மும்பையில் 50 மணி நேரமாகியும் மோதல் இன்னும் முழுமையாக நிறைவு பெறாத நிலையில் பொது மக்களும்,அரசியல்வாதிகளும் தொழிலதிபர்களும் தொலைக்காட்சி வழியும் இணையத்தின் வழியாகவும் தங்கள் கருத்துக்களை முன் வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த நிலையில் மும்பையின் ராஜாவான ராஜ்தாக்கரே இன்னும் மௌனம் சாதிப்பது ஏனோ தெரியவில்லை.பிற மாநிலத்தவனை குறிப்பாக வட மாநிலத்தவர்களை வசைபாடும் இவருக்கு இன்னும் கருத்து கூற சமயம் வரவில்லை போலும்.
மகாராஷ்டிராவில் பிற மாநிலத்தவருக்கு வேலைவாய்ப்பை மறுக்கும் (குறிப்பாக இரயில்வேதுறையிலும் புதிய தொழில்துறைகளிலும்) இவர் நிச்சயமாக இன்று பிற மாநிலங்களைச் சார்ந்த கமாண்டோக்கள் தங்கள் உயிரையும் பணயம் வைத்துப் போராடிக் கொண்டிருப்பதைத் தொலைக்காட்சிகளில் கண்டிருக்கலாம்.பிற மாநிலத்தவர் ஆனபடியால் அந்த கமாண்டோக்களை வேண்டாமென்றிருக்கலாமே இன்று.ஏன் கூறவில்லை? இவரைப்போன்ற கீழ்த்தரமான அரசியல்வாதிகளுக்கு ஆதரவளிக்கும் மக்களைத் தான் குறை கூற வேண்டியுள்ளது.
தீவிரவாதிகளுக்கு எதிரான போராட்டத்தில் கேரள மாநிலத்தைச் சார்ந்த மேஜர்.உன்னிகிருஷ்ணன் அவர்கள் தன் இன்னுயிரை ஈந்திருக்கிறார்.வேறு சில கமாண்டோக்களும் காயமடைந்திருக்கிறார்கள்.இவர்கள் தான் நம் நாட்டைக் காக்கின்ற உன்னதர்களேயன்றி நாற்காலி அரசியல் நடத்தும் அரசியல்வாதிகளில்லை என ஒவ்வொரு இந்தியனும் குறிப்பாக மராத்தியர்களும் புரிந்து கொள்ள வேண்டுதல் மிக அவசியம்.
வேதனையிலிருக்கும் குடும்பங்களுக்காக பிரார்த்திக்கிறேன்.
வாழ்க பாரதம்.
16 comments:
ராஜ்தாக்கரே போன்ற இந்துதத்துவ மந்தைகளை செருப்பால் அடித்து துரத்துங்கள் அவர்களால் இந்தியாவுக்கு எவ்வித பயனும் இல்லை
பால் தாக்கரே,ராஜ் தாக்கரேக்களுக்கு இனிமேலாவது புத்தி வேலை செய்யுமென நம்புவோம்.
சரியான பதிவு. மக்களுக்கு புத்தி வரவேண்டும்
திரு.பிரசாந்த்,திரு.நடராஜன் மற்றும் இக்பால் அவர்களே தங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி;இவர்கள் இனியும் புரிந்து நடக்கவில்லையென்றால் பாதிக்கப்படப்போவது சாமானியன் தான்.
சம்பங்கள் நடந்த இடத்திற்கு வந்து மீட்புப் பணிகளை பாதிக்க விரும்பவில்லை, பத்திரிக்கைகளில் அறிக்கை வெளியிட்டு கவனத்தை திசை திருப்ப விரும்பவில்லை என்று கூறினால் என்ன சொல்வீர்கள்?
முன்னால் போனாலும் (மோடியைப் சம்பவ இடத்திற்கு சென்றது போல) கடிக்கிறீர்கள், பின்னால் போனாலும் (தாக்ரே மாதிரி இருந்தாலும்) உதைக்கிறீர்கள்.
தங்களுடைய சுய நலத்திற்க்காக மும்பையில் கலவரத்தை உருவாக்கி
காவல்/உளவு துறையின் அனைத்தையும் திசை திருப்பியத்தின் மூலம்
நடந்த சம்பவங்களை முன்னரே கண்டுபிடிக்காமல் போனதற்கு
தாக்கரே கும்பல்களும் காரணம்
Direct this question to one Mr. Shivraj Patil, home minister of India.
