நாட்டைக் காக்க வேண்டிய ராணுவ அதிகாரியே தீவிரவாதத்திற்குத் துணை போனால் என்ன தான் செய்வது? 2006-ல் மகாரஷ்டிரா, மலேகான் பகுதியில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு மற்றும் 2007ல் சம்ஜக்தா விரைவு ரயிலில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் தொடர்பு இருப்பதாக ராணுவ அதிகாரி லெப்டினன்ட் கர்னல்.புரோகித் குற்றம் சாட்டப்பட்டு இன்று 14 நாள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
நார்கோ அனலிசிஸ் என்ற சோதனையில் மலேகான் குண்டு வெடிப்பில் அவருடைய பங்கை அவரே ஒப்புக் கொண்டுமுள்ளார்.ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை பழிவாங்கும் நோக்கத்திலேயே தான் அவ்வாறு செயல்பட்டதாகவும் ஒப்புக் கொண்டுள்ளதாக தெரிகிறது.
என்றாலும் முழுவிசாரணை முடிந்த பின்னரே உறுதியாக எதையும் கூறவியலும் என்று தெரிகிறது.
ஒரு ராணுவ அதிகாரியே தீவிரவாத செயல்களில் ஈடுபட்டிருப்பது நிச்சயமாக ஒரு இந்திய பாமரனுக்கு நல்ல செய்தி அல்லவே. எங்கே போய் கொண்டிருக்கிறோம் நாம்?
No comments:
Post a Comment