காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவராகிய திருமதி.மார்கெரட் ஆல்வா அவர்கள் கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சியின் மேலிடம் தேர்தல் சீட்டிற்காக லஞ்சமாக பணம் வாங்குகிறது என்று ஒரு பேட்டியில் கர்நாடக காங்கிரஸை குற்றம் கொல்லியிருப்பது காங்கிரஸ் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படித்தியுள்ளது.
இவரது மகனுக்கு சீட் கிடைக்காத காரணத்தினால் தான் இவர் இப்படி ஒரு அபாண்டமான ஒரு பழியைச் சுமத்துவதாக பிற காங்கிரஸ் தலைவர்கள் சொன்னாலும் விஷயம் என்னமோ உண்மை போலத் தான் தெரிகிறது.கட்சியின் ஒரு உறுப்பினர் தன்னிடம் 40 லட்சம் கேட்கப்பட்டது எனவும், வேறொருவர் 80 லட்சம் கேட்கப்பட்டதாகவும் புகார் தெரிவித்துள்ளனர்.
கட்சியில் எவ்வளவு பெரிய தலைவரானாலும் சிறிய தலைவரானாலும் கட்சியைக் களங்கப்படுத்தும் விதம் வெளிப்படையாக கருத்து தெரிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் மேலும் திருமதி ஆல்வா அவர்கள் கட்சியின் கோட்பாட்டையும் மீறி விட்டார் எனவும் கர்நாடகத்தைச் சார்ந்த மற்றொரு மூத்த காங்கிரஸ் தலைவர் வீரப்பமொய்லி அவர்கள் இன்று ஒரு பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.
சோனியா காந்தி அவர்கள் திருமதி.ஆல்வாவின் பேட்டியைக் குறித்து தீவிர விசாரிக்க உத்தரவிட்டிருக்கிறார்.இதனிடையில் ஆல்வா அவர்கள் ராஜினாமா செய்யப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதெல்லாம் (காசு கொடுத்து சீட் வாங்குவது) உண்மைதான் என தலைவர்கள், தொண்டர்கள் உட்பட அனைவரும் அறிந்ததே. ஆனாலும் ஆல்வா அவர்கள் கட்சி மேலிடத்தில் புகார் செய்திருக்கலாம் முதலில்.அங்கு விஷயம் எடுபடவில்லையென்றால் பின்னர் வெளிப்படையாக அறிக்கையோ, பேட்டியோ அளித்திருக்கலாம். அந்த அம்மாவிற்கு மகனுக்கு சீட் கிடைக்கவில்லை என அதிக வருத்தம் போல,அது தான் இப்படி பேட்டியளித்து விட்டார் என்றே தோன்றுகிறது...
மேலும் இது காங்கிரஸின் குடும்ப அரசியல் விவகாரத்தில்(ராஜீவ்-ராகுல்,சுனில் தத்-பிரியாதத் போன்று) மேலும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.
அரசியல்ல இதெல்லாம் சகஜம் தானோ!?
No comments:
Post a Comment