November 09, 2008

ஆஸ்திரேலியாவிடம் அடி வாங்கிய மகளிர் கிரிக்கெட் அணி

இங்கே ஆஸ்திரேலிய ஆண்கள் கிரிக்கெட் அணி நம்மவர்களிடம் அடி வாங்கிக் கொண்டிருக்கையில், இந்திய மகளிர் அணி ஆஸ்திரேலிய மகளிர் அணியிடம் அடி வாங்கிக் கட்டுகிறது.
இந்திய மகளிர் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து ஐந்து போட்டிகள் போட்டிகள் கொண்ட ஒரு நாள் போட்டித் தொடரில் விளையாடி வந்தது. இதில் ஐந்து போட்டிகளிலும் படுதோல்வியடைந்து தாயகம் திரும்பவிருக்கிறது.

இங்கிலாந்திற்கு எதிராக செப்டெம்பரில் 4-0 என தோல்வி அடைந்த பின்னர் அணித்தலைவி மித்தாலியை மாற்றி கோஸ்வாமியை ஆஸ்திரேலிய தொடருக்கு அணித்தலைவியாக நியமித்த பின்னரும் தோல்விகள் தொடரத் தான் செய்கிறது.

இத்தனைக்கும் அணித்தலைவி மித்தாலி ராஜ் பேட்டிங் உலக தர வரிசையில் 2 ஆவது இடமும்.பந்து வீச்சில் கோஸ்வாமி முதல் இடமும் பெற்றுள்ளார்கள்.

இந்த ஆண்டு ஆரம்பத்தில் நடைபெற்ற ஆசிய கோப்பையை வென்ற பின்னர் இது வரை நடைபெற்றுள்ள 9 போட்டிகளில் ஒன்றில் கூட வெற்றியை ஈட்டவில்லை இந்திய மகளிர் அணி. இது சில ஆண்டுகளுக்கு முன்னர் ஆண்கள் அணி இருந்த நிலைமையை ஞாபகப் படுத்துகின்றது...அதாவது உள் நாட்டில் நடைபெறும் போட்டிகளில் வெளுத்துக் கட்டுவார்கள் ஆனால் வெளி நாடுகளில் திணறுவார்கள்.

இந்த நிலையில் மார்ச் 2009ல் நடைபெறவிருக்கும் உலகக் கோப்பைக்கு முன்னர் இந்த வருடமும் அடுத்த வருடமும் சர்வதேச போட்டிகள் ஏதும் இந்திய மகளிர் அணிக்கு இல்லை. இதனால் இந்திய அணியின் உலகக் கோப்பைப் போட்டிகளுக்கான ஆயத்தங்களும் உலகக் கோப்பைப் போட்டிகளில் இந்தியாவின் ஆட்டமும் கேள்விக்குறியாக உள்ளது.

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails