November 23, 2008

இங்கிலாந்திற்கு எமனான டக்வர்த்-லூயிஸ்!

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையே நடைபெற்று வரும் ஒருநாள் போட்டித் தொடரில் இன்று இங்கிலாந்து மீண்டும் இந்தியாவிடம் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது(இதனை ஒரு வெற்றி என என்னால் கருத இயலவில்லை)இதன் மூலம் இந்திய அணி 4-0 என இந்த தொடரையும் கைப்பற்றியுள்ளது.அதோடு அணித்தலைவராக கெவின் பீட்டர்சனின் தெற்கு ஆசிய நாடுகளின் முதல் சுற்றுப்பயணமே தோல்வியில் ஆரம்பித்துள்ளது.

இன்று மழையினால் பலமுறை தடைபட்டு 28 ஓவர்கள் குறைக்கப்பட்ட ஆட்டத்தில் இந்தியா 166 ஓட்டங்கள் எடுத்தது பதிலுக்கு இங்கிலாந்து 178 ஓட்டங்கள் எடுத்தது.இந்தியாவை விட இங்கிலாந்து 12 ஓட்டங்கள் அதிகமே எடுத்திருந்தது. அப்புறம் எப்படி இந்தியா வெற்றியடைந்தது என்பதை சர்வதேச கவுன்சிலடமும்,டக்வர்த்-லூயிசினிடமும் தான் கேட்க வேண்டும்.

இந்த தொடரின் மூன்றாவது ஆட்டத்திலும் இந்திய அணியை விட இங்கிலாந்து அணி(மொத்த ஓட்டங்களைப் பார்க்கையில்)அதிக ஓட்டங்களையே பெற்றிருந்தது.என்றாலும் அந்த போட்டியிலும் தோல்வியடைந்ததாகவே அறிவிக்கப்பட்டது.

டக்வர்த்-லூயிஸ் கணக்கு வழக்கு கிரிக்கெட் விமர்சகர்களிடேயே பல கேள்விகளை ஏற்படுத்தியுள்ளது.அஜய் ஜடேஜா உள்ளிட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சிலரும் ஏமாற்றம் தெரிவித்திருக்கிறார்கள்.

டக்வர்த்-லூயிஸ் முறை கிரிக்கெட்டின் சுவாரஸ்யத்தை மேலும் குறைப்பதாகவே கருதப்படுகிறது.

டக்வர்த்-லூயிஸ் முறை குறித்து விரிவாக இங்கே தெரிந்துகொள்ளலாம்.

2 comments:

புருனோ Bruno said...

http://is.gd/8GRm பார்க்கவும்
அந்த பக்கம் திறக்கவில்லையென்றால்
http://tinypaste.com/7516a பார்க்கலாம்

எட்வின் said...

தகவலுக்கு நன்றி நண்பரே.

Post a Comment

Related Posts with Thumbnails