November 10, 2008

தோனியின் பெருந்தன்மை

ஆஸ்திரேலியா அணியை மிக மிக அற்புதமான ஆட்டத்தால் இந்திய அணி வென்றிருக்கிறது.ஒரு மொத்த அணியாக அனைவரும் இணைந்து எந்த வித ஈகோவும் இல்லாமல் ஒருவரையொருவர் புரிந்து கொண்டு ஆடிய ஆட்டத்திற்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய விருதாகவே நான் பார்க்கிறேன்.

குறிப்பாக தோனியின் பெருந்தன்மை மிகவும் பாராட்டப் பட வேண்டிய ஒன்று.

காரணம் ஒன்று:தாதா கங்குலியை நான்காவது டெஸ்ட் ஆட்டத்தின் இறுதி நேரங்களில் அணித்தலைவராக இருக்கும் படி வேண்டிக் கொண்டது.

காரணம் இரண்டு:கும்ப்ளேவை பார்டர்-கவாஸ்கர் கோப்பையை பெறும்படியாக அழைத்தது.

இந்த தொடரில் இந்திய அணியின் அனைத்து வீரர்களும் பங்களித்திருப்பது தான் யாரும் ஏன் ஆஸ்திரேலியர்கள் கூட எதிர்பாராத ஒன்று.

முதல் போட்டியில் ஹர்பஜன்-சகீர் கான் சேர்ந்து எட்டாவது விக்கெட்டிற்கு எடுத்த 80 ஓட்டங்கள் இந்த தொடரையே இந்திய அணிக்கு தாரை வார்த்திருக்கிறது.

இந்த தொடர் முழுவதும் பல மறக்கவியலாத சாதனைகளும்,சம்பவங்களும் நடைபெற்றிருக்கின்றன.சகீர்-ஷர்மா இணையின் அபார பந்து வீச்சு,லாரா சாதனை சச்சினால் முறியடிப்பு,நாற்பதாவது சதம் மற்றும் நூறாவது கேட்ச்.கங்குலியின் சதம்,7000 ரன்கள் மற்றும் ஓய்வு.இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட் எடுத்திருக்கும் கும்ப்ளேயின் ஓய்வு.ஆடிய முதல் ஆட்டத்திலேயே அமித் மிஷ்ராவின் ஐந்து விக்கெட்,சேவாக்கின் அற்புத அரை சதங்கள் மற்றும் அனைத்து ஆட்டங்களிலும் அருமையான தொடக்கம்.ஹர்பஜனின் 300-ஆவது விக்கெட்.

தோனியின் முக்கியத்துவம் வாய்ந்த அரை சதங்கள் குறிப்பாக இந்தியா வெற்றி பெற்ற 2(மொஹாலி மற்றும் நாக்பூர்) போட்டிகளிலும் அவர் எடுத்த மூன்று அரை சதங்கள்.கம்பீரின் மொஹாலி சதம், டெல்லி இரட்டை சதம், வாட்சனுடனான மோதல். லக்ஸ்மனின் இரட்டை சதம்.ஹர்பஜன் நாக்பூரில் எடுத்த ஹெய்டன் விக்கெட்,மற்றும் அதிரடி அரைசதம்(இம் முக்கியத்துவம் வாய்ந்த அரை சதம் இல்லையென்றால் இந்தியா இந்த தொடரை வென்றிருக்கவியலாது ), தமிழர் விஜயின் அறிமுகம்,இவர் ரன் அவுட் முறையில் எடுத்த ஹெய்டன் மற்றும் ஹசியின் விக்கெட்கள்.திராவிட் மட்டும் எதிர்பார்த்த அளவுக்கு சரியாக ஆடவில்லை, ஒரே ஒரு அரைசதம் தான் இந்த தொடரில்.


அதே சமயத்தில் முதல் டெஸ்ட் போட்டியின் நடுவே வேகப்பந்து வீச்சாளர் சகீர் கான் (சொல்லும் படியான மட்டையாளராகவும் மாறியிருக்கிறார்) கூறியபடி இத்தனை மெதுவான, ஆக்ரோஷமில்லாத ஆட்டம் ஆடும் ஒரு ஆஸ்திரேலிய அணியை இதுவரை நானும் பார்த்ததில்லை.

குறிப்பாக நான்காவது மற்றும் இறுதி டெஸ்ட் ஆட்டத்தின் நான்காவது நாளில் இந்தியா 166 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்களை இழந்து தடுமாறிக் கொண்டிருந்த நேரத்தில் நன்றாக பந்து வீசிக்கொண்டிருந்த வாட்சனை பந்து வீச அழைக்காமல் பகுதி நேர பந்து வீச்சாளர் ஹசியையும், ஒய்ட்டையும் பந்து வீசச் செய்தது ஒரு தவறான அணுகுமுறை என இயன் சாப்பல் உள்ளிட்ட முன்னாள் ஆஸ்திரேலிய வீரர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.அதன் பின்னர் தான் தோனியும் ஹர்பஜனும் இணைந்து 108 ரன்கள் குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்கள்.

முதன்முறையாக ஒரு வெற்றி கூட ஈட்டவியலாமல்(பயிற்சி ஆட்டங்களில் கூட வெற்றியில்லை) தாயகம் திரும்பவிருக்கிறது ஆஸ்திரேலிய அணி.

இதன் மூலம் இந்திய அணி டெஸ்ட்தரவரிசையில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியிருக்கிறது.

4 comments:

பரிசல்காரன் said...

நல்ல தொகுப்பு நண்பரே.

நன்றி!

எட்வின் said...

நன்றி பரிசல்காரர் அவர்களே...

ராமய்யா... said...

Good Post..

Actually i tried to post about DADA..

Really we miss DADA and Jumbo..

எட்வின் said...

எழுதுங்கள் அன்பரே...தமிழிஷில் அனேகர் பதித்திருக்கிறார்கள் என்றே நினைக்கிறேன்,அவர்கள் போடாத சுட்டாத கருத்துக்களைக் தொட்டால் நலமாயிருக்கும்.வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

Post a Comment

Related Posts with Thumbnails