November 17, 2008

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இந்தியாவிடம் பிச்சை எடுக்கிறதா?

இந்திய கிரிக்கெட் வாரியம் இங்கிலாந்து அணியிடம் டிசம்பர் 11 ஆம் தியதி ஆரம்பிக்கவிருக்கும் முதலாவது டெஸ்ட் போட்டியை ஒரு நாள் தள்ளி வைக்குமாறு கேட்டுக் கொண்டிருக்கிறது என்று இங்கிலாந்து அணியின் செய்தி தொடர்பாளர் ஆன்ட்ரூ வால்போல் பி.டி.ஐ கு அளித்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.காரணம் என்னவென்றால் டிசம்பர் 10 அன்று நடக்கவிருக்கும் ஐ.பி.எல் சாம்பியன்ஸ் லீக்கின் இறுதிப் போட்டியில் தோனி விளையாடி விட்டு ஒரு நாள் ஓய்வு வேண்டுமென்பதால்.

சர்வதேச போட்டிகள் அனைத்தும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலால் இரு நாட்டு ஒப்புதலுடன் தீர்மானிக்கப்படுகின்றன.இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியம் இப்படி பிச்சை எடுப்பது ஏனோ தெரியவில்லை?

ஐ.பி.எல் போட்டிகள் இன்னும் ஆரம்பிக்கவே இல்லை அதன் முன்னதாகவே இறுதிப் போட்டியில் தோனி விளையாடுவதைப் பற்றி பேசுகிறார்கள் இவர்கள்.என்ன பந்தயம் இப்போதே முடிவு செய்யப்பட்டுவிட்டதா?(மேட்ச் ஃபிக்சிங்கா?) இல்லை சென்னை சூப்பர் கிங்ஸ் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் என்ற குருட்டு நம்பிக்கையா?

இல்லையென்றால் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இந்தியாவில் தான் இயங்குகிறதா?

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இதனை அனுமதிக்கும் பட்சத்தில் பிற நாடுகள் குறிப்பாக பாகிஸ்தான் கேள்விகள் கேட்கக் கூடும் ஏன் சாம்பியன்ஸ் டிராபியை மாற்றி வைத்தார்கள் என?

அப்படியே சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அனுமதித்து பிற நாடுகளும் கேள்வி கேட்கவில்லையென்றால் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலும் பிற கிரிக்கெட் வாரியங்களும் இந்திய கிரிக்கெட் நடத்தும் ஐ.பி.எல் இடும் பிச்சைக்காக கையேந்துகிறார்கள் இல்லையென்றால் இந்திய கிரிக்கெட் வாரிய வாசலில் தவமிருக்கிறார்கள் என்றே கருதப்படும்.

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails