(என்றாலும் இந்தியா தனது இரண்டாவது இன்னிங்சில் கவனமாக ஆட வேண்டிய அவசியமும் உள்ளது)இந்த ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெறவில்லையென்றாலும் சமன் செய்தால் கூட போதுமானது இந்த தொடரைக் கைப்பற்ற.அப்படி இந்தியா கைப்பற்றும் நிலையில் தரவரிசையில் 116 புள்ளிகள் பெற்றுள்ள தென் ஆப்பிரிக்க அணியை பின்னுக்கு தள்ளி இரண்டாவது இடத்திற்கு முன்னேற கூடும்.ஆஸ்திரேலியா அணியின் தரவரிசை புள்ளிகள் (138)இன்னும் சரியவும் வாய்ப்பு உள்ளது.

இந்த ஆட்டம் பல தரப்பில் இந்திய அணிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்திருக்கிறது.
1.சவுரவ் கங்குலியின் கடைசி ஆட்டம்.
2.தோனி முதல் முறையாக அணித்தலைவர் பொறுப்பை முழுமையாக ஏற்று ஆடுவது.
3.சச்சினின் 40 ஆவது டெஸ்ட் சதம்(இது வரை ஆஸ்திரேலியாவுடன் விளையாடிய அனைத்து டெஸ்ட் தொடர்களிலும் சதம் அடித்திருக்கிறார்)
4.ஹர்பஜனின் 300 ஆவது விக்கெட்.
5.அணியின் பெருஞ்சுவர் என கருதப்படும் ராகுல்திராவிட்டின் எதிர்காலம்?(மீண்டும் சொதப்பல்)
6.நம்மவர் தமிழர் முரளி விஜயின் சேர்க்கை.
7.டெஸ்ட் கிரிக்கெட்டின் மவுசு குறைவு( மைதானம் பெரும்பாலான சமயங்களில் வெறிச்சோடியே காணப்படுகிறது)
குறிப்பாக 24வயது தமிழக வீரர் விஜயின் சேர்க்கை புதிய சர்ச்சையை

முதல் தர ஆட்டங்களில் 20 போட்டிகளில் 52.96 சராசரியில் 1748 ரன்கள் அடித்திருக்கிறார். ரஞ்சி பந்தயங்களில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் இவருக்கு மூன்றாவது இடம்.நியூசிலாந்து 'A' அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 4 இன்னிங்சில் இருந்து 200 ரன்கள் எடுத்திருக்கிறார்.இதற்கு மேல் என்ன வேண்டும் அணியில் இடம் பிடிக்க?
முதல் இன்னிங்சில் சேவாக்குடன் இணைந்து(இவர் எடுத்தது 33) முதல் விக்கெட்டிற்கு 98 ரன்கள் எடுத்திருக்கிறார்.
முதல் இன்னிங்சில் சேவாக்குடன் இணைந்து(இவர் எடுத்தது 33) முதல் விக்கெட்டிற்கு 98 ரன்கள் எடுத்திருக்கிறார்.
இந்நிலையில் ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்சை ஆட தொடங்கியதுமே

சச்சின் மறுமுனையில் நின்று நகத்தைக் கடித்துக் கொண்டு அதிர்ச்சி கலந்த சந்தோஷத்தில்

2 comments:
மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 0/0 (86 ரன்கள் முன்னிலை. நான்காம் நாள் ஆட்டத்தில் இந்தியா மேலும் 300 ரன்கள் சேர்த்து 380 ரன்கள் டார்கேட்டுடன் ஆஸ்திரேலியா விடம் ஆட்டத்தை கொடுத்தல், ஆஸ்திரேலியாவுக்கும்- பாண்டிங்க்கும் சேர்த்து ஆப்பு.
80 களில் வெஸ்ட் இண்டீஸ் ஆதிக்கம் செலுத்தியது, தெடர்ந்து சீனியர் வீரர்கள் ரிடயர் ஆனதால் அதன் ஆதிக்கம் ஓய்ந்தது, அதுபோல் தற்போது ஆஸ்திரேலியாவின் சீனியர் வீரர்களின் ஓய்வால் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவின் கை ஓய்கிறது. ஆஸ்திரேலிய வீரர்களின் அடாவடிதனத்தால் மனம் வெறுத்து இருந்த நமக்கெல்லாம் இது சந்தோசத்தையே தருகிறது.
ஆமாம் நண்பரே.இதனால் ஜெஃப்ரி பாய்காட்டின் முகத்தில் மீண்டும் நம்மவர்கள் கரியைப் பூசியிருக்கிறார்கள்.பார்க்க எனது முந்தைய பதிவு http://thamizhanedwin.blogspot.com/2008/10/blog-post_30.html (என்ன பேச்சு பேசி விட்டார் அவர்).இந்தியா தொடரைக் கைப்பற்றும் என நம்புவோம்.
Post a Comment