியா கூட இத்தனை சாதுவாக பேசியதில்லை என்றே நினைக்கிறேன்.

அமேதியிலும்,ரேபரேலியிலும் 11.4.09 அன்று அவர் பேசியது இங்கே காணொளியாக.



அவரது பேச்சின் சாராம்சங்கள் சில

1.உங்களுக்கு நன்மை செய்பவர் எவர் என்பதை அறிந்து அவர் மேல் நம்பிக்கை இருந்தால் வாக்களியுங்கள்

2.இந்த தேசம் எந்த அரசியல்வாதிகளுடையதும் அல்ல இது உங்கள் தேசம்

3.உங்கள் தொகுதியை முன்னேற்ற பாதையில் இட்டு செல்பவர் யார் என்பதை உணர்ந்து வாக்களியுங்கள்.

அரசியல்வாதியாக இல்லாதிருப்பதும் அமேதியில் அவரின் அமைதியான பேச்சிற்கு காரணமாகி இருக்கலாம்.இவரைப் போன்றவர்கள் தீவிர அரசியலுக்கு வர வேண்டும்.வாழ்த்துக்கள் பிரியங்கா மேடம்.

4 comments:

கிறிச்சான் said...

எல்லா அரசியல் வாதிகளும் இவர் போல இருந்தால் இந்த நாடு எங்கோயோ போயிடும்...

Anonymous said...

நண்பர் எட்வின் அவர்களே,
உங்கள் பெயர்தான் எனக்கும். எனக்கு 196_ இல்,எனக்கு தெரியாமல் வைத்து விட்டார்கள். அதற்கு நான் வருந்தவில்லை. இப்பொழுது வருந்தும் நிலைய்க்கு தள்ளப்பட்டு உள்ளேன்.
உங்களக்கு blog எழுத மட்டும் தமிழ் தேவைப்படும். ஆனால் நீங்கள் தமிழுக்கும், இலக்கியத்துக்கும், நீங்கள் வெகுதூரம்! வெட்கப்படவேண்டிய நிலை.
கோடிக்கணக்கான பேர் உலக வலைத்தளத்தில் தங்கள் பதிவை, சொல்லுகின்றார்கள். ஆனாலும் தங்களை போல் தன் தாய்மொழியை தூரம் என்று கூறியதில்லை எனபது என் தாழ்மையான கருத்து. நீங்கள் ஏதாவது எழுதுங்கள். பொதுவாக கூறுகின்றேன், ஒரு குரங்கிடம் ( சரி, சிங்கம்) ஒரு பென்சிலை கொடுத்தால் ஏதாவது கிறுக்கும். அதையும் பார்ப்பதற்கு என்னை போல் ஆட்கள் உண்டு. எழுதுபவர்கள் எல்லோரும் புத்திசாலிகள் அல்ல... அதை மெனக்கட்டு, காலவிரயம் செய்து படிப்பவர்கள் எல்லாம் முட்டாள்கள் அல்ல. தமிழிலில் தாதுபுஷ்டி விளம்பரம், போண்டா- வடை பொட்டல பேப்பர், பாரதி, கார்கி, டிக்கின்ஸ்,சுஜாதா,ஜெயகாந்தன், லாசரா,..( ஏதோ குறிப்பட வேண்டி வந்த பெயர்கள்.) எல்லாவற்றையும் படிக்கும் ஜாதியை சேர்ந்தவர்கள் பலர் என்னை போல் உண்டு. உங்களை எல்லாம் குறை கூறவில்லை. தமிழ் வளர வேண்டும். ஆகவே அந்த தூரத்தை குறைதுக்கொளுங்கள்.
நன்றி.
-இன்னொரு தமிழ் எட்வின்..
( உங்களால் you tube இல் இந்த பெயரில் பதிவு செய்ய இயலாது. ரோம்ப காலம் ஆகிவிட்டது.)

எட்வின் said...

தங்களின் பகிர்விற்கு நன்றி... எனது சிறுகுறிப்பு ரொம்ப தூரம் என்று குறிப்பிட்டாலும் தமிழில் என்னால் முடிந்த வரை பிழையில்லாமல் எழுதி வருகிறேன் என்றே கருதுகிறேன்.பிற எழுத்தாளர்களைப் போன்ற எழுத்து வளம் மிக்கவன் அல்ல என்பதை பிறர் அறியவே அந்த சொல்லை உபயோகப்படுத்தினேன்.

எனது தமிழ் Blog கணக்கை துவங்கும் முன்னே youtube ல் கணக்கு துவங்கி விட்டேன். எனவே இனி கணக்கை துவங்கவியலாது.என்றாலும் எனது தாய்மண்ணை எனது youtube profile ல் நான் குறிப்பிட தயங்கியதில்லை.

தூரத்தை குறைத்து விடுகிறேன் அவ்வளவு தானே...

Anonymous said...

நண்பர் எட்வின் அவர்களுக்கு,
வாழ்த்துக்கள்.
'ஆவேச...' படித்தேன், பார்த்தேன்.
அமைதியாக ஒருவர் பேசிக்கொண்டு, ஆவேசத்தை மனதில் கொண்டு, தமிழர்களுக்கு இப்படியும் தீங்கு (துரோகம் இல்லை, அது வேறொருவர் செய்வது) செய்ய முடியும் என்பதுக்கு இது ஒரு நல்ல உதாரணம். நீண்டநாள் திமுக அனுதாபியான நானும் என்னை சார்ந்த நண்பர்களும் வெட்கி வேதனைப்படுகிறோம். நல்லவேளையாக நான் தற்போது தமிழ் மண்ணில் இல்லை என்பதால் ஒரு ஆறுதல். திமுகவை பகிஷ்கரிக்க வேண்டிய தர்மசங்கடமான நிலை வரவில்லை. யார் செய்தாலும் தவறு, தவறுதான்.
ஆகவே அவர்கள் அமைதியாக பேசுவது, அவர்கள் உடல்நலத்திற்கு நல்லதே தவிர, நமக்கு அல்ல என்பது என் தாழ்மையான கருத்து.
தூரத்தை குறைத்தது கண்டு மகிழ்ந்தேன். தூரம் என்ற வார்த்தைதான் கொஞ்சம் உறுத்தியது. மற்றபடி வேறு ஒன்றும் இல்லை.
நன்றி.
- அன்புடன்,
உங்கள் பெயரான்

Post a Comment

Related Posts with Thumbnails