அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் சார்பில் போட்டியிடும் ஜான் மெக்கெயின் ஜெயித்தால் துணை அதிபராக செயல்படவிருக்கும் அலாஸ்கா கவர்னர் சாரா பாலின் தான் 2008 தேர்தல் பிரச்சாரத்தின் போது பெரும்பாலோரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறார்.அவர் எது செய்தாலும் செய்திகளாக வந்து விடுகின்றன.அமெரிக்காவில் மட்டுமல்லாது அமெரிக்காவை உற்று கவனிக்கும் அனைத்து நாடுகளும் இவரைத்தான் உன்னிப்பாக கவனிக்கின்றன (பெண் என்றால் இதெல்லாம் சகஜம் தான் என நீங்கள் மனதில் நினைப்பது புரிகிறது!!!)
நமது அண்டை நாட்டு அதிபர் ஆசிப் அலி சர்தாரி அமெரிக்காவிற்கு ஒரு அரசாங்க விஷயமாக போன இடத்தில் செனட்டர் சாரா பாலினைப் பார்த்து நீங்க ரொம்பவே அழகாக இருக்கிறீர்கள்( you are gorgeous) என போட்டுத் தாக்கி விட்டு வந்து இருக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள் இந்த அம்மையார் எத்தனை பிரபலம் என்று.(பின்னர் ஊரில் வந்து பழமைவாதிகளிடமிருந்து வாங்கியும் கட்டியிருக்கிறார்)
தேர்தல் பிரச்சாரத்தின் போது சாரா பாலின் பயன்படுத்தும் உடைகளுக்காக மட்டும் 1,50,000 டாலர் செலவு ஆகியிருப்பதாக அவருடைய குடியரசு கட்சிக் குழுவினரே அறிக்கை கொடுத்திருக்கின்றனர்.தேர்தலுக்கு பின்னர் அந்த உடைகள் தொண்டு நிறுவனங்களுக்குக் கொடுக்கப்படுமென்று வேறு கூறிக்கொண்டிருக்கிறார்கள்.
அவர் அணியும் உடைகள் மட்டுமல்லாது பேச்சின் போது அவரின் கண் சிமிட்டல்களும் கூட செய்திகளாகியிருக்கின்றன (பார்க்க வீடியோ)
மக்களை(ஆண் மக்களை!!!)ஈர்த்த சாரா பாலினின் இந்த மயக்கும் பிரச்சாரம் வெற்றியைப் பெற்றுத் தருமா என்பது நாளை தெரிந்து விடும்.
உண்மையில் பார்த்தால்
குடியரசு கட்சியினரை விட தேர்தலுக்காக அதிகம் செலவு செய்வது ஒபாமாவின் ஜனநாயக கட்சியினர் தான் என தெரிய வந்துள்ளது.
அலாஸ்காவின் செனட்டர் சாரா பாலின் பிரச்சாரத்தின் சில புகைப்படங்கள் இங்கே...
குடியரசு கட்சி அதிபர் வேட்பாளர் மெக்கெயினுடன்
குடும்பத்தினருடன்
ஒஹாயோவில்
பென்சில்வேனியாவில்
இந்த புகைப்படம் கிறிஸ்தவர்கள் மத்தியில் பாலினைக் குறித்து தவறான அபிப்ராயம் கொள்ள வைத்தது
2 comments:
Good Collections and Details about PALIN.She is really beautiful!!
நன்றி ராஜ் அவர்களே.
குடியரசு கட்சியின் தோல்விக்கு இந்த அம்மாவும் ஒரு காரணம் எனக் கருதப்படுகிறது.
இதைத் தான் ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே என சொல்வதோ?
எனினும் 2012 ல் இவருக்கு அதிபராக வரும் வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.அது வரை நிலைத்து நிற்பாரா என தெரியவில்லை.
Post a Comment