தமிழன் எட்வின் இது போன்ற இக்கட்டான நேரங்களில் கூடவா உங்களது குதர்க்கதனமான கேள்விகளை எழுப்பிவீர்கள்.
//முன்னால் போனாலும் (மோடியைப் சம்பவ இடத்திற்கு சென்றது போல) கடிக்கிறீர்கள், பின்னால் போனாலும் (தாக்ரே மாதிரி இருந்தாலும்) உதைக்கிறீர்கள்.//
அவனவன் வேலையைமட்டும் சரியாகப்பார்க்கட்டும் என்றுதான் சொல்கிறோம். மோடியைப்போல் முன்னால் போனாலும் இவர்களால் உபயோகமில்லை, டாக்கரே போல் வீட்டில் உட்கார்ந்து டிவி பார்த்தாலும் உபயோகமில்லை. இவர்களுடைய குறி மனித வாழ்க்கையை மேன்மைபடுத்துவது அல்ல, மற்றவர் ரத்தத்தில் குளிர்காய்வது. உ.பி. பிகார் காரன் உள்ளே வந்தால் மும்பை எரியும் என்று சவுடால் விட்ட இவர்கள் இப்பொழுது பாகிஸ்தானியர் உள்ளே வந்த பொழுது இவர்களுக்கு அடுப்பினில் வேலை வந்துவிட்டதோ என்று தான் கேள்வி?
கருத்துக்களை முன் வைத்த இந்தியன்,ஸ்மைல்,ராஜாராமன்,ஆ இதழ்கள் ஆகியோரை வரவேற்கிறேன்.
//இவர்களுடைய குறி மனித வாழ்க்கையை மேன்மைபடுத்துவது அல்ல, மற்றவர் ரத்தத்தில் குளிர்காய்வது. உ.பி. பிகார் காரன் உள்ளே வந்தால் மும்பை எரியும் என்று சவுடால் விட்ட இவர்கள் இப்பொழுது பாகிஸ்தானியர் உள்ளே வந்த பொழுது இவர்களுக்கு அடுப்பினில் வேலை வந்துவிட்டதோ என்று தான் கேள்வி?
// வழி மொழிகிறேன். இந்தியன் மற்றும் ராஜாராமன் அவர்களுக்கு எனது பதிலும் இது தான்.
அன்புள்ள அர்னோல்ட் எட்வின்
உங்களுடையது நியாயமான கோபமாக இருக்கலாம். ஆனால், நெருக்கடியான இந்த தருணத்தில் இந்தியருக்குள் வேற்றுமை பாராட்ட வேண்டாம். நம்மனைவருக்கும் ஒரே பொது எதிரி இந்த தீவிரவாதம். இதை எப்படி சமாளிப்பது என்பது பற்றி மட்டும் யோசிப்பது நல்லது.
நன்றி மேக்ஸ் அவர்களே.ஒன்றுபடுவதை குறித்து எனது முந்தைய பதிவிலேயே கூறியிருக்கிறேன்.ராஜின் நிலை என்னவென்பதைத் தெரிந்து கொள்ள ஆவலாயிருக்கிறேன்.அவ்வளவு தான்.
ராஜ் தாக்ரேயின் ஆதரவாளர்கள் அனைவரும் சிந்திக்கவேண்டிய விஷயம் ...இனியாவது இந்த சப்பாத்தி பசங்களுக்கு அறிவு வருகிறதா என்று பார்ப்போம்..
சூப்பரோ சூப்பர்
அந்த பன்னாடை எங்கேயாவது பாவ் பாஜி சாப்பிட்டு விட்டு, கஞ்சா அடித்து விட்டு, குப்புற படுத்திருப்பான்...அவன் போதை தெளிந்து எந்திரிக்க இன்னும் அஞ்சி நாளாகும்...
அவன் அறிக்கைக்கு இன்னும் அஞ்சி நாள் வெய்ட் பண்ணுங்க அர்னால்ட். இப்பிடி அவசரப்பட்டா எப்பிடி?
இவனையெல்லாம் என்கவுன்டர்ல போட்டா ரொம்ப நல்லாருக்கும்!
திரு.சுரேஷ்,திரு.ஜேக்கி மற்றும் அதுசரி ஆகியோரின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.அவர்களாக பார்த்து திருந்தவில்லையென்றால் மக்களாவது வருகின்ற தேர்தலில் பாடம் புகட்ட வேண்டும்.
Post a Comment