November 16, 2008

கிரிக்கெட் மேனியா இந்தியாவில் ஒரு கோல்ஃப் சாம்பியன்

36 வயதாகும்ஜீவ் மில்கா சிங் சிங்கப்பூரில் நடைபெற்ற கோல்ஃப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்து இருக்கிறார்.இந்த போட்டியில் உலகதரவரிசையில் மூன்றாவது இருக்கும் ஃபில் மிக்கெல்சனும்,ஐந்தாவது இடத்திலிருக்கும் ஹாரிங்க்டனும் கலந்துகொண்டிருந்தார்கள்.ஆனால் மில்கா சிங் முதல் இருபது இடங்களில் கூட இல்லை என்பது ஆச்சரியத்திற்குரியது.

இதன் மூலம் அதிக அளவு பரிசுப்பணம் பெற்ற முதல் ஆசிய கோல்ஃப் வீரர் என்ற புகழையும் ஈட்டி உள்ளார்.இன்று மட்டும் 792,500 அமெரிக்க டாலர்கள் பரிசுப்பணமாகக் கிடைத்துள்ளது அவருக்கு.இந்த வருடத்தில் அவர் பெற்றிருக்கும் ஆறாவதும் மொத்த கோல்ஃப் வாழ்க்கையில் ஜீவ் மில்கா சிங் பெற்றிருக்கும் 16 ஆவது சர்வதேச சாம்பியன் பட்டமும் இதுவாகும்.

இதன் மூலம் ஆசியாவில் மிகச்சிறந்த கோல்ஃப் வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

இவர் ஒலிம்பிக் போட்டிகளில் ஓட்டப்பந்தயத்தில் பங்குபெற்ற திரு.மில்கா சிங்கின் புதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது.

2006 ல் பல வெற்றிகளைக் குவித்து பெருமை சேர்த்ததற்காக 2007 ல் பத்மஷ்ரீ விருது வழங்கி இந்திய அரசு இவரை கௌவரவப்படுத்தியுள்ளது.

கிரிக்கெட்டிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் நம் நாடு இந்தியாவில் ஜீவ் மில்கா சிங் போன்ற வீரர்களையும் பிற விளையாட்டு வீரர்களையும் அரசு இன்னும் ஊக்குவித்தால் அவர்கள் மேலும் பல வெற்றிகளை குவிக்கவியலும்.

டந்த வாரத்தில் தான் சைனா நேவால் பேட்மிண்டனில் ஜூனியர் உலகச் சாம்பியன் பட்டம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார்.அதன் முன் அக்டோபரில் தமிழர் விஸ்வநாதன் செஸ்ஸில் மூன்றாவது முறையாக உலகச் சாம்பியன் பட்டம் பெற்று இந்தியாவிற்கு சிறப்பை பெற்றுத் தந்தார்.அதன் சிலமாதங்கள் முன் பிந்த்ரா ஒலிம்பிக் துப்பாக்கிச் சுடுதலில் தங்கப்பதக்கம் பெற்றுத் தந்ததையும் எங்ஙனம் மறக்கவியலும்?

கிரிக்கெட் மற்றும் குழு போட்டிகளில் மட்டுமல்லாது தனிவீரர் போட்டிகளிலும் வெற்றிகள் பெற்றுவருவது இந்தியருக்கு மகிழ்ச்சியே!பெருமையே!

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails