விக்கெட்டிற்கு கீழே இருக்கும் மைக்கின் மூலம் எவரும் கேட்க முடியும் அவர்கள் கூறும் f*** என்ற வார்த்தையை.இதர அணி வீரர்களைக் கீழ்த்தரமாக,கேவலமாக திட்டுவதும்(sledging) அவர்களுக்கு கை வந்த கலை.
இருப்பினும் அவர்கள் நாட்டினர் அனைவரையும் குற்றம் சொல்லிவிடவும் முடியாது, ஆஸ்திரேலியர் இணைந்து ஆஸ்திரேலியரின் புகழ் சொல்லும் "AUSTRALIA" என்ற வீரச்சரித/ இதிகாசத் திரைப்படத்தை (an epic movie)உருவாக்கியிருக்கிறார்கள்.
ஆஸ்கார் விருது பெற்ற நிக்கோல் மேரி கிட்மேன் Nicole Mary Kidman (பிறந்தது அமெரிக்காவில்,ஆனால் ஆஸ்திரேலியர்) மற்றும் Hugh Michael Jackman (ஆஸ்திரேலியர்) நடித்துள்ளார்கள். Baz Luhrmann என்ற ஆஸ்திரேலியரால் இயக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது உலகப்போரின் போது குண்டுவீசப்பட்ட டார்வின் பகுதியைக் கதைக்களமாகக் கொண்டுள்ளது இந்த திரைப்படம்.சாரா அஸ்லெய் (Sarah Ashley) என்ற ஒரு ஆங்கிலேயப் பெண்மணியின் கவனிப்பிலிருக்கும் பிராணிகள் மந்தையை,அவருடன் உள்ள மந்தை மேய்க்கும் (இவருடன் காதலிலும் விழுகிறார் sarah)ஆஸ்திரேலியர் ஒருவர் எவ்விதம் குண்டு தாக்குதலிலிருந்து பாதுகாப்பான வேறொரு இடத்திற்கு கொண்டு செல்கிறார் என்பது தான் கதை.
இத்திரைப்படம் ஆஸ்திரேலிய-அமெரிக்க உறவைக் குறிப்பிட்டுச் சொல்லும்படியாகவும் உள்ளது.
அதோடு கருப்பு இனத்தைச் சார்ந்த பழங்குடியினரை (12 வயது ஆஸ்திரேலிய பழங்குடி கருப்புச் சிறுவன் Brandon walters) நடித்திருக்கிறான்) எவ்விதம் புறக்கணிக்கிறார்கள் என்பதையும் அலசியிருக்கிறார்கள்
நவம்பர் 26 அன்று வெளியிடப்பட போவதாக வெளியீட்டாளர்களான ஃபாக்ஸ் (20th Century Fox) நிறுவனம் தெரிவித்துள்ளது.
திரைப்படத்தின் முன்னோட்டம் இங்கே youtube வீடியோவாக. கீழே ஆஸ்திரேலியாவின் அருமையான சில புகைப்படங்களையும் இணைத்துள்ளேன்.
Yatchs anchored in the outskirts of the city. Sydney, New South Wales
2 comments:
Fixe!
இந்த மாதம் 16 ஆம் தேதி வெளியிடுவதாக இருந்தது 26 ஆம் தேதிக்கு மாற்றி வைக்கப்பட்டுள்ளதாக வெளியீட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.அதுவும் மாறலாம்...!பார்க்க http://en.wikipedia.org/wiki/Australia_(2008_film)
Post a Comment