April 08, 2009

நினைவுகள் அழிவதில்லை (அயல் நாட்டு வாழ்க்கை)















ரந்து விரிந்த பல தூர
பசுமைப் புல்வெளியும்

ரவசப்படுத்தும் பல நூறு
பறவைகளின் பாடலும்

தில் அளிக்கவே-எதிரொலியால்
தில் அளிக்கவே படைக்கப்பட்ட னை உயர மலைகளும்

ருவம் மாறினாலும்
பொய்க்காத தென்றலும்

கலிலே பகைவனானாலும்
மாலையில் மயக்கும் மஞ்சள் வெயிலும்

பிரிந்த எவரையோ தேடும் நோக்கில்
துள்ளிப் பாயும் சிறு நீரோட்டமும்

பிரிந்த எதனையோ நினைத்து
பிரமையான என்னை அரவணைத்தன அன்று.

திலுக்கு நான் அவற்றை
அரவணைக்க நினைக்கையில்

ல்லாத ஒன்றை
ன் தேடுகிறாய் என
.சி அறையின் சுவர்கள்
ளனமாய் பார்ப்பதாய் உணர்கிறேன்-இன்று

நினைவுகள் அழிவதில்லையாம்-அவை
நெஞ்சில் அழியாதிருப்பதால் தான் நினைவுகளாகின்றனவோ!


நினைவுகளால் மட்டுமே
நகர்த்துகிறேன் வாழ்க்கையை
நிர்ப்பந்தத்தால்-அயல்நாட்டில்
------------------------------------
youthful விகடனில் படிக்க இங்கே க்ளிக்கவும்

8 comments:

கிறிச்சான் said...

கண்டிப்பா நினைவுகள் அழிவதே இல்லை...நம்மை போன்ற அயல்நாட்டில் இருப்பவர்களுக்கு நினைவுகள் மட்டுமே சுகம்.என் செய்வது?

சாஷீ said...

நம் எல்லோருடைய {அயல் நாடுகளில் } மனங்களை பிரதிபலிக்கிறது,,சில நேரம் இழுத்து மூச்சு விடும்போது நெஞ்சு வலிக்குமே,,அது மாதிரி ,,,,

ஹேமா said...

எட்வின்,பிறந்த தேசத்தின் பிரிவு என்பது...சொல்லிப் புரியமுடியாதது.உணர்வோடு வலிக்கும் வரியெடுத்து எழுதியிருக்கிறீர்கள்.

எட்வின் said...

நன்றி கெர்ஷோம்,சார்லஸ்
------------------------
நன்றி ஹேமா, உங்கள் எழுத்துக்களையும்,கவிதைகளையும் விரும்பிப் படிப்பது உண்டு. வாழ்த்துக்கள்.

ச.பிரேம்குமார் said...

//நினைவுகளால் மட்டுமே
நகர்த்துகிறேன் வாழ்க்கையை
நிர்ப்பந்தத்தால்-அயல்நாட்டில்//

நானும் இதே நிலையில் தான் இருக்கிறேன்... :(

Anonymous said...

நிதர்சனம். தங்களின் பதிவு அருமை.
எனக்கு 'சிவாஜி' படத்தின் 'பல்லேலக்கா' பாடலை கேட்டால், மனம் துயரமடையும். அது ஏனோ தெரியவில்லை.
- தங்கள் பெயரான்,
இங்கிலாந்திலிருந்து.

அது ஒரு கனாக் காலம் said...

நல்ல கவிதை, இங்கு ( துபாயில் ) அவ்வளவாக miss செய்யவில்லை என்றாலும், ... உண்மையாக நிறைய இழக்கிறோம் ,... நினைவுகள் , நினைவுகள்,,... அது மட்டுமே

எட்வின் said...

நன்றி திரு.பிரேம்,என் பேருடையார்,திரு.சுந்தர்

Post a Comment

Related Posts with Thumbnails