தீவிரவாதிகளின் அடக்குமுறைக்கு ஆளாகியிருப்பது மும்பைவாசிகளுக்கு இது ஒன்றும் புதிதல்ல என்றபோதிலும் முன்பு எப்போதுமில்லாத அளவிற்கு திகிலும் நடுக்கமும் வேதனையும் கொண்டிருக்கிறார்கள் என்பதே நிதர்சனமான உண்மை.மும்பையிலிருந்து நண்பர்கள் இதனையே தெரிவிக்கிறார்கள்.
மும்பைவாசிகள் மட்டுமின்றி பிற மாநிலத்தவரும்,வெளிநாட்டவரும் திகிலால் நிறைந்திருக்கிறார்கள்(இங்கிலாந்து கிரிக்கெட் அணி போட்டிகளை ரத்து செய்து விட்டு தாயகமும் திரும்பவிருக்கிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்).தொலைக்காட்சி வாயிலாகவும் வானொலி வாயிலாகவும் மற்றும் பத்திரிக்கை வாயிலாகவும் அறிந்து கொண்டிருக்கிற நமக்கே சொல்லவொண்ணா பயத்தை அளிக்கையில் அங்கிருப்பவர்கள் என்ன மனநிலையிலிருப்பார்கள் என்பது மிகவும் வேதனையளிக்கும் விஷயம்.
இந்த வருடத்தில் மட்டும் நிகழ்ந்த தீவிரவாதத் தாக்குதல்கள் வேறு எந்த வருடமுமில்லாத அளவிற்கு எல்லை மீறிப் போய்கொண்டிருக்கிறது.ஒவ்வொரு தாக்குதலின் போதும் பிரதமரும் பிற அமைச்சர்களும் தக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என வாக்குறுதி அளிக்கிறார்கள்.அவை வெறும் வாக்குறுதியே ஒழிய செயல்களால் மாற்றப்படாதது தான் இத்தகைய தாக்குதல்கள் மீண்டும் மீண்டும் நிகழக் காரணம் என கருதுகிறேன்.
இந்தியாவின் வாணிப மையத்தையே குறி வைத்து அதில் வெற்றியும் கண்டிருக்கும் இக் கயவர்களின் எண்ணம் வருங்காலங்களில் இன்னும் மேலோங்கியே சென்றாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை.அதனை ஒடுக்க வேண்டுமென்றால் அரசு,காவல்,நீதி,கட்சிகள்,மாநிலங்கள் உள்ளிட்ட அனைத்து இந்திய அமைப்புகளும்,இந்தியர் ஒவ்வொருவரும் ஒன்றுபட வேண்டியது மிக அவசியம்.
அமெரிக்காவும் இங்கிலாந்தும் 9/11, 7/7 என்ற தியதிகளில் இதைப்போன்றே;இதனை விட அதிகமாகவே தாக்குதலுக்குள்ளான போதும் அதன் பின்னர் அத்தகைய தாக்குதல் அங்கு நிகழவில்லையே ஏன்? 9/11,7/7ன் பின்னர் அந்நாட்டு அரசும் மக்களும் ஓரணியில் நின்றார்கள்;தாக்குதல்களை தடுத்தார்கள்.இங்கோ திரும்பிய பக்கமெல்லாம் தீவிரவாதிகளின் சதி.காரணம் செயலிழந்த நமது உளவுத்துறையும்;காவல்துறைகளுமே.
மேலும் பிரச்சினை என்று வரும் போது ஒரு கட்சி மற்றொரு கட்சியை குறைகூருவதும்,சாதிச்சண்டையால் தன் சக மனிதனை அடித்துக் கொள்(ல்)வதும்.அண்டை மாநிலத்தவனை அடித்து விரட்டுவதும்,அயலானுக்கு நீர் வழங்க மறுப்பதுமான விஷயங்களில் வீரர்களாகிக் கொண்டிருக்கிறோம்.
விஷமிகளாய் இனியும் இந்தியர் ஒருவருக்கொருவர் வீம்பு காட்டிக்கொள்வார்களென்றால்;ஒற்றுமையாய்,சகோதரர்களாய் விட்டுக்கொடுத்து வாழ பழகவில்லையென்றால் இந்தியன் ஒவ்வொருவனும் தன் உயிரை தீவிரவாதி என்னும் அரக்கனிடம் அர்ப்பணிக்கும் நாள் வெகு தூரத்திலில்லை.
நாம் பிளவுபட்டு நின்றதாலேயே சுதந்திரத்திற்கு முன்னர் ஆங்கிலேயர்கள் அடிமைத்தனத்திற்கு கீழ்ப்பட்டோம்.இனியும் பிளவுபட்டு நிற்போமேயென்றால் தீவிரவாத அரக்கர்களின் அடிமைத்தனத்திற்கு அடிபணியத்தான் போகிறோம் என்பதில் ஐயமில்லை.
7 comments:
மிக சரியாக சொன்னீர்கள் ! வேற்றுமையில் ஒற்றுமை என்று வாய் சவடால் விட்டது போதும்.இனியாவது ஒன்று படுவோம் நாம்.
இந்த நெருக்கடியான நிலையை நம் நாட்டினர் ஒன்று கூடி ஒற்றுமையாக வாழ உதவி செய்யும் ஒரு வாய்ப்பாக எடுத்துக் கொள்வோம்.
வாழ்த்துக்கள்
தரணி மற்றும் max அவர்களே தங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.நல்லதே நடக்கும் என நம்புவோம்
மக அருமையாக சொன்னீர்கள்
உங்கள் கருத்து மிக்க சரியானது ...ஏன் இன்னும் இப்படி இருக்கிறார்கள் என்று தெரியவில்லை .......மோடி சொல்லுகிறார் காங்கிரஸ் அரசு சரி இல்லை என்று ...இன்னும் ஒருவரை ஒருவர் பழி சொல்லிக்கொண்டு இருக்கிறோம் ...இதை இனி எப்படி தடுப்பது என்பதை பற்றி யோசிக்காமல் ................ சும்மா இப்படி பேசிக்கொண்டு இருந்தால் சரி அல்ல .....குண்டு வெடிப்பு ஒன்றும் புதிதல்ல மும்பை வாசிகளுக்கு ஆனால் இது அதும் தண்டி ...பல குண்டு வெடிப்பு நடந்து விட்டது என்ன முடிவு எடுத்தார்கள் ............ சாவது அப்பாவி மக்களும் ,போலீஸ் ,ராணுவ வீரர்கள் மட்டும் தான் ....வீண் பழி பேசுபவர்கள் (அரசியல்வாதிகள் ) வந்து மாலை போடுவது புகைப்படம் எடுப்பது இதை வைத்து எப்படி அரசியல் செய்வதும் தான் இவர்கள் வேலை .....இனி நாம் இந்தியன் என்ற உணர்வுடன் ஒற்றுமையையை கடைபிடித்தால் யாரும் நம்மை அசைக்க முடியாது ........இறந்து போன மக்களுக்கும் ,போலீஸ் மற்றும் ராணுவ வீரர்களுக்கும் V.N.குளம் மக்கள் சார்பில் என் அஞ்சலியை சமர்பிக்கிறேன் ...........வாழ்க இந்தியன் வளர்க நம் ஒற்றுமை ...
திரு.பாபு மற்றும் நசரேயன் அவர்களே தங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.பாபு அவர்கள் கூறியபடி இதோ மீண்டும் தங்கள் அரசியல் புத்தியை காண்பிக்க தொடங்கி விட்டார்கள் இந்த கேடுகெட்டவர்கள்.இந்தியராக ஒரு முடிவெடுக்க வேண்டும்,இவர்களின் கபட நாடகங்களுக்கு தேர்தலில் தக்க பதிலளிக்க வேண்டும்.என்றாலும் மெத்த படித்தவர்கள் எத்தனை பேர் வாக்களிக்கிறார்கள் என்பதும் கேள்விக்குறியே!
For we brought nothing into this world, and it is certain we can carry nothing OUT
1 TIMOTHY 6:7
BUT WE MUST PRAY 4 THOSE WHO R SUFER
Post a Comment